http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[133 Issues]
[1444 Articles]
Home About US Temples Facebook
Issue No. 85

இதழ் 85
[ ஜனவரி 16 - ஃபிப்ரவரி 15, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாண்டுக்கொருமுறை மாற்றம் ஏன்?
திரும்பிப்பார்க்கிறோம் - 32
ஆடிஅருளப் பிரசாதம் பெற்ற பொன்னில் . . .
வைகல்
மனத்துக்கண் மாசிலன்
ஊன்சோறு (அ) ஊன்துவையடிசில்
பருத்திப் பெண்டிர்
இதழ் எண். 85 > இலக்கியச் சுவை
ஊன்சோறு (அ) ஊன்துவையடிசில்
ரிஷியா

இன்றைய தமிழ்மொழியில் வழக்கொழிந்து போன தமிழ்ச்சொல் "ஊன்சோறு". அன்றைய தமிழகத்தில், ஐந்து திணைகளிலும் மக்கள் இதனை விரும்பி உண்டுள்ளனர். அன்று பெரும்பாலோரின் உணவுப் பழக்கத்தில் இடம்பிடித்த இந்த ஊன்சோறு தற்காலத்தில் பிரியாணி என்ற உருதுமொழிப் பெயர்மாற்றம் கண்டுள்ளதோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது.

"ஊன் துவையடிசில்' எனச் சங்கப் பாடல்கள் பேசும் அவ்வுணவினை மன்னர்கள் பாணர்களுக்கு, பெரும் புலவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளனர். ஊன் சோற்றினைப் பல புலவர்கள் ரசித்து ருசித்து பாடிப் போற்றியுள்ளனர் தம் பாடல்களில். பழந்தமிழர்கள் சாதாரண எளியகுடிகள் முதல் மன்னர்கள்வரை இதனை மிகவும் விரும்பி, "மிகுதி"யாக உண்டு களித்துள்ளனர். மதுரைக்காஞ்சியில், வாலுவன், அஃதாவது சமையல் செய்வோன் தன் கைகளையே துடுப்பாகக் கொண்டு விரவி ஊன் சோற்றினைச் சமைத்து உண்போர் வரிசையறிந்து வழங்கினான் என்று விளக்கமாகக் கூறுகிறது. அப்பாடல் இதோ,

"துடித்தோட்கை துடுப்பாக
ஆடுற்ற ஊன்சோறு
நெறியறிந்த கடிவாலுவன்"
(மதுரைக்காஞ்சி : 34 - 36)


மேலும், வெண்சோற்றுடன், நெய் கலந்து, ஆட்டிறைச்சி சேர்த்து சமைத்துண்டனர் என்பது கீழ்க்காணும் நற்றிணை வரிகள் வழித்தேற்றம். இப்பாடலில் வரும் மையூன் என்பது ஆட்டின் இறைச்சியைக் குறிப்பதாகும்.

"மையூன் தெரிந்த நெய்வெண்புழக்கல்"
(நற்றிணை : 83 : 4-9 வரிகள்)


சங்கத் தமிழர்கள் இவ்வாறு ஊன் சோற்றினை அதிகமாக உண்டுள்ளனர். எயிற்றியர் குடிசை முதல் கரிகாலச் சோழன் அரண்மனை வரை "ஊன் துவையடிசில்" வகையறாதான் புலவர் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. உலகின் மூத்த முதல்குடிக்கு பீடுடைய நீண்ட நெடிய வரலாறு உள்ளது போலவே அவர்களின் உணவுக்கும் பண்டுத் தொடங்கி ஒரு நெடும் வரலாறு உள்ளது என்பது திண்ணம்.

மிளகாய், தக்காளி (அன்று வழக்கில் இல்லை) இல்லாது சமைக்கப்பட்ட ஊன்சோற்றின் சுவை எப்படியோ? ஆனால் அனைத்துப் பாடல்களும் "மிக்கச்சுவை" உடைத்து என்றே நற்சான்று பகர்கின்றன. அன்றைய தமிழர்களுக்கு மிளகு மற்றும் உணவுக்குச் சுவைசேர்க்கும் பொருட்கள் அதாவது Spices போன்ற மிகவும் அறிமுகமானவை அன்று வழக்கத்தில் இருந்திருக்கின்றன. எனவே, ஊன்சோறு அல்லது ஊன் துவையடிசில் என்பது இன்றைய பிரியாணிக்கு முன்னோடியே என்பது சங்கப் பாடல்களின் வழித்தேற்றம். Great Tamils! Great Food Delights!

(நம் வாசகர் மத்தியில் Tamil food historians and Tamil food anthropologists உள்ளனர் என்றால் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.