http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 8

இதழ் 8
[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தோம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 1
மத்தவிலாசப் பிரகசனம் - 5
நாளிதழ்களில் வரலாறு டாட் காம்
சீவரமுடையார் குடைவரையும் கல்வெட்டுகளும்
பழுவூர் - 1
கல்வெட்டாய்வு - 6
இராஜராஜரின் வெற்றிகள்
கட்டடக்கலைத் தொடர் - 7
யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை
நார்த்தாமலையை நோக்கி...
அழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்
Genesis of Vimana in Pallava Art
சங்கச்சாரல் - 7
இதழ் எண். 8 > கதைநேரம்
மத்தவிலாசப் பிரகசனம் - 5
மகேந்திரவர்ம பல்லவர்
<பைத்தியக்காரன்> : அதோ, அதோ இருக்கிறது அந்தப் பொல்லாத நாய். பொரித்த கறியுடைய கபாலவோட்டை எடுத்துக்கொண்டு ஓடுகிறாய். அயோக்கியனே, எங்கே போவாய்? இப்பொழுது மண்டையோட்டைக் கீழே போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடி வருகிறது. (சுற்றிப் பார்த்து) நான் அதனுடைய பற்களை இந்தக் கல்லால் பொடியாக்கிவிடுவேன். கேடு கெட்ட பைத்தியக்கார நாயே, ஏன் கபாலவோட்டைப் போட்டுவிட்டு ஓடுகிறாய்? இந்த வீரத்தனத்தில் என்னிடத்தில் ஏன் கோபப்படுகிறாய்? நாட்டுப்புறப் பன்றியின் முதுகின்மீது ஏறி உயரே ஆகாயத்தில் குதித்தேன். சமுத்திரத்தை ஆயுதமாக்கி ஐராவத யானையை வீழ்த்தினேன். இந்திரனின் பிள்ளை மிருக ஜந்து அந்தத் திமிங்கிலத்தையும் பிடித்தேன். ஓய் ஆமணக்கு மரமே, நீ என்ன சொல்லுகிறாய்? அது பொய், பொய் என்றா சொல்லுகிறாய்? இதனால் கொழுத்த குளவி போன்ற கையுடைய இந்தச் சொறித் தவளை இருக்கிறானே அவன் தான் நமக்குச் சாட்சி. ஏன்? மூன்று உலகத்திற்கும் வீரத்திற்குப் பெயர் பெற்ற ஒருவனுக்குச் சாட்சிக்கு என்ன தேவை இருக்கிறது? நான் இப்படிச் செய்கிறேன். நாய் விட்டுப்போன கறித்துண்டை நான் உண்ணுகிறேன். (சாப்பிடுகிறான். பைத்தியம் தலைக்கேறுகிறது). கண்ணீரே என்னைக் கொல்கிறது. (அவன் புலம்பி அக்கம்பக்கம் பார்க்கிறான்) யார் என்னை அடிப்பது? (சுற்றிப் பார்த்து) துஷ்டப் பயல்கள், வீமசேனனுக்கு கடோத்கஜனைப்போல் நான் ஒருவருடைய மருமகன்.

இன்னுங்கேள்:

கழுமரம் தாங்கி நூறாம் பேய்கள்
பல பல வடிவினிலுள வென் வயிற்றினில்
அங்காந் தென்றன் வாய் திறந்தாலே
மருட்டும் புலியுடன் மலைத்தலைப் பாந்தள்
நூறினை யானும் உமிழ்ந்திடுவேனே;
எனையவை யப்படி வதைக்கின்றனவே!

தயவுசெய்து கொடிய இளைஞர்களே வேண்டாம். இந்தக் கறித்துண்டுக்காக என்னை வதைக்க வேண்டாம். (சுற்றிப் பார்த்து) நமது ஆசான் சுரநந்தி அதோ இருக்கிறார். நான் அவரிடமே போகிறேன்.

