http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 8

இதழ் 8
[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தோம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 1
மத்தவிலாசப் பிரகசனம் - 5
நாளிதழ்களில் வரலாறு டாட் காம்
சீவரமுடையார் குடைவரையும் கல்வெட்டுகளும்
பழுவூர் - 1
கல்வெட்டாய்வு - 6
இராஜராஜரின் வெற்றிகள்
கட்டடக்கலைத் தொடர் - 7
யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை
நார்த்தாமலையை நோக்கி...
அழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்
Genesis of Vimana in Pallava Art
சங்கச்சாரல் - 7
இதழ் எண். 8 > கதைநேரம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 1
ஆசிரியர் குழு
டாக்டர் இரா.கலைக்கோவன் வழங்கிய நூல் அறிமுக உரை


மதிப்பிற்குரிய திரு பரமநாதன் அவர்களே
இந்த விழாவை அலங்கரித்துக்கொண்டிருக்கும் என் அருமை நண்பர்கள் திரு இராஜவேலு அவர்களே
தஞ்சாவூர் வரலாற்று ஆய்வறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களே
இந்த விழாவைப் பெருமைப்படுத்திக்கொண்டிருக்கும் என் அருமை நண்பர்கள் டாக்டர் பழனியாண்டி மருத்துவர் நரேந்திரன் அவர்களே
இந்த விழாவிற்காகவே நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கும் இனிய நண்பர்களே
இந்த விழாவில் வரலாறு சிறப்பிதழைப் பெறுவதற்காக வந்திருக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியரும் என் அருமை இளவலுமான இரா.அரசு அவர்களே

உங்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் பெருமையடைகிறேன்.

வரவேற்புரை நிகழ்த்திய திரு கிருபாசங்கர் அவர்கள் நிறைய அற்புதமான செய்திகளை பதிவு செய்து வழங்கினார். அவர் வெண்பா இயற்றுவதில் வல்லவர். இந்த வெண்பா நண்பர் எல்லோரைப் பற்றியும் வெண்பா பாடினார். ஆனால் அவரை யாராவது அறிமுகப்படுத்தவேண்டுமே என்றுதான் நானும் ஒரு வெண்பா எழுதியிருக்கிறேன்.

நான் என்ன வெண்பா எழுதினாலும் அவர் அது தளை தட்டுகிறது என்பார். அவரைத்தவிர யார் வெண்பா எழுதினாலுமே அவருக்குத் தளை தட்டும். எது தட்டினாலும் பரவாயில்லையென்றுதான் அவருக்காக நான் ஒரு வெண்பா தட்டியிருக்கிறேன்.

சுடர் முடி சுந்தரப் புன்னகை மென்பொருள்
இடர்களை ஆற்றல் ஏறல் வீறு - படர்கிற
பாசத்தில் வைத்தபேர் பினாகு, (இந்து) அழைத்தது
நேசமுடன் டிபி என்று

(டிபி- Technical Brain behind varalaaru.com)

நண்பர்களே - பெண்தெய்வ வழிபாடு என்கிற இந்த நூல் பத்து கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்டுரைகள் பெண் தெய்வங்களைப் பற்றியும் இரண்டு கட்டுரைகள் பிள்ளையார் வழிபாடு பற்றியும் அமைந்திருக்கின்றன. மேலும் இரண்டு கட்டுரைகள் கல்வெட்டுக்களைப் பற்றியும் ஒரு கட்டுரை கோயில் ஆய்வு நெறிமுறைகள் பற்றியும் அமைந்திருக்கின்றன. இரண்டு கட்டுரைகள் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வு தொடர்பானது. இந்தப் பத்து கட்டுரைகளையும் கள ஆய்வு செய்து மிகுந்த உழைப்பிற்குப் பின் நூலாக்கியிருக்கிறோம்.





பனைமலை தலகிரீசுவரர் கோயிலின் அரிய பல்லவர்கால ஓவியத்தை அட்டையில் தாங்கி நிற்கும் பெண் தெய்வ வழிபாடு புத்தகம்


இந்த நூலுக்கு ஒரு பின்னணி இருக்கிறது.

இந்தப் பொன்னியின் செல்வன் குழுவினர் வந்தியதத்தேவன் சென்ற பாதையிலேயே அவன் கண்ட இடங்களையெல்லாம் தாமும் காணவேண்டுமென்று பயணம் புறப்பட்டு திருச்சிராப்பள்ளிக்கு வந்தியத்தேவன் வரவில்லையென்றாலும்கூட இவர்கள் வந்து எங்கள் ஆய்வு மையத்தைப் பார்த்தபொழுது எங்களுக்குள் உறவு முகிழ்த்தது. அந்த உறவின் காரணமாய் ஒரு நட்பு ஏற்பட்டு சின்ன வளையமாகி பஞ்ச பாண்டவர்கள் என்று சொல்லக்கூடிய அளவிலே ஒரு குழு அமைந்தது.

இந்தக் குழுவை நடத்திச்செல்ல ஒரு இனிய மனிதர் கிடைத்தார். திரு சுந்தர் பரத்வாஜ் - சென்னையிலிருந்து அவர் இங்கே வந்திருக்கின்றார். அவரை நாங்கள் விளையாட்டாக பெரியண்ணன் என்று அழைப்போம். வீட்டுப் பெரிய மனிதரென்றால் அவருக்கு மேல்வார்த்தையே கிடையாது. அன்பின் காரணமாக அவர் சொல்வதற்கெல்லாம் நாங்கள் அரவணைத்துப் போவோம்.

அவரோடு ஒருநாள் மெரினாக் கடற்கரையில் அமர்ந்து உரையாடும் வாய்ப்பு எனக்கும் நளினிக்கும் கிடைத்தது. அப்போது நான் சொன்னேன் - ஏராளமான ஆய்வுகள் செய்து வைத்திருக்கிறோம். வெளியிடுவதற்கு வாய்ப்பில்லை.

எது சொன்னாலும் அதற்கு உடனடியாக தீர்வு காண்பவர் பரத்வாஜ். அவரைப் பார்க்கலாம் இவரைப் பார்க்கலாம் என்று மளமளவென்று ஐந்து நிமிடங்களுக்குள் திட்டங்கள் தீட்டினார்.

நான் சொன்னேன் - எங்கேயும் போகவேண்டாம். நாமே செய்ய முடியும். ஆனால் நாம் ஒருங்கிணைய வேண்டும் என்று சொன்னேன்.

ஆளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்தால் ஐந்து பேர்கள் என்றாலும் ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேர்ந்துவிடும். ஒரு புத்தகம் கொண்டுவர முடியும். ஆண்டுக்கு இரண்டு நூல்கள் கொண்டு வரலாம். இரண்டாண்டுகளுக்கு அப்படிக் கொண்டு வந்தால் பிறகு நூலகங்கள் வாங்குகின்ற அந்த பதிப்பகத் தொகை கொண்டே தொடர்ந்து நூல்கள் வெளியிட வாய்ப்பாக இருக்குமென்று சொன்னேன்.

உடனே ஒப்புக்கொண்டார். அவருடன் இணைந்த நண்பர்கள் இராமசந்திரன், கோகுல், கமலக்கண்ணன், செல்வி இலாவண்யா. இந்த ஐந்துபேரும் சென்ற ஜூன் மாதத்திலிருந்து மாதந்தோறும் அவர்கள் வாங்குகின்ற ஊதியத்திலிருந்து தலைக்கு ஆயிரம் ரூபாய் சேமித்து மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் என்று ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேமித்து மேற்கொண்டு ஒரு ஐந்தாயிரமும் கொடுத்து இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே நான் பூரித்துப்போய்ச் சொல்கிறேன் - தமிழ்நாட்டு வரலாற்றுக்கு இப்படி ஒரு குழு அமையுமானால் சரியான வரலாற்றை சரியான தரவுகளோடு எழுதிவிடலாம்.

அறியாத தமிழ்நாட்டு வரலாற்றை எழுத இங்கு ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். வெளியிடுவதற்குத்தான் சரியான ஆட்களில்லை.

தகுதியான ஆட்கள் கிடைப்பார்களென்றால் - வெள்ளையாம்பட்டு சுந்தரம் - ஏன் நான் இல்லையா ? என்பதுபோல் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் - சேகர் பதிப்பகத்தின் உரிமையாளர் அவர்.

ஒருவர் எவ்வளவுதான் செய்ய முடியும் ?

ஆங்காங்கே இதுபோன்ற சிறுசிறு குழுக்கள் அமையுமானால் - நல்ல உள்ளங்கள் ஒருங்கிணையுமானால் - நூல்கள் வெளிவர முடியும். அதற்கு இங்கே வெளியிடப்பட்ட "பெண் தெய்வ வழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும்" என்ற நூல் ஒரு மிகச் சிறந்த சான்று.

நண்பர்களே - இந்த நூல் நான் எழுதிய நூல். அதனால் மட்டும் நீங்கள் வாங்க வேண்டுமென்று சொன்னால் அது சரியாக இருக்காது.

