http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[143 Issues]
[1515 Articles]
Home About US Temples Facebook
Issue No. 98

இதழ் 98
[ ஆகஸ்ட் 1, 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

ஒன்பதாம் ஆண்டு நிறைவு
காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 4
Thirumeyyam - 4
சேக்கிழாரும் அவர் காலமும் - 6
தேடலில் தெறித்தவை - 5
புத்தகத் தெருக்களில் - நான், காவற்கோட்டம் மற்றும் சடச்சி மக்கள்
இதழ் எண். 98 > தலையங்கம்
ஒன்பதாம் ஆண்டு நிறைவு
ஆசிரியர் குழு
இந்த இதழுடன் வரலாறு டாட் காம் மின்னிதழ் ஒன்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்து தனது பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு மாதங்களில் நூறாவது இதழ் மலர இருக்கின்றது.

இதுவரை பல்வேறு தொடர்கள் வெளியாகியுள்ளன. எத்தனையோ கோயில்களின் வரலாற்றுத் தரவுகள் தமிழுலகிற்கு வரவாகியுள்ளன. பலப்பல சிறப்பிதழ்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு அறிஞர்களும் மாணவர்களும் ஆய்வாளர்களும் இவ்விதழில் பங்கு கொண்டுள்ளனர். பல்வேறு தரப்பபினரையும் வாசகர்களாகப் கொண்டு இவ்விதழ் பெருமையடைந்துள்ளது.

இது ஒரு நீண்ட நெடிய பயணம். வரலாறு என்கிற மாநதியின் கரையில் அமர்ந்து நீங்களும் நாமும் முடிந்த அளவிற்குக் கையளவு நீரை மொண்டு குடித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்நதியின் நீள அகலமும் பிரவாகமும் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் நோக்கும் தேவையற்றது எனக் கருதுவதை ஈவிரக்கமின்றி கரைதள்ளும் திடமும் நம்மை ஒவ்வொரு கணமும் சிந்தனைக்குள்ளாக்குகின்றன. செயல்படும் திடத்தை வழங்குகின்றன.

வரலாற்று நதியின் கரையில் முடிவற்று நீளும் அந்த ஒற்றையடிப் பாதையில் வழிமாறாமல் நடப்பதன் மூலம் அன்றாடம் நாமும் நம்மைப் புதுப்பித்துக் கொள்கிறோம். நமது சிந்தனைகளை மீள்பரிசீலனைக்குள்ளாக்குகிறோம். வேறு வேறு நோக்கில் பார்க்கப் பழகுகிறோம்.

வாழ்வைப் புரிந்து கொள்ள நினைப்பவனால் வரலாற்றைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

வாழ்வை நேசிப்பவனால் வரலாற்றை நேசிக்காமல் இருக்க முடியாது.

வரலாற்றை மறப்பவன் வாழ்க்கையை மறப்பவனாகிறான்.

அன்புடன்,
ஆசிரியர் குழு.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.