(அவன் ஓடுகிறான்)

<பாசுபதன்> : ஓய், அந்த பைத்தியக்காரன் இங்கே வருகிறான். அவனைப்பார்:

புழங்கிய ஒட்டுக் கிழிசல் கந்தை
மழியாத் தூசுப் பரட்டைக் கேசம்
பழகிய தாரைத் திரளாய்ச் சுற்றி
விலக்கிய உணவுத் துகள்கள் கொள்ள
வலஞ்செய் காகக் கூட்டஞ் சூழ
மனுடர் உருவங் கொண்டே திரியும்
நாட்டுக் குப்பைப் போலா வானே.

<பைத்தியக்காரன்> : நான் அவனிடம் போகிறேன். (நெருங்கி) ஆண்டவனே, ஒரு சண்டாளனுக்குச் சொந்தமான ஒரு பெருந்தன நாயிடமிருந்து நான் பெற்ற இந்த பிச்சைக் கபாலத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.

<பாசுபதன்> : (அதைச் சுற்றிமுற்றும் பார்த்துவிட்டு) தகுதியான ஒருவனுக்குக் கொடு.

<பைத்தியக்காரன்> : ஆன்ற அந்தணனே, மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்.

<துறவி> : இந்த மதிப்பிற்குரிய பாசுபதனே இதற்குத் தகுதியுடையவர்.

<பைத்தியக்காரன்> : (கபாலியின் முன்னே சென்று முதலில் கபாலவோட்டை அவன் பூமியிலே வைக்கிறான். பின்பு இடமிருந்து வலமாக அவனைச் சுற்றிவந்து அவனது கால்களில் விழுகிறான்.) மிகப்பெரிய ஆண்டவனே, மகிழ்ச்சி பெறுக. உமக்கு வணக்கங்கள்.

<கபாலி> : இது எங்களுடைய கபாலவோடு!

<தேவசோமா> : இதுதான்!

<கபாலி> : ஆண்டவன் புண்ணியத்தில் நான் மீண்டும் கபாலியாகி விட்டேன். (அவன் அதை நெருங்குகிறான்)

<பைத்தியக்காரன்> : அயோக்கியனே நஞ்சைத் தின்னு!

(கபாலவோட்டை அபகரித்துக்கொண்டு போகிறான்)

<கபாலி> : (திரும்பி) இந்த எமகாதகன் என் உயிரை எடுத்துக் கொண்டு போகிறானே. நீங்கள் இருவரும் என்னைக் காப்பாற்றுங்கள்.

<இருவரும்> : நல்லது, நாங்கள் உதவுகிறோம்.

(எல்லோரும் வழிமறிக்கிறார்கள்)

<கபாலி> : ஏய், நில்லு, நில்லு!

<பைத்தியக்காரன்> : என்னை ஏன் தடுக்கிறார்கள்?

<கபாலி> : எங்களது கபாலவோட்டைத் தந்துவிட்டுப் போ.

<பைத்தியக்காரன்> : முட்டாளே, தெரியவில்லை? இது ஒரு பொற்கிண்ணம்.

<கபாலி> : யார்தான் இது மாதிரி தங்கக் கிண்ணம் செய்திருப்பார்கள்?

<பைத்தியக்காரன்> : நான் ஏன் இதை ஒரு பொற்கிண்ணம் என்கிறேன் என்றால் பொன்னாடைகளையே அணிந்து கொள்ளுகிற ஒரு தட்டானின் மைத்துனனால் இது செய்யப்பட்டது.

<துறவி> : நீ என்ன சொல்லுகிறாய்?

<பைத்தியக்காரன்> : இது ஒரு பொற்கிண்ணம்.

<துறவி> : என்ன, இவன் ஒரு பைத்தியக்காரனா?

<பைத்தியக்காரன்> : நான் அடிக்கடி கேட்கிற சொல், பைத்தியக்காரன்; இதோ இதை வைத்துக்கொள், பைத்தியக்காரனை எனக்குக் காட்டு.

(அவன் கபாலவோட்டைக் கபாலியிடம் தருகிறான்)

<கபாலி> : (கபாலவோட்டை எடுத்துக்கொண்டு) அவன் இப்பொழுதுதான் அந்தச் சுவருக்குப் பின்னால் போயிருக்கிறான். சீக்கிரம் அவன் பின்னாகப் போ.