ஆனால் அதேசமயம் ஒரு ஆய்வாளன் என்ற முறையில் உங்களை நான் வேண்டிக் கொள்கிறேன். இந்த விழாவிற்கு வந்துள்ள ஒவ்வொருவரும் இந்த நூலை வாங்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

காரணம் இருக்கிறது. இந்த நூல் வருமானம் முழுவதும் - நமது நண்பர்கள் போட்ட தொகை தவிர - மிச்சத் தொகை முழுவதும் இந்த ஆய்வு மையத்தின் வரலாற்று ஆய்வுப்பணிகளுக்காக மட்டுமே செலவிடப்பட இருக்கின்றன.

மிகச் சிறந்த செய்திகளை கடுமையான உழைப்பின் பேரில் கட்டுரைகளாக்கி நூல்களாக்கி வெளியிடும் நிறுவனம் இது என்பதனால் இந்த வேண்டுகோளை உங்கள்முன் வைக்கிறேன்.

இதை வெளியிடுவதற்கு யாரை அழைக்கலாம் என்பது பற்றி யோசித்தபொழுது நான் முதன்முதலாக நினைத்துச் சொல்லிய பெயர் திரு பரமநாதன் என்பது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையில் ஒரு முதுநிலை பராமரிப்பு அலுவலராக தஞ்சை இராஜராஜீஸ்வரத்தை நிர்வகித்து வருகின்ற மிகப்பெரும் உழைப்புக்குப் பொறுப்பாளர் அவர்.

நாங்கள் இந்தக் கோயிலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஆறுமாத காலமும் எங்களோடு ஒத்துழைத்து நாங்கள் செய்கின்ற பணிகளுக்கெல்லாம் துணைநின்று எப்போது வந்து கேட்டாலும் எந்தவிதமான உதவியாக இருந்தாலும் தயங்காமல் செய்த - செய்கின்றவர். இந்தக் கோயிலைப்பற்றிய சில உண்மைகளை வெளிக்கொணர வாய்ப்பளித்த பெரிய மனிதர் அவர்.

உயர்நிலை அதிகாரி திரு தியாக சத்தியமூர்த்தி அவர்கள் இன்றைக்கு தொல்லியல் அளவீட்டுத் துறையின் இயக்குனர். தமிழ்நாடு முழுவதும் தொல்லியல் துறையின் அரவணைப்பில் உள்ள கோயில்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் திரு தியாக சத்தியமூர்த்தி அவர்கள். அவரே இந்த விழா நிகழ்வுக்காக வருவதாக இருந்து பின்னால் சில சூழ்நிலைகளால் வரஇயலாமல் போய்விட்டது.

நண்பர்களே ஒரு நூல் எழுதப்படுவது பதிப்பிக்கப்படுவது வெளியிடப்படுவது என்பன மட்டும் முக்கியமல்ல. யார் அந்த நூலை வாங்குகிறார்கள் ? என்பதும் முக்கியம்.

முதல் பிரதிகள் பெற்றுக்கொண்டவர்களை நான் தேர்ந்தெடுத்து அழைத்திருக்கிறேன். பொருள் கருதி அல்ல - அவர்கள் மனம் கருதி.

அந்தப் பட்டியலில் முதலில் நிற்கின்றார் அருமை நண்பர் சுந்தர் பரத்வாஜ். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எங்களோடு பழகியவர் அவர். எழுத்தாளர் பாலகுமாரனின் நண்பர் என்று சொல்லி எங்கள் ஆய்வு மையத்திற்கு வந்தவர். நான்கூட ஆய்வு பற்றிய செய்திகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக வந்திருக்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன்.

தஞ்சாவூர் என்று சொன்னால் மெய்சிலிர்த்துப் போகக்கூடிய கண் இமைகள் நனைகின்ற அளவுக்கு உள்ளத்தால் உருகக்கூடிய ஒரு மனிதர் தமிழ்நாட்டில் உண்டென்றால் - நான் நினைக்கிறேன் - அது சுந்தர் பரத்வாஜ்தான். சோழ நாட்டின்மேல் அப்படியொரு பற்று ! "சுற்றுப்புறம் எந்தப் பகுதிக்கு வந்தாலும் இந்த மண்ணை மிதிக்காமல் போனதில்லை !" என்று உறுதியாகச் சொல்லக்கூடிய அளவிற்கு இந்த மண்ணின் மீதும் பேரரசர் இராஜராஜன் மீதும் பற்றுடையவர்.

எப்போது எங்கள் மையத்திற்கு வந்தாலும் - அவருக்குத் தேவையோ இல்லையோ - வரலாறு இதழ்கள் ஏதாவது உள்ளனவா என்று கேட்பார். நாங்கள் இருப்பதைக் கொடுப்போம். உடனே தன் பையில் என்ன கிடைக்கிறதோ - அது எத்தனை தொகையாக இருந்தாலும் - கொடுத்துவிட்டுப் போவார். இதுவரை அவர் கொடுத்துள்ள தொகையை எண்ணிப் பார்த்தால் அது தாராளமாக இருபதாயிரம் - முப்பதாயிரம் இருக்கும். அந்த அளவிற்கு அன்புள்ளம் உடையவர். தொகை பெரிதல்ல - ஆனால் அந்த மனம் !

