http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 10

இதழ் 10
[ ஏப்ரல் 15 - மே 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றாய்வுப் பணிகளில் வரலாறு டாட் காம்
பகவதஜ்ஜுகம் - 1
கதை 5 - காளி நீலி
நன்றியுடன் நகரிலிருந்து . . . !
பழுவூர்-3
கல்வெட்டாய்வு - 8
கட்டடக்கலைத்தொடர் - 8
சமய சாசனம்
நார்த்தாமலையை நோக்கி... - 2
The Origin and Evolution of Amman Worship
சங்கச்சாரல் - 9
பெண் தெய்வ வழிபாடு
இதழ் எண். 10 > கலைக்கோவன் பக்கம்
நன்றியுடன் நகரிலிருந்து . . . !
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி, பங்குனித் திங்களில் இரண்டு முறை, "நகர்" சென்றிருந்தேன். இந்தச் சிற்றூர் சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறை (இலால்குடி) வட்டத்தில் திருமங்கலம் செல்லும் வழியில், அவ்வூருக்கு இரண்டு கிலோமீட்டர் முன்னதாக அமைந்துள்ளது. பேராசிரியர் மு. நளினியின் ஆய்வு மாணவி கி. கீதா தம்முடைய முதுகலை இரண்டாமாண்டிற்கான ஆய்வேட்டிற்கு, நகர்க்கோயிலைப் பொருளாகக் கொண்டு ஆய்வு செய்ய விழைந்ததன் விளைவே என் பயணம்.

சில ஆண்டுகளுக்கு முன், திருத்டஹ்வத்துறை அரசினர் பள்ளிக் கணீத ஆசிரியை திருமதி. மதிமலர், திருமங்கலம் கோயில் குறித்து என் வழிகாட்டலில் ஆய்வுசெய்தபோது நகர் சென்றிருக்கிறேன். அப்போதே இக்கோயில் என் உள்ளத்தில் இடம்பிடித்தது. என்றாவது ஒருநாள் இக்கோயிலை ஆய்வுசெய்ய்ம் வாய்ப்பமையுமென நம்பியிருந்தேன். அந்த வாய்ப்பு கீதாவின் வழிப் பங்குனியில் அமைந்தது.

கீதா திருமங்கலத்துக்காரர். அவர் குடும்பத்திற்கு அப்பகுதியில் தென்னந்தோப்பு இருப்பதால் கோயிலை அடைந்தவுடன் இளநீர் கிடைட்தஹ்து. மதியம் இரண்டரை மணி வெயிலில் அந்த இளநீர் மிகவும் இதமாக இருந்தது. கீதாவும் நளினியும் கல்வெட்டுகளோடு கதைக்கத் தொடங்கினர். தனித்து விடப்பட்ட நான், கட்டமை¡ப்பை பார்த்டஹ்வாறே அப்பிரதீசுவர் கோயிலுக்குள் பாதம் பதித்தேன்.

இந்தக் கோயிலின் முதல் வாயிலும் இரண்டாம் வாயிலும் கோபுரமற்ற வாயில்கள். முதல் வாயிலின் இருபுறட்த்ஹும் பிற்சோழர் காலத்தனவாகக் கொள்ளத்தக்க நான்முகன் சிற்பமொன்றும் வீரக்கல்லொன்றும் கவனிப்பாரற்ற நிலையில் நிறுத்டஹ்ப்பட்டிருந்தன. முதல் வாயிலுக்கும் இரண்டாம் வாயிலுக்கும் இடைப்பட்டுள்ல நிலப்பகுதி, தமிழ்நாடு அரசின் நெல் சேமிப்பிடமாக மாற்றப்பட்டிருப்பதால், அங்கு எப்போதும் நெல் மூட்டைகளும், அவற்றை வண்டிகளில் ஏற்றி இறக்கும் தொழிலாளர்களின் கூச்சலும் பீடிப்புகையும்தான். தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலாவது இத்தனைப் புகையுடன், தூசியுடன், குச்சலுடன் வரவேற்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

