http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 68

இதழ் 68
[ பிப்ரவரி 27 - எஸ். ராஜம் சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

எஸ்.ராஜம் - சங்கீத ஓவியம்
Tribute to S. Rajam
Raja Margam
Rajam – My Father!
பாடகர், ஓவியர் ராஜம் அவர்களுக்கு வாழ்த்துப் பா
அர்ப்பணிப்பின் மறுபெயர் எஸ் ராஜம்
Remembering S. Rajam
கலையோடு வாழ்வாங்கு வாழ்பவர்
My Guru
தேசிய வரலாற்று தினம்
வைணவ பாஞ்சராத்ரம் பேசும் பரிபாடல்
இதழ் எண். 68 > சிறப்பிதழ் பகுதி
அர்ப்பணிப்பின் மறுபெயர் எஸ் ராஜம்
டாக்டர் என். ராமநாதன்
எஸ் ராஜத்தின் இசை, அவரின் மனித இயல்பு (nature), இரண்டைப் பற்றியும் சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் சிந்தித்து பார்த்ததில் இசையையும் இயல்பையும் பிரிக்க முடியாது என்பது தெரிகிறது. ராஜம் அவர்களுக்கு கடவுள் ஒரு அற்புதமான குரல் வளத்தை அளித்திருந்தார். தமிழ்நாட்டில் பிறந்த இசைக் கலைஞர்களில் மிக குறைவானவர்களே இனிமையான சாரீரத்தைப் பெற்றிருக்கிறார்கள், நான் ஆண் பாடகர்களைக் குறிப்பிடுகிறேன். மந்திர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து தார-பஞ்சமம் வரை ஒரே சீரான குரல், ஒரு லேசான metallic tinge-உடன். இசை வழங்குவதில் அந்த குரலின் தன்மையை சிறிதும் சிதையாமல் பார்த்துக்கொண்டார்.

பொதுவாக கர்நாடக இசை கலைஞர்கள் தமக்கென்று சில பரிமாணங்களை நிர்ணயித்துக் கொண்டுள்ளார்கள். அதாவது மத்யமகாலமே அடிப்படை காலப்ரமாணமாக இருக்க வேண்டும். மேலும் கம்பிதம், துரித ஜாரு, வளி போன்ற அசைவுகளை மிகுதியாக கையாள வேண்டும் என்பது. ஆனால் பெரும்பாலான அசைவுகள் விளம்பகாலத்திலேயே அழகைக் கொடுக்கும், மத்யமகாலத்தில் நாராசமாக இருக்கும். நம் கச்சேரி இசையில் காலப்ரமாணத்திற்கும் கமகத்திற்கும் இடையே ஒரு fundamental incompatibility இருக்கின்றது.

ராஜம் அவர்கள் மத்யமகாலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அசைவுகளை குறைத்துக் கொண்டார். அதனால் அவருடைய இசை, கர்நாடகத் தன்மை சற்று குறைந்து காணப்படுவது போல் தோற்றம் அளிக்கும். ஆனால் அதே நேரம், குரல் வளமும், melodic expression-ம் செழிப்பாக இருக்கும். த்வாரம் வேங்கடசாமி நாயுடுவும், வயலின் tonal quality-ஐ compromise செய்யாமல் இருக்க சில கமகங்களை தவிர்த்தார் என்று தெரிகிறது. இதை கலைஞர்களின் aesthetic preferences என்று கூறலாம்.

ராஜம் அவர்களுக்கு இயல்பாகவே, plain ஸ்வரங்களின் பால் காதல் அதிகம். அதனால் தான் மேள ராகங்களின் பக்கமும், கோடீச்வரய்யர் கீர்த்தனங்களின் பாலும் ஈர்க்கப்பட்டார். அவருடைய இந்த விருப்பங்களினால் நிகழ்ச்சிகளில் அவர் குரல் எடுப்பாகவும் கம்பீரமாகவும் ஒலிக்கும்.

Mr Rajam also had a great liking or fascination or even obsession for the Melakarta raga-s, vivadi or non-vivadi. This also is closely linked to his conception of svara as an extension of svarasthana. He liked the perfect enunciation of the svarsthana-s of the different melakarta raga-s. He had worked hard on them. On the other hand, I hold that the propunding of the 72 Mela scheme itself has been the greatest disaster that could have happened to the Art music of South India. It has distorted the form of raga itself. It has erased the aspects like characteristic sancara-s, alpatva-bahutva. While each raga should contain a lot of information, the mela-raga-s contains only the information of the svarasthana, rendering raga a weak concept. (I must however confess that on the two occasions I accompanied Sri Rajam on the violin, I found myself quite inadequate to handle the vivadi-svara raga-s.) The greatest thing with Mr Rajam was that I could say all this and yet continue to be close to him.

அவர் தன் குரல் வளத்தை exploit-ஓ abuse-ஓ செய்யவில்லை. ஜி.என்.பி-யைப் போல், அவர் சாரீரத்திலும், அதி-துரித கால ஸ்வரங்களும், பிருகாக்களும் சுலபமாக பேசியிருக்கக் கூடும். ஆனால் அவர் தனது voice-ஐ project செய்யவில்லை, இசையையே முன்னிறுத்தினார். இதன் பலனாக அவர் குரல் கடைசிக் காலம் வரை கெடாமல் இருந்தது, புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தும் கூட. 87 வயதில் அவர் நிகழ்த்திய வானொலிக் கச்சேரியில் கூட அவர் குரலும் இசையும் பளிச்சென்று இருந்தன. ஆனால் குரலை அதிகம் abuse செய்த பல கலைஞர்கள் சிறு வயதிலேயே அதை பரிதாபமாக இழந்திருப்பதை நாம் அறிவோம்.

ராஜம் அவர்கள் did not allow his voice to dominate over his music. இங்கு தான் அவர் nature பிரதிபலிக்கிறது. அவர் தன்னுடைய இசை நிகழ்வுகள் மூலம் ரஸிகர்களை தேடிச் சென்று கவர வேண்டும் என்று முயலவில்லை. அதனால் தான் அவர் பெரும்பாலும் ஒரு All India Radio கலைஞராக திகழ்ந்தார், ஸபா கலைஞராக அல்ல. அவருடைய ஸ்வபாவத்திற்கு Radio ஒரு சரியான medium-ஆக அமைந்தது.

ராஜம் அவர்களைப் பற்றி நாள் கணக்கில் பேசலாம். ராஜம் அவர்களுடனும் நாள் கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் தன்னைப் பற்றி பேசமாட்டார். அப்படி பேசினாலும் ஏதோ மூன்றாம் மனிதரைப் பற்றி, ஒரு detachment-உடன் பேசுவது போல் இருக்கும். ஒரு அஹங்காரமற்ற ஜீவன் முக்தர். ஆனால் ஆசா-பாசம் அற்றவர் என்று கூற முடியாது. ஸ்ருதி பட்டாபிராமன் வீட்டு டிபன் சாப்பாடு ப்ரியர், அதை எப்பொழுதும் புகழ்வார்.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறையில் தொலைதூர கல்வி தொடங்கிய கட்டத்தில், குரலிசை வகுப்புக்களுக்கு, துறைத்தலைவர் சீதாவால், முதன் முதலாகத் அழைக்கப்பட்டவர் ராஜம் அவர்கள் தான். கற்றுக் கொடுப்பதிலும், நொடேஷன், audio tape recording தயாரிப்பதிலும் 100% commitment. எளிமையான தோற்றத்துடன், சில நேரங்களில், வகுப்பிற்கு லூங்கிக் கட்டிக் கொண்டும் வருவார். No airs about him. எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு முதல் இடம் கொடுத்து, மற்ற என்ன அழைப்புகள் வந்தாலும் மறுத்து விடுவார்.

கருத்தருங்களில் மாற்றுக் கருத்தை கூற தயங்க மாட்டார். இசை எடுத்துக்காட்டுகளில் தவறு இருந்தால் அழுத்தமாக விமரிசிப்பார். ஆனால் அதில் கடுமை இராது, தனிப்பட்ட த்வேஷம் இராது. இசையையும் கலைஞரையும் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையும் பண்பும் அவரிடம் இருந்தது.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.