http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 121

இதழ் 121
[ ஜுலை 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்க்கை வாசமிழப்பதில்லை வாருணி
புகைப்படத் தொகுப்பு - தளவானூர் சத்ருமல்லேசுவராலயம்
சத்ருமல்லேசுவராலயம்
To Sacred Shrines.. with Sacred Hymns..- 2
Rituals, Special occasions and Festivals at the Temples of Thiruchirappalli District
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-4
அழிவின் விளிம்பில்.. கரும்பூர் பெருந்தோட்டத்து ஆழ்வார்
திருப்பரங்குன்றத்துத் திருவிழா
இதழ் எண். 121 > இலக்கியச் சுவை
திருப்பரங்குன்றத்துத் திருவிழா
ரிஷியா
தமிழ்க் கடவுள் முருகனுக்குப் பல விழாக்கள் எடுத்துச் சிறப்பித்துள்ளனர் பண்டைய தமிழர்கள். குன்றுகள் எல்லாம் அவனுக்கே உரிமைப்பட்டதாய் விளங்கும் தமிழ் மண்ணில் வேலனுக்கென்றே அமைந்த விழாக்கள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. அவ்விழாக்களுள் பரங்குன்றத்து விழாவும் ஒன்றாகும். தமிழ் வளர்த்த பாண்டிய மண்ணில் சீர்பெற்று விளங்கும் பரங்குன்றத்தில் முருகனுக்கு வெகு சிறப்பாக விழா தொடர்ந்து நடைபெற்றதை அகம் 400ல் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பதிவு செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம்



நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகில் கூடல் குடாஅது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து..
- அகம் 400;149;13-17


விளக்கம்: ‘நெடிய நல்ல யானைகளையும் வெல்லும் போரினையுமுடைய செழியனது கொடி அசையும் தெருவினையுடைய கூடலில் (மதுரையில்) மேம்பாலுள்ள பல பொறிகளையுடைய வெல்லும் மயிற்கொடியினை உயர்த்த இடையறாத விழாவினையுடைய முருகனது திருப்பரங்குன்றத்தே வண்டு வீழ நீண்ட ஆழமான சுனையில் பூத்த நீலப்பூவின்..’ என்பதாகும்.

சங்க காலம் முதல் இன்றுவரை திருப்பரங்குன்றம் முருகனுக்குப் பல விழாக்கள் கண்ட திருத்தலமாகும். குன்றுதோறும் குடியிருக்கும் குமரனுக்குத் தமிழர் செய்த சீரீய சிறப்பை இப்பாடல் சுட்டுகிறது. தொல்சிறப்பும் பழம்பெருமையும் தொடரும் நற்பாரம்பரியமும் கொண்ட பரங்குன்றம் பற்றிய சிறப்புச் செய்தி அதுவே.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.