http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 15

இதழ் 15
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15
பயணச் சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

வந்தியத்தேவன் வழியிலிருந்து வரலாற்று வழிக்கு
பழுவூர் - 5
கல்வெட்டாய்வு - 11
காந்தள்
ஒரு கடிதம்
மூன்றாம் யாத்திரை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
நான்கு மணிக்குப் பின் நாகேஸ்வரன் கோயில்
Around My World in Two Days
சங்கச் சிந்தனைகள் - 3
அத்யந்தகாமம் - பின்னூட்டம்
இதழ் எண். 15 > கலையும் ஆய்வும்
கல்வெட்டாய்வு - 11
மா. இலாவண்யா
சென்ற இதழில் இராஜசிம்மேசுவரம் கோவில் கல்வெட்டில் உள்ள இராஜசிம்மரின் விருதுப்பெயர்களைக் கண்டோம். சென்ற இதழில் வந்திருந்த தேவதேவிக் கல்வெட்டுகள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டில் 2வது மற்றும் 3வது வரிகளில், பல்லவ மரபிற்கு மூலமாய் அமைந்த பரத்வாஜர் பிறந்தார் என்று வந்துள்ளது அல்லவா. அதே போல் மற்ற பல்லவ தளிகளில் உள்ள பல்லவக் கல்வெட்டுகளிலும் இச்செய்தி இடம்பெற்றிருக்கிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் உள்ள தந்திவர்மன் கல்வெட்டிலும் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும் அமராவதியில் உள்ள ஒரு கல்வெட்டு புத்தபெருமானின் துதியில் தொடங்கி பல்லவர்களின் புராண வம்சாவளியைக் கீழ்கண்டவாறு கூறுகிறது. அச்வத்தாமனிடமிருந்து பல்லவன் தோன்றினான் என்று பல்லவர்களின் பொதுப்பெயரைக் குறிப்பிடுகிறது.

பிரம்மன்
|
பரத்வாஜர்
|
அங்கீரஸ்
|

சுதாமன்
|
துரோணர்
|
அஸ்வத்தாமன் (மதனி என்ற அப்சரஸை மணந்தவன்)
|
பல்லவன்.

பல்லவன் என்ற பொதுப் பெயரைத் தரும் கல்வெட்டு, அவனுக்கடுத்து வந்த ஏழு பல்லவ மன்னர்களின் பெயர்களைக் கீழ்கண்டவாறு தருகிறது.

மகேந்திரவர்மன், பல்லவனின் மகன்
|
சிம்மவர்மன் I, மகேந்திரவர்மனின் மகன் | அர்கவர்மன், சிம்மவர்மனின் மகன்
|
உக்ரவர்மன்
|
ஸ்ரீ சிம்மவிஷ்ணு
|
நந்திவர்மன், சிம்மவிஷ்ணுவின் மகன்
|
சிம்மவர்மன் II

இந்த கல்வெட்டில் அக்ரவர்மன்-உக்ரவர்மன், உக்ரவர்மன்-சிம்மவிஷ்ணு மற்றும் நந்திவர்மன்-சிம்மவர்மன் II இவர்களிடையே இருந்த உறவுமுறை குறிப்பிடப்படவில்லை. இக்கல்வெட்டில் தரப்பட்டுள்ள புராண வம்சாவளி கற்பனையானதாக இருக்கலாம். மேலும் இக்கல்வெட்டில் கொடுக்கப்பட்டுள்ள பல்லவ மன்னர்களின் வம்சாவளியும், மற்ற பல்லவ கல்வெட்டுகளிலிருந்து பெறப்பட்ட வம்சாவளியுடன் பொருந்தவில்லை. அதனால் இக்கல்வெட்டை வரலாற்றாய்விற்கு எந்த அளவிற்கு பயன்படுத்த முடியும் என்பது கேள்விக்குறியே.

பல்லவர்கள் அளவு கீழைச் சாளுக்கியர்களும் தமது இதிகாச வம்சாவளியைச் செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர். கீழைச் சாளுக்கியர்கள் 'கொற்றப்பற்று' என்ற கிராமத்தை பிராமணர்களுக்கு தானமாக வழங்கியதைக் குறிப்பிடும் செப்பேடு, மானவியாஸ் என்ற கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் கீழைச் சாளுக்கியர்கள் என்பதைத் தெரிவிக்கிறது. வீரசோழன் திராக்ஷாராமம், மற்றும் பீதாபுரி என்ற இடங்களில் சத்திரம் கட்டிக்கொடுத்து கொடையும் வழங்கியதைக் குறிப்பிடும் செப்பேடு சாளுக்கியர்களின் இதிகாச வம்சாவளியை விரிவாக வழங்குகிறது. இதில் நாராயணனிடமிருந்து தோன்றிய பிரம்மனிடமிருந்து அத்ரி தோன்றினார் என்று தொடங்கும் இதிகாச வம்சாவளி, யயாதி, பரீக்ஷித்து, துஷ்யந்தன் உள்ளடங்கிய பல மன்னர்களையும் குறிப்பிட்டு பாண்டவர்களின் தோற்றத்தைக் குறிப்பிட்டு, மேலும் சில பெயர்களையும் கொடுத்து அவர்களிலிருந்து வந்தவன் உதயணன் என்று குறிப்பிட்டு, உதயணனிடமிருந்து தொடங்கி 59 சக்கரவர்த்திகள் அயோத்தியை ஆண்டதையும் குறிப்பிடுகிறது. இவர்கள் வம்சத்தில் வந்தவன் திரிலோசன பல்லவனுடனான போரில் வீரமரணம் அடைந்த விஜயாதித்யன் I என்று குறிப்பிட்டு, அவர் வழி வந்த மற்ற அரசர்களின் பெயர்களையும் தருகிறது. மேலும் சாளுக்கியர்கள், மானவியாஸ் மற்றும் ஹரித இரு கோத்திரங்களையும் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது. இச்செப்பேடுகளில் உள்ள இதிகாச வம்சாவளி கற்பனையானதாக இருக்கலாம். அதனால் இதையும் வரலாற்றாய்விற்கு பயன்படுத்துவது சரியல்ல. ஆயினும் இச்செப்பேட்டில் உண்மை வம்சாவளியும் குறிக்கப்படுகிறது. அதிலும் மிக முக்கியமானது, சோழர்களுடன் சாளுக்கியர்களுக்கிருந்த திருமண உறவைப் பற்றிக் குறிப்பிடும் பகுதி தான். இதிலிருந்து தான், சோழ, சாளுக்கிய மன்னர்களின் காலம் சுலபமாக கணிக்கப்பட்டது. இச்செய்திகளை அடுத்து வரும் இதழ்களில் விரிவாகக் காணலாம்.

சென்ற இதழில் இராஜராஜரின் (இவர் பல்லவ இராஜராஜர்) கிரந்த விருதுப்பெயர்களைக் கொடுத்திருந்தேன். அவ்விருதுப்பெயர்களில் 28 கோட்டங்களில் இருக்கும் விருதுப்பெயர்களுக்கான பொருளை இவ்விதழில் காணலாம். மேலும் உள்ள விருதுப்பெயர்களுக்கான பொருள் அடுத்த இதழில்.

http://varalaaru.com/Default.asp?articleid=209

கோட்ட எண்களும், அக்கோட்டத்தில் உள்ள விருதுப்பெயருக்கான பொருளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சென்ற இதழின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. கிளிக்கிவிட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள கிரந்த விருதுப்பெயர்களையும், கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளையும் அடுத்தடுத்துப் படிக்கவும்.

1. இராஜசிம்மர். இணையற்ற மன எழுச்சி உடையவன். போர்களில் வெற்றிகொள்பவன். அழகானவன்.

2. (மற்றவர்களால்) வெற்றிகொள்ளப்படாதவன். எதிரிகளுடன் மல்யுத்தம் செய்பவன். பயமில்லாதவன். பராக்கிரமசாலி.

3. வெற்றிகொள்ள துடிப்புடனிருப்பவன். போர்களில் மிகவும் உக்கிரமானவன். வளங்கள் நிறைந்தவன். உயர்ந்த அரசாள்பவன். உதிக்கும் சூரியன்.

4. மேகம் (வளங்களை வர்ஷிக்கும்) போன்றவன். பாதுகாவலன். (பல்லவ) குலத்தின் திலகம். எதிரிகளை அழிப்பவன்.

5. அதிகரிக்கும் சக்தியுடையவன். ஓங்கிவளரும் புகழுடையவன். காளை (சின்னம்) என்ற பெருமிதம்கொண்டிருப்பவன். காளையினைச் சின்னமாகக் கொண்டிருப்பவன்.

6. பயங்கரமான வீரத்தையுடையவன். எப்பொழுதும் உயர்ந்துகொண்டிருப்பவன். உன்னதமானவன் அழகானவன். பயங்கர தைரியம் கொண்டிருப்பவன்.

7. மிகவும் உயர்ந்தவன். தாழ்ந்துபணிந்தவருக்கே அடங்கியிருப்பவன். போர்களில் சிங்கம்.

8. அப்பழுக்கற்றவன். காஞ்சியின் மணி. கர என்ற அசுரனுக்கிருந்த அளவு பராக்கிரமமுள்ளவன் அல்லது அதிபயங்கர பராக்கிரமமுள்ளவன். சக்கரவர்த்தி.

9. கஷ்டத்தில் உழல்பவர்களிடம் கருணையுள்ளவன். வில்லைத் துணையாகக் கொண்டிருப்பவன். ஐயங்கள் தீர்ந்து போகும்படியிருப்பவன். கள்ளமில்லாதவன்.

10. எதிரிகளுக்கு இடி போன்றவன். மல்யுத்தத்தில் தனக்கு நிகரில்லாதவன். உயர்ந்த செயல்கள் புரிபவன். யானைகளைப் பற்றிய அறிவுள்ளவன்.

11. விருப்பங்களைப் பூர்த்திசெய்பவன். சிவனை சரணடைந்தவன். உதிக்கும் சந்திரன். மேகத்தைப் போன்றவன்.

12. நட்பில்லாத சாம்ராஜ்யங்களை அழிப்பவன். இளவரசர்களிடையே சூடாமணி போன்றவன். வர்ஷித்துக்கொண்டேயிருப்பவன். அரசர்களுக்கெல்லாம் அரசன்.

13. சங்கீத வாத்தியங்கள் பற்றிய அறிவு மிக்கவன். அம்பெய்துவதில் வல்லவன். வீரர்களிலே சிங்கம். வளம்பெறுவதில் நாட்டமுடையவன்.

14. மங்களகரமானவன். போர்வீரர்களிடையே மிளிரும் சூடாமணி. விலாசமானவன். போர்களில் அர்ச்சுனன்.

15. வளம்நல்கும் பெண்கடவுட்கு பிடித்தமானவன். போரில் இராமன். உலகுமுழுதும் ஆளுபவன். (எதிரி) வீரர்களை ஓடச் செய்பவன்.

16. போர்களிலே (எதிரிகளுக்கு) பயம் தருபவன். எல்லையில்லாத சக்தி நிறைந்தவன். மூவுலகினுக்கும் தலைவன். வரங்களை வர்ஷிப்பவன்.

17. விருப்பங்களை பூர்த்தி செய்பவன். ஏழைகளுக்கு இரங்குபவன். வற்றாத பரிசுகளைத் தருபவன். தைரியமுடையவன்.

18. பொருள் திரட்டவே போர் புரிபவன். என்றுமே நியாயமுள்ளவன். தூய்மையான மனதுடையவன். தர்மத்தை கவசமாகக் கொண்டிருப்பவன்.

19. போர்களிலே (எதிரிகளின்) பொருளைக் கைக்கொள்பவன். பயம் கொள்ளத்தக்க வில்லை ஏந்தியிருப்பவன். தன்னை யாரும் வெற்றிகொள்ளமுடியாதவன். தன்னடக்கமுள்ளவன். உலகின் சூரியன். அப்பழுக்கற்றவன். கலைகளின் கடல். போர்களில் திடமுடனிருப்பவன். தக்கசமயத்தில் (மட்டுமே) கோபம் கொள்பவன். கெட்டவர்களை பணியச்செய்பவன். பல்லவர்களின் சூரியன்.

20. எங்கும் நிறைந்தவன். கருணையுள்ளவன். என்றும் உற்சாகத்துடனிருப்பவன். மனிதருள் சிங்கம்.

21. தூய்மையான புகழுடையவன். வீரத்தில் அர்ச்சுனனுக்கு நிகரானவன். பயங்கரமானவன், அழகானவன். அடிமைத்தனமில்லாதவன்.

22. பயமில்லாதவன். உயர்ந்த மல்யுத்த வீரன். மிகவும் உற்சாகமுடையவன். மிகவும் அன்புடையவன்.

23. உலகைக் கைக்கொண்டிருப்பவன். வீரத்தில் மகேந்திரரை ஒத்தவன். சக்தியுள்ளவன். நற்செயல்கள் புரிவதில் மனுவைப் போன்றவன்.

24. நாகரிகமானவன், உயர்ந்தவன். விஷ்ணுவிற்குப் பிடித்தமானவன். போர்களிலே வீரன். உலகம் அழியும்பேதிருக்கும் சூரியன்.

25. போர்களிலே திடமுடனிருப்பவன். பாதுகாத்தலில் மணி போன்றவன். போர்களில் அதிபயங்கரமானவன். போர்களிலே தைரியம் மிக்கவன்.

26. நிகரற்ற சக்தி கொண்டவன். எதிரிகளை அழிப்பவன். எல்லையில்லாத வீரமுடையவன். குதிரைகளின் மேல் பிரியமுடனிருப்பவன்.

27. நிகரில்லாதவன். எவனுடைய ஆணைகள் நிறைவேற்றப்படாமல் போகாதோ அவன். திடீரென இடிக்கும் இடி. வீரத்தில் தோற்காதவன்.

28. அடிபணியும் மண்டலங்கள் கொண்டவன். எவரும் எதிர்த்து நிற்காதவன். ஆச்சரியமான சக்தியுடையவன். ஆணையிடுவதில் விருப்பமுள்ளவன். ஆச்சரியப்படும் வகையில் தைரியமுள்ளவன். this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.