http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[143 Issues]
[1515 Articles]
Home About US Temples Facebook
Issue No. 122

இதழ் 122
[ ஆகஸ்ட் 18, 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர்


இந்த இதழில்..
In this Issue..

வள்ளுவத்தில் மதலை
தெரிவதும் தொடர்வதும் வரலாறுதான் வாருணி
சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், இலால்குடி
To Sacred Shrines.. with Sacred Hymns..- 3
புகைப்படத் தொகுப்பு - திருச்சிராப்பள்ளி இலளிதாங்குரம்
இலளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்
Rituals, Special occasions and Festivals at the Temples of Thiruchirappalli District - Part II
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-5
காஞ்சிபுரம் தெற்கிருந்த நக்கர் திருக்கோயில்
முசிறியின் பண்டமாற்று வணிகம்
இதழ் எண். 122 > கலைக்கோவன் பக்கம்
வள்ளுவத்தில் மதலை
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,
காலை நடைப்பயிற்சியின் போது அலைபாயும் உள்ளத்தை எதிலேனும் ஒருமுகப்படுத்த விழைந்ததன் விளைவாய் பல அரிய தரவுகளைப் பெற்று வருகிறேன். பல நாள் விருப்பம் இந்த ‘ஒருமுகப்படுத்தல்’ நோக்கில் நிறைவேறியது. ஆம் வாருணி, என் நடைப்பயிற்சி குறளோடு பழகும் பயிற்சியாக மாறியுள்ளது. அறத்துப்பால் முடித்துப் பொருட்பாலில் பயணிக்கிறேன். அறத்துப்பால் குறட்பாக்களே பல சிந்தனைகளைத் தோற்றியுள்ளன. பேராசிரியர் அரசுவிடம் அவ்வப்போது ஐயம் கேட்பேன், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வேன், வியப்பை எதிரொலிப்பேன். இன்றுதான் என் உணர்வுகளை உன்னிடமும் பகிர்ந்துகொள்ள வாய்த்தது.

பொருட்பாலில் பெரியாரைத் துணைக்கோடலில் ஒரு குறள், ‘முதலிலார்க்கு ஊதியம்
இல்லை மதலையாஞ் சார்பிலார்க்கு இல்லை நிலை.’ இந்தக் குறளில் பயிலும் மதலை எனும் சொல் கட்டடக்கலை சார்ந்த சொல். தூண்களின் மேல் அமர்ந்து உத்திரம் தாங்கும் சளுக்கியச் சோழர் காலப் போதிகைகளில், கீழ்க்கையை நாணுதல் என்றும் மேற்கையை மதலை என்றும் அழைக்கின்றனர். இந்த மதலைகள்தான் போதிகைகளிலிருந்து கிளைத்து மேலெழுந்து உத்திரத்தைத் தாங்குகின்றன. இவை போதிகைக் கைகளாகத் தோற்றமாவது சளுக்கியச் சோழர் காலத்தில்தான் என்றாலும், கட்டமைப்பு உறுப்பாகப் பல்லவர் பணிகளிலேயே காணக்கிடைக்கின்றன. மாமல்லபுரத்து பீமரதம் முதலிய ஒருகல் தளிகளில் இவற்றை அடையாளப்படுத்தியிருக்கிறோம்.

இந்த மதலை, குறள் போல் பிற தமிழ் இலக்கியங்களில் ஆளப்பட்டிருக்கிறதா எனத் தேடியபோது பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடம் ஆகியவற்றிலும் எட்டுத்தொகையில் கலித்தொகையிலும் பதினெண்கீழ்க்கணக்கில் நாலடியாரிலும் இடம்பிடித்துள்ளமையைக் காணமுடிகிறது. ‘பள்ளி’, ‘மாக்கோல்’, ‘மாடம்’ எனும் பின்னொட்டுக்களுடன் முறையே நெடுநல்வாடை, புறநானூறு, மணிமேகலை ஆகியவற்றிலும் மதலை கண்காட்டுகிறது.

மதுரைத் தமிழ்ப் பேரகராதி மதலையைப் பல பொருள் ஒரு சொல்லாகக் காட்டுகிறது. கொடுங்கை, கொன்றை, சரக்கொன்றை, தூண், பிள்ளை, மகன், மரக்கலம், பற்றுக்கோடு, பாவை, யூபஸ்தம்பம் எனப் பல பொருள்கள் மதலைக்குச் சுட்டப்படினும் இலக்கியங்களில் அச்சொல் ‘பற்றுக்கோடு’ காட்டவும் ‘தாங்கல்’ உணர்த்தவுமே பயன்பட்டுள்ளது. நாளும் நாம் பயன்படுத்தும் கட்டடக்கலைச் சொல்லான மதலை சங்ககாலம் தொட்டே ஆளப்பெற்றுள்ள சொல்தான் என்றறிய மகிழ்வேற்பட்டது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.