http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 157
இதழ் 157 [ ஆகஸ்ட் 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
மாலபிரபா நதிக்கரையில் அமைந்துள்ள பட்டடக்கல் நினைவுச் சின்னங்கள் பதாமியிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், ஐஹொளேவிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு அமைந்துள்ள பொ.கா. 7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்கள் இந்து சமயக் கோயில் கட்டடக்கலையின் தொடக்கக்கால வடிவங்களாக அமைந்துள்ளன. சமண மதத்திற்கான கோயிலும் இதில் அடங்கும். இந்நகரத்தில் இந்தியக் கட்டடக்கலைப் பாணிகளான தென்னிந்திய திராவிடக் கட்டடக்கலையும், வட இந்தியக் கட்டடக்கலையும் சங்கமித்துத் தனித்துவமான ரேகா நாகரப் பாணிக் கட்டடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நினைவுச் சின்னங்களின் தொகுதி உலகப் பாரம்பரியக் களமாக (UNESCO World Heritage Site) அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளாகம் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பட்டடக்கல் நினைவுச் சின்னங்களின் வளாகம் பட்டடக்கல் நினைவுச் சின்னங்களின் வளாகத்தில் அமைந்துள்ள கோயில்களின் பெயர்கள் பின் வருமாறு: 1 விருபாக்ஷா கோயில் 2. மல்லிகார்ஜுனா கோயில் 3 சங்கமேஸ்வரர் கோயில் 4. காளகநாதர் கோயில் 5. காசி விஸ்வநாதர் கோயில் 6. பாபனாதார் கோயில் 7. ஜம்புலிங்கர் கோயில் 8. காடசித்தேஸ்வரர் கோயில் 9. சமண பசதி இவற்றுள் விருபாக்ஷா கோயிலைப் பற்றி இந்த இதழில் காண்போம். விருபாக்ஷா கோயில்: காஞ்சிபுரத்தை வெற்றிகொண்டு பல்லவர்களை வீழ்த்திய சாளுக்கிய இரண்டாம் விக்கிரமாதித்யனின் வெற்றியைச் சிறப்பிக்கும் வகையில் அம்மன்னனின் பட்டத்தரசி உலோகமகாதேவியால் எடுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் அற்புதப் படைப்பு இக்கோயிலாகும். முழுவதும் செந்நிற மணற்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் சிற்பங்கள் மிகவும் நுட்பமான வேலைப்பாடுகள் அமைந்தவையாகும். இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தின் நுழைவாயிலை அடுத்து நந்தி மண்டபத்தில் ஒரே கல்லிலான பேரளவிலான நந்தி அமைக்கப்பட்டுள்ளது. நந்தி மண்டபத்தின் சுவர்களில் சிற்பங்கள் அழகுறக் காணப்படுகின்றன. கிழக்குப் பார்வையாய்த் திராவிடக் கட்டடக்கலைப்பாணியில் அமைந்துள்ள இக்கோயிலின் சிகரம் நாகரமாக அமைந்துள்ளது. மையப்பகுதியில் கருவறையில் சிவலிங்கமும் அதைச்சுற்றிச் சுற்றுப்பாதை கொண்டு சாந்தார அமைப்புடன் விளங்குகின்றது. கருவறையின் முன்னால் இரண்டு பக்கங்களிலும் சென்றுவர இடைநாழிகை அமைந்துள்ளது. விருபாக்ஷா கோயில் விருபாக்ஷா கோயில், பின்னணியில் மல்லிகார்ஜுனா கோயில் விருபாக்ஷா மற்றும் மல்லிகார்ஜுனா கோயில்களின் காட்சி விருபாக்ஷா கோயில் நந்தி மண்டபத்துடன் விருபாக்ஷா கோயில் முகப்பு நந்தி மண்டபம் வலபியும் கூரையும் - நந்தி மண்டபம் அலங்கரிக்கப்பட்ட நந்தி மண்டபத்துத்தூண் நந்தி மண்டபம், நந்தி இனி விருபாக்ஷா கோயில் சிற்பங்களின் ஒளிப்படத் தொகுப்பினைக் காணலாம். நந்தி மண்டபத்துச் சுவர்களில் உள்ள சிற்பங்கள் விமானத்தின் கருவறைச் சுவர்ச் சிற்பங்கள் அலங்கரிக்கப்பட்ட சாளரம் இலிங்கோத்பவர் இரண்யவதம் குஞ்சிதகரணம் இராவண அனுகிருகமூர்த்தி கஜசம்ஹாரமூர்த்தி வாயிற்காவலர் வாயிற்காவலர் மகாவிஷ்ணு வராகர் ஆடவல்லான் கங்காதரர் மாதொருபாகன் கஜேந்திர மோட்சம் தண்டபக்ஷம் வாயிற்காவலர் அரசரும், அரசியும் சங்கநிதி கோயில் நுழைவாயிலையடுத்த பெருமண்டபங்களில் நுட்பமாக வேலைப்பாடுகளுடன் அமைந்த பேரளவிலான தூண்கள் உள்ளன. தூண்களின் நான்முகங்களிலும் மகாபாரதக் கதைகள், கிருஷ்ணாவதாரம், பாகவதபுராணம், ஹரிவம்சம் போன்ற புராணக்கதைக் காட்சிகளுடன் பஞ்சதந்திரக்கதையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மஹிஷாசுரமர்த்தனி மஹிஷாசுரமர்த்தனி மஹிஷாசுரமர்த்தனி |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |