http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[143 Issues]
[1515 Articles]
Home About US Temples Facebook
Issue No. 108

இதழ் 108
[ ஜூன் 5, 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

வணிகர்கள்
Kudumiyanmalai - 2
பண்டைய கட்டுமானங்களைப் பாதுகாத்த மேலப்பாதி திருக்கோயில்
வரலாற்றின் பார்வையில்.. நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
தேடலில் தெறித்தவை - 14
குடவாயில் மாடக்கோயில்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 5
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 4
செழியனின் நற்கொற்கை
இதழ் எண். 108 > கலையும் ஆய்வும்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 5
கோகுல் சேஷாத்ரி
முத்தரையர் திருக்கோயில்களும் முற்சோழர் திருக்கோயில்களும்


காவிரிப் படுகையான தஞ்சை-திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் கட்டுமானத் திருக்கோயில்களை முதன்முதலில் அமைத்த பெருமைக்குரியவர்கள் பல்லவ மன்னர்களாவர். பல்லவர்களைத் தொடர்ந்து அவர்களின் கீழ் சிற்றரசர்களாக இயங்கிய முத்தரைய மன்னர்கள் இப்பகுதியில் பல திருக்கோயில்கள் எடுப்பித்துள்ளனர்.

இம்மன்னர்கள் காலத்தில் எடுப்பிக்கப்பெற்ற திருக்கோயில்களாக முந்தைய ஆய்வுகள் கீழ்க்கண்ட திருக்கோயில்களை அடையாளப்படுத்தியுள்ளன.

- பனங்குடி அகஸ்தீசுவரர் திருக்கோயில்
- விசலூர் மார்க்கபுரீசுவரர் திருக்கோயில்
- காளியாப்பட்டி சிவன் கோயில்
- விரலூர் பூமீசுவரர் திருக்கோயில்
- செந்தலை சுந்தரேசுவரர் திருக்கோயில்
- நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
- நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம்

முத்தரைய மன்னர்களைத் தொடர்ந்து இப்பகுதியில் கட்டுமானத் திருக்கோயில் திருப்பணியைத் தொடர்ந்தவர் முற்சோழ மரபில் வந்த முதலாம் ஆதித்த சோழர் ஆவார். இவரது காலத்தில் எடுப்பிக்கப்பெற்ற திருக்கோயில்களாக முந்தைய ஆய்வுகள் அடையாளப்படுத்தும் திருக்கோயில்கள் சில..

- தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் திருக்கோயில்
- இலால்குடி சப்தரிஷீசுவரர் திருக்கோயில்
- திருச்சோற்றுத்துறை ஓதவனேசுவரர் திருக்கோயில்
- திருப்பழனம் ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
- திருப்பூந்துருத்தி புஷ்பவனேசுவரர் திருக்கோயில்
- திருவேதிக்குடி வேதபுரீசுவரர் திருக்கோயில்
- கும்பகோணம் நாகேசுவரர் திருக்கோயில்

இக்கோயில்கள் அனைத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்ததில் முந்தைய ஆய்வுகள் எவற்றிலும் குறிப்பிடப்படாத ஒரு முக்கிய வேறுபாட்டினைக் கண்டறிய முடிந்தது.

அது என்னவெனில் ஆதித்த சோழர் காலத்தில் கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்ட கோயில்கள் அனைத்துமே தேவார மூவரால் பாடல் பெற்ற தலங்களாக அமைந்துள்ளன. செங்கல், சுதை அல்லது மரத்தினால் அமையப்பெற்ற பண்டைய திருக்கோயில்களே ஆதித்தர் காலம் முதல் கற்றளிகளாக மாற்றியமைக்கப்பெற்றன.

ஆனால் முத்தரைய மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்களாக அடையாளப்படுத்தப்படும் கற்றளிகளுள் ஒன்றுகூட பாடல் பெற்ற தலங்களாக அமையவில்லை. நியமம் மட்டும் வைப்புத்தலமாக திருப்புறம்பியம் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பிடப்படுகிறது (திருமுறை 6.13.4).

இந்த முக்கிய வேறுபாடு ஆய்வுக்குரியது.
this is txt file�
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.