இருவாயில்களுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியின் தென்புறம் வறண்ட தெப்பக்குளம். வடபுறமுள்ல சிறுமண்டபம் சேமிப்பு அலுவலரின் அலுவலமாகவும் அதனையொட்டியுள்ள நந்தவனம் கழிப்பிடமாகவும் மாறியுள்லன. இரண்டாம் வாயிலின் கீழ்த்தளம் ஒரு காலத்தில் அப்பிரதீசுவரர் கோயில் பெரிய கோபுரத்துடன் விளங்கியமைக்குச் சான்றாகப் பாதபந்தத் தாங்குதளட்த்ஹுடன் ஐந்து பத்திச் சுவரும் கூரையும் கொண்டு எஞ்சி நிற்கிறது. சுவரில் எண்முக அரைத்தூண்கள்; வெட்டுப் போதிகைகள்.

முதற்கோபுரவாயிலிலும், இரண்டாம் கோபுர வாயிலிலும் சிதறிய துணுக்குகளாய்க் கல்வெட்டுகள் உள்ளன. இவை நாயக்கர் கால எழுத்தமையியில் தமிழில் வெட்டப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டு, ஊரில் கலவரம் மூண்டதையும் அதுபோழ்து கோயில் திருமடைவிளாகம் தீவைட்த்ஹு எரிக்கப்பட்டதையும், அக்கல்வரட்த்ஹில் கோயில் பிள்ளையார் சிற்பம் கொள்ளயடிக்கப்பட்டதையும், கங்கன் என்பவர் அப்பிளையாரைக் காப்பாற்றிக் கோயிலில் மீண்டும் வைத்ததையும் கூறுகிறது. இரண்டு கல்வெட்டுகள், கோதண்டராம தீட்சிதர் என்பவர் இக்கோயிலில் பணியாற்றிய குருக்கள், பரிசாரகர், சுவயம்பாகி, பணிப்பெண், தாசிகள், மெய்க்காவல் ஆகியோருக்கு வாழ்வூதியமாக நிலட்த்ஹுண்டுகளை ஒதுக்கிய தகவலைத் தருகின்றன. இந்த நிலத்துண்டுகளுள் ஒன்று 'துறைமுகம் செய்' என்று அழைக்கப்பட்டுள்லது. இது நாள்வரையிலும் கேள்விப்படாத பெயர்! தாசி என்ற அழைப்பும் அரிதானதே. என் கல்வெட்டுப் பரப்பு அநுபவத்தில் இசொல்லை இங்குதான் முதல்முறையாகச் சந்தித்தேன். ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பும், மராத்திச் சுவடிகளும் இச்சொல்லை மிகுதியாகப் பயன்படுத்துகின்றன. தேவரடியாள் என்ற சொல் எக்காலத்துத் தாசியாக மாற்றம் பெற்றது என்பதை ஆராய வேண்டியுள்ளது.

அப்ரதீசுவரர் கோயில் இரண்டாம் வாயிலை அடுத்து விரியும் வளாகத்தின் நடுவில் இறைவனுக்கான மையக் கோயிலும் வடக்கில் சகஸ்ர லிங்கத்திற்கான சிறிய அளவிலான திருமுன்னும் வடகிழக்கில் அம்மன் திருமுனும் அமைந்துள்லன. சுற்றிலும் உள்ல திருசுற்றுமாளிகை கிழக்கில் நன்கு விரிந்தும் மேற்கில் தென்புறத்தே சற்றே விரிந்தும் பரவலான மேடையமைப்புகளை உள்லடக்கியுள்லது. இத்திருச்சுற்று மாளிகையில்தான் தெற்கில் ஒரே பாறையில் செதுக்கிய எழுவர் அன்னையரும், தென்மேற்கில் பிள்ளையாரும், வடக்கில் வட, தென் கைலாயநாதர்களும் அவர்களுக்கிடையில் தேவியருடன் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளர்.

வடகிழக்கு விரிவில் ஒன்பான் கோள்கள். இந்த விரிவுடன் ஐக்கியமாகியுள்லது அதுலசுந்தரி அம்மனின் முறையான் அகட்டமைப்பற்ற திருமுன். சிதிலமான கொற்றவைச் சிற்பமொன்றும் சூரியன், பைரவர் சிற்பங்களும் இங்குள்ளன. சூரியனின் இடைக்குக் கீழுள்ல ஆடையமைப்பறிய, அவரைச் சுற்றிக் கட்டிவிடப்பட்டிருந்த துணியை இலேசாகத் தூக்கினேன். அவ்வளவுதான். ஏழெட்டுக் கரப்பான்களின் பாய்ச்சல்.

எனக்குத் தெருமெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் கோயில்தான் உடன் நினைவுக்கு வந்தது. அந்தக் கோயிலை ஆய்வுசெய்யப் போயிருந்தபோது, அனந்தசாயியின் தலையை மகுடத்தாலும் கைகளைக் கவசட்த்ஹாலும் மூடியிருந்தனர். அவ்வுறுப்புகளின் செதுக்குநிலை அறிய விழைந்து அவற்றை நீக்கிட வேண்டினோம். பட்டாச்சாரியாரும் ஒத்துழைத்தார். கைக்கவசங்களை அவர் அகற்றும்போதே பெருமாளின் உள்லங்கைப் பகுதிகளில் இருந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடிய கரப்பான்கள் அமிபதிற்குக் குறையாமல் இருக்கும். நானும் நளினியும் கருவறையில் இருக்கப் பிடிக்காமல் வெளியில் வந்துவிட்டோம். இறைத் திருமேனிகளைத் தூய்மையாக வைத்திருக்க என்றுதான் கோயில் நிர்வாகமும் வழிபாடு செய்வோரும் முயற்சி எடுக்கப் போகிறார்களோ! அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

பிருதுவலீசுவரமென்று இரண்டாம் இராஜாதிராஜர் கல்வெட்டிலும், பிரதவலீச்சுரம் என்று மூன்றாம் குலோத்துங்கர் கல்வெட்டிலும், பிருத்விவல்லீச்சரம் என்று மாறவர்மர்குலசேகர பாண்டியர் கல்வெடிலும் அப்பிரதீசுவரர் என்று பிற்காலக் கல்வெட்டொன்றிலும் குறிக்கப்பெறும் இறைவன் விமானம், முத்தளக் கலப்புத் திரவிடமாய், முதல் தளம் கருங்கல்லால் அமைய, பிற இருதளங்களும் செங்கல்லால் கட்டப்பட்ட நிலையில் முன்னால் இரண்டு மண்டபங்கள் பெற்றுக் காட்சிதருகிறது. விமானத்தை அடுத்துள்ல சிறு மண்டபத்தை முகமண்டபமாகவும் அடுத்துள்ள மண்டபத்தை பெருமண்டபமாகவும் கொள்ளலாம்.

பெருமண்டபம் பாதபந்தத் தாங்குதளத்துடன் மூன்றாம் கொலோத்துங்கர், மாறவர்மர் குலசேகரர் கல்வெட்டுகளைப் பெற்று, கிழக்கிலும் தெற்கிலும் வாயில்கள் கொண்டமைந்துள்ளது. தெற்கு வாயில், மூன்றில் பெற்றுச் சிறப்பு வாயிலாக்கப்பட்டுள்லது. உட்புறம் இருபிரிவுகளாக அமைந்துள்ள இப்பெருமண்டபத்தின் தூண்கள் சதுரங்களும் கட்டுகளும் மாறிமாறியமைந்த உடலின.

பெருமண்டபம் போன்றே கட்டமைப்புக்கொண்டு, தெற்கிலும் வடக்கிலும் கோட்டங்கள் பெற்றுள்ள முகமண்டபத்தின் தென்கோட்டத்தில் ஊர்த்வஜாநு கரனத்திலமைந்த பிள்ளையார் சிற்பமும் வடகோட்டத்தில் கொற்றவை வடிவமும் உள்ளன. இரண்டுமே பிற்காலச் சிற்பங்கள்.

விமானத்தின் கீழ்த்தளம் பாதப்ந்தத் தாங்குதளத்துடன் எண்முக அரைத்தூண்களால் அணைக்கப்பெற்ற சுவரும் வெட்டும் தரங்கமும் கொண்ட போதிகைகளும் பெற்றுக் கூரையால் மூடப்பட்டுள்லது. இதன் சாலைப்பத்தி நன்கு முன்தள்ளியமைய ஓரப்பத்திகளான கர்ணபத்திகள் இரண்டும் சற்றே முன் தள்ளியுள்ளன. உத்திரம் முதலிய கூரையுறுப்புகள் எளிமையாக அமைய, பத்திகளுக்கு இடைப்பட்ட சுவர்களில் கோட்டப் பஞ்சரங்கள்.

விமானத்தின் முதல்தள ஆரம் ஆறங்க அமைப்பினது. அதனால் இரண்டாம் தளம் மிகச் சுருங்கிய உயர்த்தில் காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் தள ஆரம் இயல்பானதாக அமைய, மூன்றாம் தளம் இரண்டாம் தளத்தளவே காட்டப்பட்டுள்ளது. மேலே திராவிட கிரீவம், சிகரம். விமானக் கீழ்த்தளக் கோட்டங்களிலும் சாலை நாசிகைகளிலும் கிரீவ கோட்டங்களிலும் தெற்கில் ஆலமர் அண்ணலும் மேற்கில் மகாவிஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர். கிழக்கு கிரீவ கோட்டத்தில் முருகன் தேவியருடன் உள்ளார்.

நகர்க்கோயிலின் அழகும் ஈர்ப்பும் வடபுறத்தில்தான். தலமரமான விலவமரம் செழிக்க வளர்ந்துள்ளது. அதைச் சுற்றிலும் திண்ணையொன்று கட்டப்பட்டுள்ளது. உதிர்ந்த இலைகளும், காய்ந்த சருகுகளும், வில்வக் காய்களும் அத்திண்ணையிலும் வடசுற்றிலும் பரவியுள்ளன. குலோத்துங்கர் காலக் கல்வெட்டொன்றைப் படித்தவாறு வடசுற்றில் அமர்ந்திருந்த அந்த மாலை நேரத்தில், திடீரெனச் சில நிமிடங்கள் நல்ல காற்று வீசியது. அக்காற்றில் வில மரக் கிளைகள் உரசி எழுப்பிய ஓசையும் இலைகள் சலசலத்துக் கீழ்விழுந்தமையால் விளைந்த ஓசையும் அந்தியின் மயக்கமும் கோயில் சூழலில் கிடைத்த தனிமையும் என்னை எங்கோ கொண்டு போயின. 'ஏகாந்தம்' எனும் சொல்லின் பொருளை அநுபவித்து மகிழ எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன வாருணி. நகரின் அந்திமாலையும் அப்படியோர் அநுபவத்தை அன்று தந்தன. கோயில்களை நேசிக்கக் கற்றுக்கொண்டால், அவற்றினும் சிறந்த நெறியாளர்கள், ஊடகங்கள் நண்பர்கள் வேறில்லை.

கோயில்களுடன் பேசிப்பார். ஒவ்வொரு கல்துண்டும் உரையாடக் கேட்கலாம். கோயில் வெறும் வழிபாட்டுத் தலமல்ல வாருணி. அதை உருவாக்கியவர்கள், மக்கள் சந்தித்து மனம் திரும்பும் களமாக அது அமையக் கருதியே வடிவமைத்தார்கள். வாழ்க்கையின் அனைத்து உறுத்தல்களுக்கும் அங்கே விடுதலை உண்டு. எனக்கு நீதான் என்ற நம்பிக்கையோடு கைப்பிடித்தால் எதுதான் உடன் வராது? உறவு தராது?

நகர்க்கோயிலில் நாங்கள் படித்த கல்வெட்டுகளுள், 'சமய சாசனம்' ஒன்று. அதைப் பற்றி நளினி விரிவாக எழுதுவார். அபிரதீசுவரர் வாயிலுக்கு எதிரில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. அதன் வாயிலில் பாதி புதைந்த நிலையில் இருந்த கல்வெட்டொன்றை அக்ழந்து படிக்க முயன்றபோது புதர் மறைவில் புதைந்திருந்த தீர்த்தங்கரர் சிற்பம் கண்ணில் பட்டது. உடனே அதை அகழ்ந்து தூய்மை செய்து பார்த்தோம். அர்த்த பத்மாசனத்தில் தியான அஸ்தத்தில் முக்குடையின் கீழ் மகாவீரர். பிற்சோழர் சிற்பமாகக் கொள்ளமுடியும்.

மகாவீரரின் இருபுறத்தும் கவரிவீசுநர். மேலே கொடிக்கருக்கு. முக்குடையின் கீழ்த்திருவாசியெனச் செண்டு. சிற்பம் முழுமையாக இருந்ததில் மகிழ்வேற்பட்டது. புதிய கண்டுபிடிப்பு என்பது கூடுத மகிழ்வு தந்தது. எங்கு ஆய்விற்குச் சென்றாலும் எனக்கும் நளினிக்கும், புதியன கிடைக்காமல் இருப்பதில்லை. கடின உழைப்புதான் காரணம், வாருணி. வேறொன்றுமில்லை. 'தோள் கண்டார் தோளே கண்டார்' என்று நாங்கள் வருவதில்லை. 'அடிமுடி' தேடுவது ஆய்வின் அடிப்படைக்கோட்பாடு என்பதால் எங்களால் இயலும்வரை கோயில் மட்டுமென்றிராது சுற்றுப்புற ஆய்வும் மேற்கொள்வோம். அதனால் வரலாற்றிற்குப் புதிய வரவுகள் கணக்கில்லாமல் கிடைத்துள்ளன. 3.4.2005 ஞாயிறன்று, 'The Hindu'வின் 'Meet' பகுதியில் வெளியான நளினியின் நேர்முகத்தைப் படித்திருப்பாயென்று நினைக்கிறேன்.

என்னோடு பழகிக் கோயில்களுக்கும் உடன் வந்த ஒருவர், 'டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் என்றால் நீங்களும் நளினியும்தானே' என்று ஒருமுறை எனக்கு எழுதியிருந்தார். அவருக்குப் பாவம் அகிலாவைக்கூட மறந்துவிட்டது. சிலர் எப்போதும் அப்படித்தான், தெளிவில்லாதவர்கள். வாருணி, நம் மையத்திற்குப் புதிய வரவு செல்வி. கி. கீதா. அடக்கமானவர். மீனாம்பாளைப் போலவே ஆர்வமானவர். நிறைய கற்கும் விழைவும் உள்ளவர். 'கோயிலைத்தான் ஆய்வு செய்யவேண்டும்' என்ற அவருடைய உறுதியும் முனைப்புமே மகாவீரரைக் கண்டுபிடிக்க வைத்தது. 'நகர்' உலகப் பார்வைக்குப் படமாகவும் வாய்ப்பளித்தது. மெய்யத்து வைஷ்ணவ மாகேசுவரம் போல, நகரின் 'சமய சாசனம்' வரலாற்றேடுகளில் பதிவாகப் பாதையமைத்துத் தந்தது. நன்றி சொல்வோம், அந்த இனிய உடன்பிறப்பிற்கு.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.