நாங்கள் வரலாறை எடுத்துக்கொண்டு எத்தனையோ கதவுகளைத் தட்டியிருக்கிறோம் - எத்தனையோ படிக்கட்டுக்களில் ஏறியிருக்கின்றோம் - எத்தனையோ பெரிய மனிதர்களை சந்தித்திருக்கின்றோம் - அரசியல்வாதிகள் உட்பட. ஆனால் தட்டியவுடன் அத்தனை கதவுகளும் மூடிக்கொண்டன. எங்களைப் பார்த்தவுடன் மூடிக்கொண்ட கதவுகள்கூட உண்டு. தட்டித் தட்டியும் திறக்காத கதவுகள் உண்டு.

ஆனால் இந்த மனிதர் - வரலாறு வளரவேண்டுமென்பதற்காக - தேடிவந்து கொடுத்தவர். அவருக்கு தனிப்பட்ட ஆய்வாளர்கள் முக்கியமல்ல - சரியான செய்திகள் வரவேண்டுமென்று முனைபவர்.

அப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதர் - அவருடைய மனம் மணக்கின்ற மனம். முதல்படி வாங்க வந்திருக்கிறார்.

இரண்டாவதாக என் இனிய நண்பர் தஞ்சாவூர் சிங்கம் டாக்டர் நரேந்திரன் அவர்கள். இவருடன் எனக்குப் பலஆண்டுகளாகப் பழக்கம். இன்றைக்குத் தமிழ்நாட்டில் அறிவியல் தமிழை மருத்துவத் தமிழை தமிழில் சொல்லுகின்ற முதல் மனிதர் - ஒரே மனிதர்.

எத்தனை நூல்கள் எழுதியிருப்பார் என்று அவருக்கே கணக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. மிக எளிமையான கட்டுரைகள் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே அவரைத் தெரியும். ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வோம்.

அவர் "காடுமேடெல்லாம் திரிந்து புல் புதர் பார்க்காமல் கல்வெட்டெல்லாம் கொண்டுவருகிறீர்களே !" என்பார். நான் "கண்டுபிடிக்க முடியாத வார்த்தைகளுக்கெல்லாம் தமிழ் வார்த்தை கண்டுபிடித்து அறிவியல் துறைக்கும் மக்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கிறீர்களே !" என்பேன்.

அவருக்கும் விற்பனை குறைவு - எனக்கும் குறைவு. நாங்கள் ஒருவரையொருவர் தட்டிக்கொடுத்துக்கொள்வோம் - ஏனென்றால், இங்கே தட்டிவிட ஆளில்லை.

மிகச்சிறந்த தமிழறிஞர். ஆய்வு நோக்கு உடையவர். பணம் கருதாது புத்தகங்களை வெளிக்கொண்டு வருபவர். தமிழில் மருத்துவ நூல்கள் வரவேண்டும் - மருத்துவம் மக்களைப்போய்ச் சேரவேண்டும் என்ற உயர்ந்த கருத்துக்களை மட்டும் கொண்டவர். தமது வருவாயின் பெரும் பகுதியை அதற்காக செலவழித்துக்கொண்டிருக்கின்ற ஒரு உன்னதமான மனிதர். இந்த இனிய மனிதர் நமது நூல் படியைப் பெற்றுக்கொள்ள இங்கே வந்திருக்கிறார் - அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

மூன்றாவதாக என்னுடைய நண்பர் - மூத்த சகோதரர் - வழிகாட்டி - திரு பழனியாண்டி அவர்கள்.

நண்பர்களே இன்றைக்குப் பயண நூல்கள் யார் யாரோ எழுதுகிறார்கள். ஆனால் மருத்துவ உலகிலிருந்துகொண்டு தான் செல்கின்ற அத்தனை இடங்களைப் பற்றியும் - அது எந்த மாநிலமாக இருந்தாலும் சரி - எந்த தேசமாக இருந்தாலும் சரி - உடனடியாக கட்டுரையாக வெளியிடுகின்ற ஆற்றல் அவரிடம் உண்டு. அவருடைய பயணக் கட்டுரை நூல் திருச்சி மாவட்டத்தின் மிகச்சிறந்த நூல்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் பாராட்டைப் பெற்றது.

வள்ளுவருடைய மருத்துவ அறிவை சரியான முறையிலே தமிழ்நாட்டிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டிய பெருமை அவருக்குண்டு.

(விழா நிகழ்வுகள் தொடரும்...)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.