http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 78

இதழ் 78
[ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

இது உங்கள் சொத்து
மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும் - 3
ஆரியபட்டாள் வாசல்
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 3
புத்தகத் தெருக்களில் - இன்பக்கேணியும் ஆயிப்பெண்ணும்
தட்சிணாமூர்த்தி பிள்ளை
இதழ் எண். 78 > கலையும் ஆய்வும்
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 3
மு. நளினி
(சென்ற இதழின் தொடர்ச்சி)

கோயிற்பணியாளர்களுக்கான ஒதுக்கீடுகள்

ஒவ்வொரு பணியாளருக்கும் நாள்தோறும் குறிப்பிட்ட அளவு நெல்லும், துணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை புடவைமுதல் என்ற பெயரில் குறிப்பிட்ட அளவு பொன்னும் தருவதற்கு ஏற்பாடானது.







எண்பணியாளர்நாள்தோறும் கொடுக்கப்பட்ட நெல்லளவுஆண்டுதோறும் துணிக்குத் தரப்பட்ட பொன்
1.கோயிலில் வழிபாடு செய்யும் வேதங்கள் அறிந்த பிராமணர் ஒருவர்பதக்கு5 கழஞ்சு
2.பரிசாரகம் செய்யும் மாணி ஒருவர்அறுநாழி1 கழஞ்சு
3.திருமெய்க்காப்பாளர் ஒருவர்குறுணி2 கழஞ்சு
4.நந்தவனப் பணியாளர் இருவர்குறுணி நானாழி1 கழஞ்சு
5.திருமெழுகிடுவார் (எத்தனைப் பேர் என்று குறிப்பிடப்படவில்லை)முன்னாழி-

இவர்கள் தவிரக் கோயிலில் இசைக்கருவிகள் வாசிக்கும் உவச்சர்கள் ஒன்பதின்மருக்கும் அவர்களுக்குரிய புடவைமுதல் உட்பட அனைத்திற்குமாக உழையூர்ப் பொலியூட்டாக வந்த 150 காடி நெல்லும், இரண்டு பட்டி நிலமும் தரப்பட்டது. இந்த இரண்டு பட்டி நிலம் எப்படிப் பெறப்பட்டது, எங்கிருந்தது என்ற விவரங்களும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.

1. கச்சிப்பேட்டு நகரத்தாரிடம் விலைக்கு வாங்கிய நிலத்தில் ஒரு பட்டி. இதன் பெயர் சித்திரவல்லிப் பெருஞ்செறு.

2. துண்டுணுக்கச் சேரியில் விலைக்கு வாங்கிய நிலத்தில்

அ. மேட்டு மதகாறு பாய்ந்த சேந்தறைப் போத்தன் நிலத்துக்கு வடக்கில் - தடி மூன்று
ஆ. காடாடி குண்டிலின் வடக்கில் - செறுவு ஒன்று
இ. பள்ள மதகாறு பாய்ந்த நிலத்தில் கோனேரியார் போகத்தில் வடக்கில் - 1 குண்டில்

ஆகத் தடி ஐந்து - ஒரு பட்டி

உவச்சர்கள் ஒன்பதின்மர் என்று குறிக்கும் செப்பேடு, அவர்கள் வாசித்த கருவிகளையும் பட்டியலிடுகிறது.









எண்இசைக்கருவியின் பெயர் - எண்ணிக்கைஇயக்கியவர் எண்ணிக்கைகருவியின் வகை
1.தலைப்பறை - 11தோல் கருவி
2.மத்தளி - 2 (மத்தளம்)2தோல் கருவி
3.கரடிகை - 11தோல் கருவி
4.தாளம் - 11கஞ்சக் கருவி
5.செகண்டிகை - 11கஞ்சக் கருவி
6.கைமணி - 11கஞ்சக் கருவி
7.காளம் - 22துளைக் கருவி

ஊரகப் பெருமாளின் வழிபாடு, படையல் மற்றும் அக்கோயில் பணியாளர்களின் ஊதியம் ஆகியவற்றிற்கான அறக்கட்டளைகளை நெறிப்படுத்திய நிலையில், கரிகாலத்தெற்றி என்னுமிடத்தில் இருந்த இரண்டு தெய்வங்களுக்கான வழிபாடு மற்றும் படையல்களுக்காய் அறக்கட்டளைகள் வகுக்கப்பட்டன.

கரிகாலத்தெற்றி தெய்வங்கட்கான அறக்கட்டளைகள்







எண்பொருள்நெல் ஒதுக்கீடுவேளைஅளவு
1.திரு அமுது3 குறுணி 6 நாழி3 சந்திக்கும்-
2.கறி அமுது4 நாழி3 சந்திக்கும்-
3.விறகு3 நாழி--
4.நெய்யமுது5 நாழி3 சந்திக்கும்உழக்கு
5.இரண்டு நந்தா விளக்குகளுக்காகும் நெய்க்காககுறுணி 4 நாழி--

இவை தவிர திருமெய்ப்பூச்சு, திருப்புகை இவற்றிற்காகத் திங்கட்கு ஒரு மஞ்சாடிப் பொன் என்ற அளவில் ஓராண்டிற்குக் கணக்கிட்டுப் பன்னிரண்டு மஞ்சாடிப் பொன் பெற வகை செய்யப்பட்டது.

நான்காவது ஏட்டின் முன்புறத்தில் பரகேசரிவர்மரின் பதினாறாம் ஆட்சியாண்டில் மேற்கொள்ளப்பட்ட அறக்கட்டளை பேசப்படுகிறது. இப்பரகேசரிவர்மர் உத்தமசோழராக இருக்கலாமென்று திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி கருதுகிறார்.

(தொடரும்)

[திருச்சிராப்பள்ளி டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் வெளியிடும் வரலாறு ஆய்விதழ் -1 ல் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி]
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.