http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[166 Issues]
[1663 Articles]
Home About US Temples Facebook
Issue No. 153



இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜரின் திருவிளக்குகள்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 5
புள்ளமங்கை ஆலந்துறையார் தளப்பஞ்சரங்கள்
இறவாதான் ஈசுவரம்
மாமல்லபுரக் குடைவரைகள் - 4
இதழ் எண். 153 > பயணப்பட்டோம்
மாமல்லபுரக் குடைவரைகள் - 4
ச.சுந்தரேசன்

 



ஒருமண்டபக் குடைவரைகள்



முற்றுப்பெறாத குடைவரைகள்:



3. சிறிய கோனேரி மண்டபம்



புலிப்புதர் மண்டபத்திலிருந்து சிறிது தொலைவில் மேற்குப் பார்வையாய், கோனேரி ஏரியின் எதிர்ப்புறத்தில்  ஒரே பாறையிலான இரண்டு குடைவரைகள் அமைந்துள்ளன. இக்குடைவரைகள் இடையில் ஓர் பாறைச்சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.  வடபுறத்துக் குடைவரை சிறிய கோனேரி என்றும், தென்புறத்துக் குடைவரை பெரிய கோனேரி என்றும் அழைக்கப்படுகிறது.

 



சீரமைக்கப்படாத மண் பாதை  குடைவரை அமைவிடத்திற்கு அழைத்துச் செல்கின்றது. குடைவரையின் மேல்தளத்தினை அடைய தொல்லியல் அளவீட்டுத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள ஆறு படிகள் உதவுகின்றன.



சிறிய கோனேரி குடைவரை:





குடைவரை முகப்பின் முன்னே ஓரளவு சீரமைக்கப்பட்ட பாறைத்தளம் விரிந்து காணப்படுகிறது. குடைவரை உருவான பாறையின் சரிவானது இருபக்கங்களிலும் பாறைத்தளத்தின் இருபுறத்தையும் அணைத்தவாறு இறங்குகின்றது.    வடபுறத்துப் பாறைச்சரிவின் அகலம் தென்புறத்தைவிட அளவில் சிறியதாகக் காணப்பட்டுகின்றது. 



தெற்குப் பாறைச் சரிவினையடுத்து அதன் தென்புறத்தில் பெரிய கோனேரி மண்டபக் குடைவரை அமைந்திருப்பதைக்ப் படத்தில் காணலாம். 



வடபுறத்துப் பாறைச்சரிவு:





 

தெற்குப் பாறைச்சரிவு:





குடைவரை முகப்பு:





குடைவரையின் முகப்பானது நான்கு முழுத்தூண்களையும்,  பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களையும் கொண்டமைந்துள்ளது. முகப்பு ஐந்து அங்கணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நான்கு முழுத்தூண்களுள் வடக்கிலிருந்து தெற்காக மூன்று முழுத்தூண்கள் விலங்கடி பெற்றுள்ளன. தெற்குத்தூண் விலங்கடி பெறவில்லையெனினும் அதற்கான ஒதுக்கீடு பெற்ற நிலையில் உள்ளது. 



விலங்கடி பெற்ற மூன்று முழுத்தூண்கள் பாதம், அமர்யாளி, எண்முகத் தூணுடல், தலையுறுப்புக்கான ஒதுக்கீடு, கனமான பலகை ஆகியவற்றைப் பெற்றுள்ளன. விலங்கடி பெறாத தென்புறத் தூணுடல் உறுப்பு வேறுபாடின்றி பாதம் மட்டும் பெற்றமைந்துள்ளது. 



இந்நான்கு தூண்களின் பலகையின் மேல் விரிகோணப் போதிகைகள் அமையப் பெற்றுள்ளன. வடக்கிலிருந்து தெற்காக முதலிரண்டு தூண்களின் விரிகோணப் போதிகைகள் இடது கீழ்க்கையினைப் பெற்றிருக்கவில்லை. மூன்றாவது தூணின் விரிகோணப் போதிகை கீழ்க்கைகள் இரண்டும் பெற்றிருக்கவில்லை. போதிகைகளை அளவில் சிறிய உத்திரம் தாங்குகின்றது.



பக்கவாட்டிலுள்ள நான்முக அரைத்தூண்கள் உறுப்பு வேறுபாடற்றுக் காணப்படுகின்றன. அரைத்தூண்களின் மேற்கு முகங்கள் முழுமை பெறாமல் காட்சியளிக்கின்றன. 

 





மண்டப அமைப்பு:



மண்டபத்தின் தரை ஓரளவு சமன்படுத்தப்பட்ட நிலையிலும், மண்டபச் சுவர்கள், கூரை பாறைப்பிளப்பு நிலையிலும் விடப்பட்டுள்ளது. மண்டபத்தின் நடுவே, மூன்றாம் அங்கணத்தின் நேர் இருக்குமாறு கருவறை அகழப்பட்டுள்ளது.









கருவறை:



தாங்குதளத்திலிருந்து உட்தள்ளி அமைந்துள்ள வாயிலை அடைய மண்டபத் தரையிலிருந்து படிகளுக்கான உயர ஒதுக்கீடு உள்ளது. 







 

நான்முகமாய் அமைந்துள்ள கருவறை வாயிலின்  அணைவுத் தூண்களின் மேலே தலையுறுப்புகள், பொதிகைகள், உத்திரம் ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகளைக் காணமுடிகிறது. 



இறையுரு ஏதுமற்றக் கருவறையின் பக்கச் சுவர்கள், தரை, கூரை சீராக அமைக்கப்பட்ட நிலையில் பின்சுவர் பாறைப்பிளப்பு நிலையிலேயே காணப்படுகிறது.



நன்றி:

மாமல்லபுரம் குடைவரைகள்

டாக்டர் கலைக்கோவன், முனைவர் மு. நளினி

ஒளிப்படங்கள் உதவி: ஆர். கே. லக்ஷ்மி





 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.