http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 166

இதழ் 166
[ ஜூலை 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

நெடுங்களநாதர் கோயில் -2
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள் - 3
திருச்சென்னம்பூண்டி - மருத்துவச் சிற்பம்
வடகுரங்காடுதுறை
மன்னார்கோயில் குறுஞ்சிற்பம்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 19 (எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 18 (கனவிலேனும் வாராயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 17 (கடவுளும் காணா அதிசயம்)
இதழ் எண். 166 > இதரவை

இறைவர் திருப்பெயர்: தயாநிதீஸ்வரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்கநாதர்.
இறைவியார் திருப்பெயர்: ஜடாமகுடேஸ்வரி, அழகுசடை முடியம்மை.

கோங்கமே குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா
ரிடமென விரும்பினாரே


என்று தொடங்கி "ஆளுடைய பிள்ளையார்" அருளிச்செய்த அற்புதமான திருத்தலம்.


மேவடகுரங்காடுதுறை (ஆடுதுறைபெருமாள்கோயில்) கோயில்

அமைவிடம்: கும்பகோணம் - திருவையாறு, சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் தாண்டி, உள்ளிக்கடை என்னும் ஊரையடுத்து இத்தலம் - ஆடுதுறை உள்ளது. (ஆடுதுறை என்ற பெயரில் மற்றொரு தலம் இருப்பதாலும், இத்தலத்திற்குப் பக்கத்தில் பெருமாள்கோயில் என்னும் வைணவத்தலம் இருப்பதாலும் இத்தலம் 'அந்த' ஆடுதுறையினின்றும் வேறுபட்டறிய "ஆடுதுறை பெருமாள்கோயில்" என்று வழங்குகிறது. குரங்காடுதுறை என்று கேட்டால் யாருக்கும் தெரிவதில்லை) இத்தலம் குடந்தையிலிருந்து 20 கி. மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 5 கி. மீ. தொலைவிலும் உள்ளது.

நிற்க. மேற்கூறிய ஆலய அமைப்பு சோழ நாட்டிலுள்ள மற்றைய ஆலயங்களிலிருந்து சற்று மாறுபட்டுள்ளது. ஆதிதளத்தின் பத்திப்பிரிப்பு அமைப்பிலிருந்தே இவ்வாலயம் நிச்சயம் ஆதிதளத்திற்கு மேல் கூடுதலாகத் தளங்கள் பெற்றுள்ளது என்பதை உணரலாம். பொதுவாக ஆதிதளத்தின் ஆரச்சுவர் பூமிதேசத்தின் மேல் காட்டப்படும். இவ்வாலய அமைப்பு சற்று மாறுபட்டு ஆதிதளக் கூரைமுடிவில் மேல் உள்ள பூமிதேசத்திலிருந்து இரண்டாம் தளம் நேரடியாக எழுகிறது. இந்த இரண்டாம் தளம் ஆதி தளம் போன்றே முறையான பத்திப் பிரிப்புகளுடன் விரிந்து கூரை உறுப்புகள் பெற்றுக் கபோதத்துடன் முடிவடைகிறது. ஆனால் இரண்டாம் தளத்திலிருந்து மேலெழும் மூன்றாம் தளம் முறையான ஆர உறுப்புகள் பெற்று அழகாக முடிவடைந்து தளமுடிவில் கிரீவம் எழ சிகரம், ஸ்தூபி போன்ற விமான அங்கங்களைப் பெற்று விண்ணில் உறைகிறது.

திருவையாற்றுத் தடத்தில் பதிந்துள்ள மற்றுமொரு வரலாறு இந்த "வடகுரங்காடுதுறை".
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.