http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 99
இதழ் 99 [ செப்டம்பர் 2013 ] இந்த இதழில்.. In this Issue.. |
மிகுந்த வெற்றிப்புகழும் நிகரில்லாக் கொடையும் உடைய தலைவன் அவன். கொண்கான மலை அவனுக்கு உரிமையுடையது. பெரும் வள்ளலான அக்கொண்கானங்கிழானின் பெருமைமிகு கொடைத்திறத்தை மோசுகீரனார் எனும் சங்கப்புலவர் காட்டில் பூக்கும் சிறு நெருஞ்சியின் இயல்பைக் கொண்டு உவமித்துப் பாடுகிறார். அப்புறநானுற்றுப் பாடல் இதோ
'வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க எனக் கிளருக்கும் பாண! கேள் இனி நயத்தின் பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் கொண்டு பெருங்கானத்துக் கிழவன் தண்தார் அகலம் நோக்கின மலர்ந்தே.' - புறநானுறு - 155 (துறை; ஆற்றுப்படைத்துறை திணை; பாடாண்திணை) விளக்கம் வளைந்த கோட்டையுடைய சிறிய யாழினை உலர்ந்த மருங்கிலே கைக்கொண்டு 'என் துன்பம் அறிந்து என் துயர் தீர்ப்பவர் யாவரோ?எனச் சொல்லும் பாணனே! இனி கேள் நயத்துடன் நான் சொல்வதை. போரிலோர் வீழ்ந்து பட்ட பாழ் ஊரின் கண் பூக்கும் பொன்னிறத்தையுடைய தூய்மையான நெருஞ்சிப் பூவானது கதிரவனை எதிர்கொண்டு மலர்ந்தது போல புலவரது உண்கலம் ஆனது புகழ் கொண்ட கொண்கானக் கிழானது மாலையணிந்த மார்பை நோக்கி மலர்ந்திருக்கக் காண்பாய். ஆங்கு நீயும் செல்க!' என்பதாம். இப்பாடலை கூர்ந்து அவதானிக்கும்போது சங்கத் தமிழரின் தாவர அறிவியல் நுட்பத்தை அறியலாம். நெருஞ்சிப் பூவானது கதிரவன் இருக்கும் திசை நோக்கியே முகம் மலரும் என்ற இந்த அரிய தாவரவியல் பதிவு, தமிழர் இயற்கையின்பால் கொண்ட நுண்ணறிவிற்குச் சிறந்த சான்றாகும். என்னே நம் சங்க கால மக்களின் அறிவியல் பார்வைகளும் பதிவுகளும்! 2000 வருடங்களுக்கு முன் கூர்ந்து ஆய்ந்து செய்யப்பட்ட அறிவியல் பதிவுகளில் இதுவுமொன்று. படிக்கப் படிக்க நம்மை வியப்பிலாழ்த்தி அறிவு வளத்தை மேம்படுத்துகின்றன சங்கப் பாடல்கள்.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |