![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 9
![]() இதழ் 9 [ மார்ச் 15 - ஏப்ரல் 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச்சாரல்
வருமா அந்தநாள்?
யானையுடன் பொருது வென்று அதன் தந்தம் பறிக்கும் வீர வேட்டுவனைக் காதலித்தாள் தலைவி. தந்தையும் தாயும் அவள் காதலை மதித்து அவனையே அவள் கணவனாய் ஒப்பினர். மணநாளும் குறிக்கப்பட்டது. அந்த நாள் வரத்தான் போகிறதென்றாலும், அது விரைந்து வரவேண்டுமென்ற தவிப்பு தலைவிக்கு. தலைவியின் மனமறிந்த தோழி, அவள் தவிப்பு நீக்கக் கருதியவளாய், 'நம் வீட்டில் உறையும் தெய்வத்தை மெல்லிய விரல்களைக் குவித்து வணங்கிப் பலிசெலுத்தி, மணநாள் விரைந்து வருமாறு வேண்டுவோம் வா' என்று வழிகாட்டினாள் (அகம் 282). இந்த 'மனையுறை தெய்வம்' என்ற சங்க கால நம்பிக்கையே இன்று 'வீட்டு சாமி' யாகத் தொடர்கிறது. நல்ல தமிழர்களய்யா நாம்! பறவைகளின் பழக்கவழக்கங்கள், இயல்புகள், உருவ அமைதி, வாழ்முறை எனப் பல்நோக்கில் அமைந்து பெரிதும் வளர்ந்துவரும் அறிவியல்துறை பறவையியல். இயற்கை தழுவி வாழ்ந்த தமிழர்கள் இந்தத் துறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெரிதும் நாட்டம் கொண்டிருந்தமை, சங்கப் பாடலகளில் காணப்படும் பறவைகள் பற்றிய பல அரிய செய்திகள் வாயிலாய்த் தெரியவருகிறது. மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் புலவர்தான் என்றாலும் குருகு என்றழைக்கப்படும் நாரையின் இயல்பு பற்றி அவர் சொல்லியிருக்கும் சில செய்திகள் அவரை ஒரு பறவையியல் நோக்கராகப் படம்பிடிக்கின்றன. கழிப்பரப்பில் இரை தேடி அலைந்து மீன் கிடைத்ததும் அதை உண்டு, வீட்டருகே மன்றத்திலுள்ள பனைமரத்தின் மடலில் பறந்து வந்தமர்கிறது ஒரு நாரை. அந்த மரத்தில்தான் அது கூடு கட்டியிருக்கிறது. உணவு முடிந்ததால் கூடி மகிழத் துணையைத் தேடுகிறது அதன் உள்ளம். அந்தத் துணையோ வெளியில் எங்கோ சென்றிருக்கிறது. அதை அழைப்பது போல பனைமரத்து நாரை ஓயாமல் கூவுகிறது. அந்தக் கூவல், வளைந்த வாயையுடைய பெண் பறவை கூடு வந்துசேர்ந்து தழுவிக்கொள்ளும் வரை நிற்கவில்லை எஙிறார் சாத்தனார். இதே படப்பிடிப்பு தொலைகாட்சியின் Discovery Channel இல் வந்தால் 'பறவை வல்லுநர்' என்று கொண்டாடுவோம். சாத்தனார் சொல்லியிருப்பதால் கற்பனை என்று கைகொட்டிச் சிரிப்போம். நல்ல தமிழர்களய்யா நாம்! தகவல்: வரலாறு ஆய்விதழ்கள் 7,8this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |