http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 165

இதழ் 165
[ ஜூன் 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள் - 2
நெடுங்களநாதர் கோயில் -1
சூரியனார் கோயில்-ஆடுதுறைக்கருகில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 16 (நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 15 (உனக்காக உறைபனியில்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 14 (துயரிலும் குன்றா அன்பு)
இதழ் எண். 165 > இதரவை
சூரியனார் கோயில்-ஆடுதுறைக்கருகில்
சு.சீதாராமன்

குடந்தையிலிருந்து வேப்பத்தூர் மார்க்கமாக சென்றால் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குலோத்துங்கன் காலக் கற்றளி. இன்று இக்கோயில் உலகப்பிரசித்தம். இது சூரியபகவானுக்கென்று அமைக்கபெற்ற பிரத்தியேக ஆலயம் என்று அனைவரும் கூறுவர். கோயில் குருக்களும் அவ்வாறே கூறுவார் என்பதும் நாம் அறிந்ததே! ஆனால் கோயில்களை அணுகும் நம் கண்கள் பக்திபூர்வமான தல புராணங்களைச சிரத்தையாகக் கேட்டுக் கொண்டாலும் இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? என்பதை நம்மையுமறியாமல் கவனிக்கும் ஒரு போக்கு சிறு வயதிலிருந்தே இருந்து வத்திருப்பதையும் தவிர்க்க முடியவில்லை!



கோயில் கோபுரம் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் குதிரைகளில் பவனி வரும் சூரிய தேவனின் சுதைச்சிற்பம் மகாமண்டபத்தின் தளத்திற்கு மேலே நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. சூரியனார் கோயில் என்று பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் இது கூட இல்லையென்றால் எப்படி? என்று உள்மனது ஒரு விவாதத்தை எழுப்பியது. சரி உள்ளே சென்று சூரிய பகவானை த்யானித்து நன்கு தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து பிரகாரம் சுற்றும் போது ஆலயத்தின் கருவறை விமானத்தை நோக்க ஆச்சரியமும் ஆனந்தமும் ஒருங்கே அடையப்பெற்றேன்!

ஏன் தெரியுமா? பொதுவாகக் கருவறை விமானக் கிரீவத்தில் உள்ளுறையும் இறையின் வாகனம் நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டிருக்கும்! சிவ ஆலயங்களில் நந்தியும்,பெருமாள் ஆலயங்களில் கருடனும்,முருகன் கோயில்களில் யானையும், விநாயகர் ஆலயங்களில் மூஞ்சூரும் இருப்பதை அடியேன் பல ஆலயங்களில் கண்டிருக்கிறேன்! அப்படியென்றால் கற்றளி உருவான காலத்திலேயே இக்கோயில் சூரிய தேவனுக்கென்று எழுப்பப்பட்டிருந்தால் கிரீவத்தில் குதிரைகள் இடம்பெற்றிருக்க வேண்டுமே என்று நம் கண்கள் கிரீவப் பகுதியை நோக்க, மேற்கூறிய ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஒருங்கே அடையப்பெற்றேன் என்றால் அது மிகையாகாது.

ஆம்! என் கண்களும் என்னை ஏமாற்றவில்லை,சோழச் சிற்பிகளும் ஏமாற்றவில்லை! அங்கே கிரீவப் பகுதியில் நான்கு மூலைகளிலும் குதிரைச் சிற்பங்கள் எழிலுடன் அமைக்கப்பட்டிருந்தன.

குறிப்பு: இச்சிற்பங்கள் கல்லாலானவை! கோயில் உருவாக்க காலத்திலிருந்தே இருந்து கொண்டிருப்பவை! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! இதோ அக்காட்சி உங்களுக்காக….




       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.