http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 91
இதழ் 91 [ ஜனவரி 2013 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
சேரர் கோட்டை
"காந்தளூர் சாலை கலமறுத்தருளி..." - இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியில் இடம்பெறும் இந்த வாசகம், அநேகரை சிந்தனை வசப்படுத்தியுள்ளது.
பல வரலாற்று ஆய்வுகள் இருப்பினும், பொது முறையில் அமரர் சுஜாதா எழுதிய 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' எனும் புதினம் தான் ஒரே நூல். துரதிர்ஷ்டவசமாக அவர் அந்தக் கதையை பாதியிலேயே நிறுத்தி விட்டார். அது வசந்தகுமாரன் எனும் வீரனை பற்றியதாகவே இருந்தது. காந்தளூரை பற்றிய விபரங்கள் இரண்டாம் பாகத்தில் வரும் என்று குறிப்பிட்டார். ஆனால் அது அவர் வாழ்நாளில் நடக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, அதே திருவரங்கத்தை சேர்ந்த நமது நண்பர் கோகுல் அதே கதைக்களத்தை சேரர் கோட்டையில் விரிவாகக் கையாண்டுவிட்டார். ஒரு மிகப்பெரிய சாம்ராஜயத்தின் தலைநகரில், கோலாகலமாக நடைபெறப்போகும் விழாவின் போது பேரரசரை கொல்லசதி நடைபெறுவதாக துப்பு கிடைக்கிறது. இன்றைய சூழலில், சுதந்திர தினத்தின் போது பிரதமரை கொல்லசதி செய்வது போன்றது. இப்படிப்பட்ட ஒரு விறுவிறுப்பான கதையாக அமைந்தது இவரது முதல் புத்தகமான இராஜகேசரி. அதற்கு முற்காலத்தில் நடைபெறப்போகும் கதையாக சேரர் கோட்டை அமையும் என்று அறிவித்திருந்தார். 'வரலாறு.காம்' இணையதளத்தில் சேரர் கோட்டையை எழுதிக் கொண்டிருக்கும் போது கை வலியின் காரணமாக, பாதியில் நிறுத்தி விட்டார். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள், கதையின் போக்கு தெரியாமல் பித்து பிடித்து போனதற்கு பின் , திடீரென்று முழு நூலாக வெளிவருவதாக அவர் அறிவித்ததிலிருந்து எனக்க்குள் பெருத்த எதிர்பார்ப்பு. கதை மாந்தர்களின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களுக்கு நடுவில் சில சரித்திர நிகழ்வுகளை புகுத்தி எழுதுவதே வழக்கமான பாணி. பொன்னியின் செல்வன், இராஜகேசரி எல்லாமே அப்படித்தான். ஏதேனும் ஒரு துறையை எடுத்துக் கொண்டு, அதைப் பற்றிய விஷயங்களை கதையின் வாயிலாகவும், கதை மாந்தரின் வாயிலாகவும் சொல்வதென்பது ஒரு தனிக்கலை. ஆங்கிலத்தில்,'ஆர்தர் ஹைலி', என்பவர் இதில் கை தேர்ந்தவர். அவருடைய 'ஹோட்டல்', 'ஸ்ட்ராங் மெடிசின்', 'தி ஈவினிங் நியூஸ்', 'பெர்பெக்ட் டியக்நோசிஸ்', 'வீல்ஸ்' போன்ற கதைகள், ஹோட்டல்கள், மருந்து கம்பனிகள், தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் போன்ற துறைகளின் செயல்பாடுகளை கதைகளின் வாயிலாக திறம்பட விவரிப்பவை. அது போல, சாலை அமைப்புகளின் செயல்பாட்டையும், அங்கு கற்றுத்தரப்படும் வித்தைகளையும், கலமறுக்கும் போட்டிகளின் முறைமையையும், அதன் விவரங்களையும் இந்த கதையில் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார் கதாசிரியர். நம்முடைய சமகாலத்தில் இயங்கும் துறைகளை பற்றி தகவல் சேகரித்து எழுதுவது என்பதே கடினமான காரியம். இதில், பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட விஷயங்களை ஆராய்ந்து எழுதுவது சுலபமல்ல. நாகை, சோழர் காலத்தில் நிலவிய பௌத்த சமய முறை, சாலை அமைப்புகள், நம்பூதிரி குடும்பங்கள் என்று இப்புதினத்தில் கிடைக்கும் தகவல்களை படிக்கும் போது, கதாசிரியரரின் பெருமுயற்சி நன்கு புரிகிறது.Extensive research is all that I can say. இதற்காக அவர் பெரும்பாடுபட்டுள்ளார். கதை மாந்தர்களின் படைப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இரவிநீலி பட்டத்திரி, வாமணன், அச்சுதன், மாளிகைபுரத்து தம்பிராட்டியார், கம்பன் மணியனார், பரமன் மழபாடியார், ஆனந்த தேரர், மஹா காசியபர், பல்லவராயர், மாராயர், வள்ளுவ நாடுவாழியார், பாண்டியன் அமரபுஜங்கன், சடைய மாறனார், பாண்டிய அமைச்சர், ஒற்றர் படை தலைவன் ஐங்கரன், பலதேவன், சிறிது நேரமே வந்தாலும் அரசிகள் தந்தி சக்தி விடங்கி, பஞ்சவன்மாதேவி, எல்லாவற்றிர்க்கும் மகுடம் வைத்தாற் போல பேரரசர் அருள்மொழிவர்மர். ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகுந்த நேர்த்தியுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. At one point of time, you feel as though you are living amongst them. இது சாண்டில்யனுக்கு கைவந்த கலை. கோகுலும் செய்து விட்டார். A picture is worth a thousand words. வரைபடங்களின் மூலம் சில சம்பவங்கள் நடக்கும் இடங்களை விளக்குவதை இராஜகேசரியிலேயே திறம்பட செய்தார் கோகுல். இங்கும் அது பேருதவியாக உள்ளது. குறிப்பாக, தஞ்சையில் ஐங்கரன் உளவறியும் இடத்தையும், காந்தளூர் சாலையின் அமைப்பையும் வரைபடங்களாக காட்டியிருப்பது நன்று. Cosmic Theory. இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரண காரியங்கள் உண்டு. எதுவுமே தற்செயலாக நடைபெறுவதில்லை. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு சக்தி உண்டு. அது, இந்த பிரபஞ்சத்தின் சக்தியில் ஒரு பகுதி. இரண்டும் இயைந்து நடந்தால், நம்முடைய முழு சக்தி வெளிப்படுவது உறுதி. இதில் எனக்கு எப்போதுமே பலத்த நம்பிக்கை உண்டு. இதை இக்கதையில், மிகவும் அழகாக கையாண்டுள்ளார் கதாசிரியர். பரமன் மழபாடியருக்கும், கம்பன் மணியனாருக்கும் இடையே மலரும் நட்பு ரசிக்கும் படியாக உள்ளது. வேறுபட்ட பின்புலங்கள் மட்டுமன்றி, சமூக அந்தஸ்தில் ஏற்றத்தாழ்வு உள்ளவர்கள் ஆனபோதும், இருவரும் ஒருவருக்கொருவர் காட்டும் பரஸ்பர அன்பும், மரியாதையும், புரிந்து கொள்ளலும், அக்கறையும், பரிவும் உள்ளம் தொடுகின்றன. கதையில் வரும் பற்பல சம்பவங்களைக்க் கூறி, இங்கே கதையின் சஸ்பென்சை நான் உடைக்க விரும்பவில்லை. ஆனால், கதையின் அநேக கட்டங்கள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. ஆம், ஒரு கைதேர்ந்த சிற்பி, உளியைக் கொண்டு சிற்பம் சமைக்கையில், மிகுந்த கவனம் தேவை. ஏனெனில், தவறை திருத்திக் கொள்ள இடமில்லை. தஞ்சை, நாகை, விழிஞம், கழிக்குடி, காந்தளூர் என்று மாறி, மாறி நடக்கும் சம்பவங்களை, ஒரு கோர்வையாக தொடர்பு விட்டுப் போகாமல் தொடுத்துள்ளார். கதையின் கடைசி பகுதியில், சாலையின் பல்வேறு பிரயோகங்கள், அவற்றின் வடமொழி தியான