http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[143 Issues]
[1515 Articles]
Home About US Temples Facebook
Issue No. 8

இதழ் 8
[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தோம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 1
மத்தவிலாசப் பிரகசனம் - 5
நாளிதழ்களில் வரலாறு டாட் காம்
சீவரமுடையார் குடைவரையும் கல்வெட்டுகளும்
பழுவூர் - 1
கல்வெட்டாய்வு - 6
இராஜராஜரின் வெற்றிகள்
கட்டடக்கலைத் தொடர் - 7
யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை
நார்த்தாமலையை நோக்கி...
அழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்
Genesis of Vimana in Pallava Art
சங்கச்சாரல் - 7
இதழ் எண். 8 > கலையும் ஆய்வும்
கட்டடக்கலைத் தொடர் - 7
ச. கமலக்கண்ணன்
கபோதபந்தத் தாங்குதளம்

என்னடா இது? சென்ற இதழ் வரை சிகரம், ஸ்தூபி என்று மேல்நோக்கிச் சென்று விட்டு, திடீரென்று தாங்குதளத்தின் மீது பாய்கிறானே என்று பார்க்கிறீர்களா? ஸ்தூபியுடன்தான் விமானம் முடிந்து விடுகிறதே! ஆகவே, இதுவரை சொன்னவற்றில் விட்டுப்போனவற்றின் தொடர்ச்சியை இனிமேல் காணலாம்.

இப்போது உங்களுக்குக் கபோதம் என்றால் என்னவென்று தெரியும். மழை நீர் வழிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் Sun shade போன்றது. பாதபந்த அல்லது பத்மபந்தத் தாங்குதளங்களில் பட்டிகை இருக்கவேண்டிய இடத்தில் கபோதம் இருந்தாலோ அல்லது பிரதிபந்தத் தாங்குதளத்தில் இருக்கும் பிரதிவரிக்குக் கீழே கபோதம் இருந்தாலோ அது கபோதபந்தத் தாங்குதளம். இதைப் பிரதிபந்தம் மற்றும் பத்மபந்தத் தாங்குதளங்களில் வளர்நிலை என்கிறார் முனைவர். கலைக்கோவன் (அத்யந்தகாமம், பக் 22). கூரை உறுப்பான கபோதம் ஏன் தாங்குதளத்தில் வருகிறது? நம் சிற்பிகளின் கற்பனைக் குதிரைகளின் ஓட்டத்திற்குத்தான் எல்லையே இல்லையே! அவ்வப்போது கண்டபாதங்களில் சிற்பங்களை வடிக்கச் சிற்பி எண்ணலாம். அப்போது சிற்பங்களுடனும் பாதங்களுடனும் கூடிய தாங்குதளம் கோட்டங்களையும் அரைத்தூண்களையும் கொண்ட ஒரு சுவரைப்போலக் காட்சியளிக்கும். சுவர் என்று ஒன்று இருந்தால் அதற்குக் கூரை என்ற ஒன்று தேவைதானே! இல்லாவிடில் வெறுமையாகத் தெரியுமே! அந்த அழகுணர்ச்சிக்காக அமைக்கப்படுவதுதான் கபோதம். இது என்னுடைய ஊகம். ஆகமங்களில் அமைப்பு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். இதுதான். இப்படித்தான். என்று இருக்கும். ஏன்? எதற்கு? எப்படி? என்பன இருக்காது.

சரி, கூரை உறுப்புகளில் கபோதம் மட்டும் இருந்தால் போதுமா? கூரையாகி விடுமா? மற்ற கூரையுறுப்புகளான வாஜனம், வலபி மற்றும் பூமிதேசம் ஆகியவை என்னவாயின? சில இடங்களில் இவையும் இருக்கும். சிற்பியின் கற்பனைத் திறனுக்கேற்றவாறு, பட்டிகைக்குக் கீழுள்ள கம்பு வாஜனமாகவும், கபோதத்தின் உட்பகுதி வலபியாகவும் மாறியிருக்கும். சில சமயம் இவ்வலபியில் தாமரைவரியோ பூதவரியோ இடம்பெற்றிருக்கும். பட்டிகைக்கு மேலிருக்க வேண்டிய மேற்கம்பு (உபரிகம்பு எனவும் கூறலாம்) பூமிதேசமாக உருப்பெற்றிருக்கும். அதில் யாளிவரியும் இருக்கும்.

இதை வைத்துக் காலத்தைக் கணிப்பது சற்றுக் கடினம்தான். ஏனெனில் தொடக்க காலக் கற்றளிகளில் ஒன்றான அத்யந்தகாமப் பல்லவேசுவர கிருஹத்திலேயே (தர்மராஜ ரதம்) இவ்வகைத் தாங்குதளம் இடம்பெறத் தொடங்கி விடுகிறது. ஆனால் மகேந்திரர் அமைத்த குடைவரைகளில் இத்தகைய தாங்குதளம் காணப்படவில்லை.

வர்க்கபேதம்

பத்திகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு தாங்குதளத்தின் ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு வகைத் தாங்குதளத்தைக் கொண்டிருந்தால் அது வர்க்கபேதமாகும். வர்க்கபேதங்களில் எல்லாத் தாங்குதளங்களும் கபோதபந்தமாகவே இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலும் நடுப்பத்தி கபோதபந்தத்தையே கொண்டிருக்கும். தாம்பரம் அருகிலுள்ள மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் ஆலயத்தின் தாங்குதளத்தைப் பாருங்கள்.

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.