<பைத்தியக்காரன்> : புண்ணியம் பெற்றேன்.

(பைத்தியக்காரன் வேகமாகப் போகிறான்)(\

<துறவி> : ஆ, அழகு, என் எதிரிக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்திற்காக மகிழ்ச்சியடைகிறேன்.

<கபாலி> : (கபாலவோட்டை அரவணைத்துக்கொண்டு)

காலம் பலவும் பல கலையாத் தவமியற்றி
மகேசுரனுக்கு என்னை நான் கொடுத்திருந்தேன்
புனித கபாலமுனைக் கண்ட இக்கணமே,
இமைத்தக் களிப்பினிலே எந்தனுள்ளம் விட்டு
அமலன் அவனுமுடன் ஏகிவிட்டனே!

<தேவசோமா> : ஆண்டவனே, மாலை இருளில் சேர்ந்த நிலவைப்போல உம்மைப் பார்க்க எனது கண்களுக்கு இன்பமாக இருக்கிறது.

<பாசுபதன்> : அதிர்ஷ்டவசமாக நீர் ஜெயித்தீர்.

<கபாலி> : இந்த அதிர்ஷ்டம் உம்முடையதுதான்.

<பாசுபதன்> : (தனக்குள்) சூதும் வாதுமில்லாதவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அதுதான் இந்தப் பௌத்தத் துறவி இந்தப் புலியின் வாயிலிருந்து தப்பியிருக்கிறார். (சப்தமாக) நமது நண்பனுடைய நல்ல அதிர்ஷ்டத்தை நான் கிழக்குத் தேவதையின் புகைமண்டும் அந்தி வேளைக்காகக் காத்திருக்கும் வேளை நினைவில் வைத்திருப்பேன். மேலும் இனிமேல்:

அனாதித் தீர்வின்படி
அமைந்த இத் தருக்கம்
கிராத அர்ச்சுனரின் அந்த பூசலைப்போல்
காலம் உள்ளவரை கலந்த களிப்பினுக்கு
மூல காரணமாய் நின்றிலங்கிடுக.

(பாசுபதன் வெளியேறுகிறான்)

<கபாலி> : ஓ, நாகசேனரே, என்னுடைய குற்றங்களை மன்னித்துவிடும்படி வேண்டுகிறேன்.

<துறவி> : அதில் என்ன இருக்கிறது? உன்னை மகிழச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?

<கபாலி> : என்னால் நீங்கள் மகிழ்வீர்கள் என்றால் அதைவிட எனக்கு என்ன வேண்டும்?

<துறவி> : நான் போகட்டுமா?

<கபாலி> : நல்லது. மீண்டும் சந்திக்கலாம்.

<துறவி> : அப்படியே. (அவர் புறப்படுகிறார்).

<கபாலி> : அன்பே தேவசோமா, நாம் போகலாம்.

(வாழ்த்துரை)

முறை முறை மனுடர் நலமது பெறுக
குறையறு பலிகள் எரியிறை கொள்க
மறைதனை அந்தணர் இடையற ஓதுக
நிறைவாய் ஆவினம் பால் பொழிந்திடுக
கறைவளர் மதி, மீன் நிலைக்கிற நாள்வரை
நரைகிளர் பிணியின்று மனுக்குலம் மீள்க
வருபகை தனைமிகத் திறமொடு களைந்திடு
சத்ருமல்லர் ஆட்சியினுட் பட்டு
கடமையே தாமாய் மக்களும் வாழ்க!

(இருவரும் போகிறார்கள்)

- மத்தவிலாச அங்கதம் முற்றிற்று -





'Mattavilasa Angatham' ('Mattavilasa Prahasanam') A Translation into Tamil by E. John Asirvatham Of King Mahendravarman's Sanskrit Farce Published by The Christian Literature Society (copyright 1981 by Michael Lockwood), which, in turn, was Based on the Edition and Translation in English Of Mahendravarman's original Sanskrit Text By Michael Lockwood and A. Vishnu Bhat Published by The CLS (copyright 1981 by Michael Lockwood)



this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.