ஸ்லோகங்கள், பயிற்சியின் மற்றும் கதையின் மிக முக்கிய அம்சமான 'நரசிம்ம பிரயோகம்', என்று கதை மிகவும் ஆழ்ந்து படுகின்றது. High-level intensity. வெறும் கதையாக மட்டுமே படிக்க முடியவில்லை. கதையின் நிகழ்வுகளில் நாமும் ஒன்றிப் போய் விடத் தான் வேண்டும், வேறு வழியில்லை! இறுதி அத்தியாயங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, கதாசிரியர் என்னிடம் அவற்றை எழுத மிகுந்த அவஸ்தைப்பட்டதாக கூறினார். அவர் அவ்வளவு துன்பப்பட்டதினால்தான், இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. இசை மேதை MS அம்மா குறிப்பிடும் போது, தனக்கு குருவருள் மற்றும் பெரியோரின் ஆசி இருந்ததால் தான் முன்னேற முடிந்ததாக குறிப்பிட்டார். அது போல, கதையில் தம்பிரட்டியாரும், மழபடியாரும் குருக்களின் ஆசியையும், முன்னோரின் ஆசியையும் வேண்டுவது மிகுந்த மனநிறைவை தருகின்றது. பல படையெடுப்புகளை நடத்தி, மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவிய ஒரு பேரரசர். அவர் பேரரசராக உருவெடுத்த காலத்தில் - formative years - எப்படி இருந்திருப்பார் என்பதற்கு, இந்த கதை மிக அற்புதமான எடுத்துக்காட்டு. வீரம், பக்தி, கட்டுக்கோப்பு, நிதானம், எளியவரை அனைத்து செல்லுதல், குரு பக்தி, கடமையுணர்ச்சி, சிறிய விசயங்களை கூட நுண்ணியமாக ஆராய்வது - attention to detail - தெளிவான சிந்தனை - clarity in thiught , இராஜதந்திரம், எல்லாவற்றிற்கும் மேலாக - magnanimity, என்று 'அருள்மொழி', என்னும் மனிதனின் பல்வேறு பரிணாமாங்களையும் காட்டுகிறார் ஆசிரியர். கடைசி பக்கத்தில் இராஜராஜரின் 'ஹா ஹா ஹா' என்னும் பெருஞ்சிரிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவசியம் குறிப்பிட வேண்டிய விஷயம். எவரும் வில்லனாகக் காண்பிக்கப்படவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரவர் நடந்துக் கொண்டதை போலத் தான் காட்டப்பட்டிருக்கின்றனர். மேலும், பாண்டியரை எதிரி என்ற பெயரில் மோசமாக சித்தரிக்காமல், மிகுந்த கண்ணியமாக காட்டியுள்ளார். இறுதிக் கட்டத்தில் பாண்டியர் தன் வீரர்களுக்கு ஆற்றும் உரை நெகிழ வைக்கிறது. கதையில் ஆங்காங்கே வரும் அடிக்குறிப்புகள்,. என்னைப் பொறுத்த வரையில் as usual, Gokul Style, அவை கதையின் ஓட்டத்திற்கு நெருடலாகவோ, தடையாகவோ இல்லை. கதையின் நிறைகுறைகளை பார்க்கும் போது, நிறைகளை பார்த்தாகி விட்டது. ஓரிரண்டு குறைகள். மதுரவாசகியின் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் விரிவாக காட்டப்பட்டிருக்கலாம். She is the link connecting Rajakesari and this book. அது இல்லாததால், இது ஒரு தனிக்கதை மாதிரி தான் இருக்கிறது. prequel என்பதற்கு பெரிய பொருத்தம் இல்லை. ஐங்கரனின் நிலை அறுதியாக அறிவிக்கப்படவில்லை, it is hanging in the air. இவற்றை தவிர்த்து வேறொன்றும் இல்லை. நீண்ட நாட்களுக்கு பின், ஒரு நல்ல புத்தகத்தை படித்த மன நிறைவை கொடுத்து விட்டார் கதாசிரியர். இதன் பின்னர், அவரது அயராத உழைப்பும், திறனும் உள்ளன. அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |