http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 84
இதழ் 84 [ டிசம்பர் 16, 2011 - ஜனவரி 15, 2012 ] இந்த இதழில்.. In this Issue.. |
(சென்ற இதழ்த் தொடர்ச்சி) சில எண்ணத் தூறல்கள்:- 1. புராணப் புகழும் வரலாற்றுப் புகழும் ஒருங்கே பெற்ற ஒரே தமிழ் மன்னனாம் திரு. கோச்செங்கட்சோழன் அவர்களுக்கு டாக்டர் ஆற்றிய சிறப்பான தொண்டு இவ்வரலாற்று ஆய்வுநூல். 2. இந்நூலில் இடம்பெறும் 32 மாடக்கோயில்களில் எனக்கு நன்கு பரிச்சயமானது அருள்மிகு ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் ஒன்று மட்டுமே. சில வருடங்களுக்கு முன்னால் நானும் அம்மாவும் சென்றோம். என் மனதில் நின்ற திருத்தலம். காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை பக்தர்கள் நாங்களிருவர் மட்டுமே. ஆள் அரவமற்று இருந்தது. திவ்விய தரிசனம். நன்றாக சேவை சாதித்து, மேலும் கதைசொல்லி, புளியோதரை அளித்து, மண்டபத்தில் சிறிது உறங்கி இளைப்பாற எங்களுக்கு அனுமதி அளித்த பட்டாச்சாரியருக்கு இன்றும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள். அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம். 3. சோழ வளநாட்டை இன்றும் அலங்கரிக்கும் இம்மாடக்கோயில்கள் சில போதிய கவனிப்பின்றி உள்ளன. பிரபலமான கோயில்களுக்குச் சென்று Q வரிசையில் நின்று, ஏனோதானோ தரிசனம், அர்ச்சனை பண்ணிப் பரிகாரம் தேடுவதை விடுத்து, இம்மாடக் கோயில்கள் இருக்கும் ஊர்ப்புறத்தே சென்று திவ்யதரிசனம், நம்மால் முடிந்த உதவி செய்துவிட்டு வரலாம். (வாழ்நாளில் ஒருமுறையேனும்) 4. மாடக்கோயில்கள் சுற்றுலா என்ற பெயரில் முற்காலச் சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்று முகவரிகளைக் கண்டுகளித்து வரலாம். சோழநாட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நினைத்த மாத்திரத்தில் இங்கெல்லாம் சென்று வந்துவிடலாம். 5. இருண்டகாலம் என்று சொல்லி, தமிழனை வரலாறு அற்ற அநாதை ஆக்கிவிடாமல், வரலாற்று அறிஞர்கள் மற்றும் வரலாற்று நூல்கள் படைக்கும் ஆய்வாளர்கள் இதுபோன்ற புதிய வரலாற்றுப் பதிவுகளை அடிக்கடி Update செய்துகொள்ள வேண்டும். இது என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று. (எப்போதான் நடக்குமோ?) 6. இந்நூல் கிடைக்குமிடம் : டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், C-87, பத்தாம் குறுக்கு, தில்லை நகர், திருச்சி - 620018. விலை ரூ. 300. தொலைபேசி : +91-431-2766581. 7. என்னிடம் பல வாசகர்கள் கவிஞர் மு. மேத்தாவின் நாவல்கள் மற்றும் ஏனைய நூல்கள் எங்குக் கிடைக்கும் என்று கேட்டுள்ளார்கள். எனக்குச் சென்னை தெரியாது என்பதால் நண்பர் திரு. கோபி, மனிதவள மேலாளர் எனக்கு உதவினார். அனைவரும் அவர் கொடுத்த முகவரியில் அணுகலாம். "New Book Lands, 52-C, North Usman Road, T.Nagar, Chennai - 17. Phone : +91-44-28158171 / +91-44-28156006. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |