http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[ 96 Issues ]
[ 1164 Articles ]
Home     About US     Facebook     Font Problems    
Issue No. 87
 
இதழ் 87
மார்ச் 16 - ஏப்ரல் 15, 2012

தலையங்கம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது எப்போது?

கலைக்கோவன் பக்கம்
சுந்தரர் வழியில் . . . .
திரும்பிப்பார்க்கிறோம் - 34

கலையும் ஆய்வும்
கல்வெட்டுப் பாடல்கள்
UDIRAPPATTI

இலக்கியச் சுவை
சப்தரிஷி மண்டல வழிபாடு
கல்வெட்டுப் பாடல்கள்

கல்வெட்டுகளின் மூலம் வரலாற்றுச் செய்திகள் பலவற்றை அறியமுடியும் என்பது தெரிந்ததே. கல்வெட்டுகளில், ஊரின் பெயர், அரசனின் பெயர், ஆட்சியாண்டு, ஊர் சபை, வரி பற்றிய விவரங்கள், இப்படிப் பலதரப்பட்ட செய்திகளையும் முந்தைய இதழ்களில் பார்த்துள்ளோம்.

பொதுவாக எல்லாக் கல்வெட்டுகளும் அக்காலத்தில் நிலவி வந்த பேச்சு அல்லது எழுத்து வழக்கில் செய்திகளைத் தாங்கி நிற்கும். உதாரணத்திற்கு இதுநாள்வரை இந்த வரலாறு டாட் காமில் முந்தைய இதழ்களில் வெளிவந்த அனைத்துக் கல்வெட்டுகளும் அடங்கும்.

பாடல்களும் செய்யுள்களும்கூடச் சில கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன என்பது தெரியுமா? அவ்வாறான இரு கல்வெட்டுகளை இங்குக் காணலாம்.

கீழ்க்கண்ட கிருஷ்ணதேவராயர் காலக் கல்வெட்டு ஆபற்சகாயன் அபங்குரன் என்பவனைப் போற்றிப் பாடப்பெற்ற வரிகளைக் கொண்டுள்ளது. கிருஷ்ணதேவராயர் ராய்ச்சூர் மற்றும் பிஜப்பூரைப் படையெடுத்துச் சென்று தாக்கியபொழுது அத்தாக்குதலில் ஆபற்சகாயன் பங்கெடுத்துக் கொண்டதை இக்கல்வெட்டுப் பாடல் குறிப்பிடுகின்றது. மேலும் ஆபற்சகாயனைக் கடவைக்கு மன்னவன் என்றும் இப்பாடல் புகழ்கின்றது.

இடம்: தஞ்சாவூர் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலின் மூன்றாவது கோபுரத்தின் சுவரில் இப்பாடல் கல்வெட்டு உள்ளது.

வருடம்: கல்வெட்டில் வரும் விஷைய என்ற ஆண்டை விஜய என்று எடுத்துக்கொண்டால் அது கி.பி. 1533ம் ஆண்டாக இருக்கும். வ்ருஷ ஆண்டு என்றால் அது கி.பி. 1521ஆக இருக்கும்.

கல்வெட்டு வரிகள்:
1) ஸுபமஸ்து (வி)ஷய வருஷம்* ஆடி மீ^ 20 தி^ மருவலர் பொற்றி வருங் கிறுஷ்ணராயன் மனம் மகிழ பரிவுடன் யிராச்சூர் விஜையா நகரமுந் தண்டு பண்
2) ணித் திருவளர் சொலைக் கடவூரர் தெவதானம் உண்டாக்கிவித்தான் அருமறையொன் யியல் ஆபற்(ச)காயன் அபங்குரனென்
3) செற்றலாரெண் கிறுஷ்ணராயன் முன்னெ திருக்கோயில்களில் சொற்பயிலாகம நிதி யெல்லாந் துரைகள் மெச்ச நிற்றலும் சொல்லித் திருப்பணி
4) (விலை) இட்டவனமற்புயன் ஆபற்சகாயன் கடவைக்கு மன்னவனே

சொலை, தெவதானம் இவற்றை முறையே சோலை, தேவதானம் என்று படிக்கவும். பொதுவாகக் கல்வெட்டுகளில் இவ்வகையான கே, கோ முதலிய எழுத்துக்கள் குறில் ஒற்றுகளையே கொண்டிருக்கும். நாம் படிக்கும்பொழுது சரியாகப் படித்துக்கொள்ள வேண்டும்.

அதே கோயிலில் அதே கோபுரத்தில் மேலும் இரண்டு பாடல் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று காடவர்கோன் என்ற பல்லவர் தலைவனைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இப்பாடல் வரிகள் கைவசம் இல்லாததால் இங்குத் தர இயலவில்லை.

இரண்டாவது கல்வெட்டில் காலகாலன் ஈழத்தரையன் என்ற கவிஞன் பாடிய பாடல் உள்ளது. இப்பாடல் திருக்கடையூரின் அழகினை வர்ணித்துப் பாடப்பெற்றுள்ளது. திருக்கடையூர் வண்டுகள் ரீங்காரமிடும் செண்பகத் தோட்டங்களையும், விரைந்து சுழன்று செல்லும் அலைகளையுடைய காவிரியையும் கொண்டு காலகாலதேவரின் (சிவபெருமான்) மனதிற்குகந்த இருப்பிடமாக இருப்பதாக இப்பாடல் மொழிகின்றது.

கல்வெட்டு வரிகள்:
1) ஸ்வஸ்திஸ்ரீ திங்களும் வொலி அழிந்த (சி)ந்தூரமுஞ் செங்கை நல்லாச் சங்கமும்
2) கொங்கைப் புளகமுந் தாங்கித் தவன (விரப்) பொரங்குலில் வென்றருளுங் காலகாலன் க
3) டவை வெற்பிற் பங்கயந்தெட நன்ன வாரரிப் பளிக்க(றை)க் கொசிலைக் காலகா
4) லன் திருக்கடவூருஞ் செழுந்தடமு மாலைக்காலுலாவிய செண்பகச் காவு மதுகரங்கள்
5) (கு)லைக்காவரம்பயில் சொணாடும . . . தநித்தலந் தள்ளுகின்ற அலைக் காவிரியும் இ
6) சை காதம் வார் என் தன் ஆரணங்கெ உ காலகாலன் ஈழத்தரையன் கவி உ

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events
சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா
சிறப்பிதழ்கள்
Special Issues
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்
புகைப்படத் தொகுப்பு
Photo Gallery
சேரர் கோட்டை
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter