http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[ 95 Issues ]
[ 1159 Articles ]
Home     About US     Facebook     Font Problems    
Issue No. 87
 
இதழ் 87
மார்ச் 16 - ஏப்ரல் 15, 2012

தலையங்கம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது எப்போது?

கலைக்கோவன் பக்கம்
சுந்தரர் வழியில் . . . .
திரும்பிப்பார்க்கிறோம் - 34

கலையும் ஆய்வும்
கல்வெட்டுப் பாடல்கள்
UDIRAPPATTI

இலக்கியச் சுவை
சப்தரிஷி மண்டல வழிபாடு
சப்தரிஷி மண்டல வழிபாடு

நம் சங்கத் தமிழர்கள் வானவியல் கலையில் சிறந்து விளங்கினர். இவ்வானவியல் துறை பல நிலைகளிலும் நல்ல வளர்ச்சியுடையதாய் விளங்கியது. ஆதிரை நன்னாள், கார்த்திகை விளக்கீட்டு விழா என விண்ணில் மின்னிய நட்சத்திரத் தாரகைகள் சார்ந்த பல விழாக்களைத் தம்முடைய வணக்கத்திற்குரிய வழிபாட்டு விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சப்தரிஷி மண்டலம் எனப்படும் ஏழு விண்மீன்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டத்தை வழிபடும் வழக்கமும் சங்கத் தமிழரிடையே இறைசார்ந்த நம்பிக்கை வழிபாட்டில் இருந்துள்ளது. நற்சுவை நல்கும் நற்றிணைப் பாடல்வழி இது தேற்றம். இதோ பாடல்:

"மையற விளங்கிய மணிநிற விசும்பில்
கைதொழ மரபின் எழுமீன் போல"

-இளநாகனார் : நற்றிணை : 231 : 1-2


(இது சிறைப்புறமாகத் தோழி சொல்லி வரைவு கடாவியது)

விளக்கம்:

"மேகங்கள் சிறிதுமின்றி விளங்கிய நீலமணியின் நிறத்தையுடைய வானத்தின்கண் கண்டோர் கைகூப்பி வணங்கும் முறைமையினையுடைய 'சாலி' என்னும் விண்மீன் கூட்டம்போல..." என்பது மேற்கண்ட பாடலின் பொருள்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்த படியால் அறிவின் நுட்பம் அதிகம் உடையோராய்ச் சங்கத் தமிழர் விளங்கினர். சப்தரிஷி மண்டல வழிபாடு என நட்சத்திரக் கூட்டம் ஒன்றைக் கைகூப்பி வணங்கி வாழ்ந்துள்ளனர். வானில் மின்னும் திருவாதிரை, கார்த்திகை போன்று ஒற்றைத் தாரகைகளை வணங்கியது போலவே இது போன்ற வழிபாடு செய்துள்ளனர். இவ்வழிபாடு இன்று தமிழர் வாழ்வியல் வழக்கத்தில் இல்லையென்றாலும் அன்று வாழ்வியல் வழக்காக இருந்துள்ளது.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events
சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா
சிறப்பிதழ்கள்
Special Issues
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்
புகைப்படத் தொகுப்பு
Photo Gallery
சேரர் கோட்டை
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter