![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 97
![]() இதழ் 97 [ ஜூலை 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பெரியபுராண ஆய்வு
(சென்ற இதழ்த் தொடர்ச்சி...)
கல்வெட்டுக்களில் கண்ட 'சேக்கிழார்' என்போர் இனிப் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளனரா என்பதைக் காண்போம். இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களை ஆராயின் 'சேக்கிழார்' என்ற குடிப்பெயருடன் பலர் இருந்தமை வெளியாகும். அவர்களைப் பற்றிய விவரங்களைக் காலமுறைப்படி கீழே காண்க:
அந்தந்த அரசரையே சிறப்பாகக் குறிக்கும் தொடக்கத் தொடர்கள் மேற்காட்டிய கல்வெட்டுக்கள் பலவற்றில் இன்மை வருந்தற்குரியது. குலோத்துங்கர் திரிபுவன சக்கரவர்த்திகள் என்ற விருதுடன் மூவர் இருந்தனர். அங்ஙனம் அதே விருதுடன் இராசராசர் இருவர் இருந்தனர். இன்ன கல்வெட்டு இன்ன குலோத்துங்கரைத்தான் குறிக்கின்றது என்று சிறப்புத் தொடர்கள் இல்லாத கல்வெட்டுகள் கொண்டு திட்டமாகக் கூறற்கில்லை. ஆதலின், ஐயப்படத்தக்கவற்றுள், 1,2,3 இராவ்சாகிப் மு. இராகவையங்கார் கொண்ட முடிபை ஏற்றுக் குறிக்கப்பெற்றன - Vide his 'Sasana Tamil Kavi Charitam', pp. 71-77. மற்றவை பேராசிரியர் க. அ. நீலகண்ட சாத்திரியார் கொண்ட முடிபின்படி குறிக்கப்பெற்ற - Vide his 'Cholas', Vol II, Part II. சேக்கிழார் மரபினர் இக்கல்வெட்டுச் செய்திகளால் அறியப்படுவன : 1. சேக்கிழார் குடியினர் தொண்டை மண்டலத்து மணவிற் கோட்டம், மேலூர்க் கோட்டம், புலியூர்க் கோட்டங்களில் வாழ்ந்து வந்தனர். 2. அக்குடியினர் 'சோழ முத்தரையன், உத்தம சோழப் பல்லவராயன், காளப்பாளராயன், கரிகால சோழப் பல்லவராயன், முனையதரையன்' என்ற பட்டங்கள் பெற்றுச் சோழர் அரசியலில் சிறந்த பங்கு கொண்டிருந்தனர். 3. அங்ஙனம் அரசியலிற் பங்கு கொண்டவருள் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரே பலர் ஆவர். 4. இம்மரபினர், திருத்தொண்டர் புராண வரலாறுடையார் குறித்தபடி, சோழராட்சி முடியுமளவும் அதற்குப் பிறகும் அரசியற் பதவிகள் தாங்கியிருந்தனர். 5. இம்மரபினர் சைவப்பற்றுடையவராய்ப் பல தளிகட்குத் தானம் செய்த பெருமக்களாவர். (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |