http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[146 Issues]
[1535 Articles]
Home About US Temples Facebook
Issue No. 16

இதழ் 16
[ அக்டோபர் 16 - நவம்பர் 15 ]


இந்த இதழில்..
In this Issue..

கற்றளி கட்டிய காரணம்
பகவதஜ்ஜுகம் - 5
கோயில்களை நோக்கி - 4
பனைமலையில் ஒரு மாலைப்பொழுது
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம் - 2
சிந்து வெளியில் முருகன் - திரு. ஐராவதம் மகாதேவனின் மறுமொழி
ஜி.என்.பாலசுப்ரமணியம்
சங்கச் சிந்தனைகள் - 4
இதழ் எண். 16 > இதரவை
சிந்து வெளியில் முருகன் - திரு. ஐராவதம் மகாதேவனின் மறுமொழி
ஐராவதம் மகாதேவன்
அன்புமிகு இராமசந்திரன் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் மிக நீண்ட, மிக சுவாரசியமான கடிதம் கிடைத்தது. என் உடல்நிலை காரணமாக மிகவும் சுருக்கமாகவே பதிலெழுத முடிகிறது. மன்னிக்கவும்.

என் ஆய்வு சிந்துவெளி முருகனைப் பற்றியது. தமிழக சங்க கால முருகனைப் பற்றியது அல்ல. சிந்துவெளிப் பண்பாட்டுக்குப் பிற்காலங்களிலிருந்து நான் கொடுத்துள்ள சான்றுகள் ஓரளவே சிந்துவெளி முருகனின் எச்சங்களாகும். ஈராயிரம் ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு சங்க காலத்தில் முருகன் வரலாறு முற்றிலும் மாறிவிட்டது. தமிழகத்தில் இன்று கிடைக்கும் திருவுருவங்கள் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. அவற்றுக்கும் சிந்துவெளி முருகுவிற்கும் பெயரளவு மட்டுமே தொடர்பு காண முடியும். 'பேய்' என்றால் உங்களுக்குப் பிற்காலத்தில் உருவான பயங்கர தோற்றமே தென்படுகிறது. உண்மையில் 'பேய்' என்பதற்கு ஆதியில் 'உடலிலிருந்து நீங்கிய ஆவி' (disembodied spirit) என்று பொருள் இருந்தது. ஆதி காலப் பேய்க்கு உருவம் கிடையாது. அதைத் தமிழில் 'அணங்கு' 'ஆர்' என்ற மற்ற உருவமற்ற "தெய்வங்களுடன்" ஒப்பிடலாம்.

சிந்துவெளி முருகனின் எச்சம் சங்ககாலத்துக்கு முந்தைய பெருங்கற்காலத்தில் மட்டுமே இருந்தது. (ஏறத்தாழ கி.மு 1000 - 500).

(சிந்துவெளி மற்றும் தமிழகப் பானை ஓடுகளில் உள்ள முருகு எனக் கருதக் கூடிய வடிவங்களை கையால் வரைந்துள்ளார்),

இந்த தெய்வத்திற்கு 'முருகு' என்ற பெயர் இருந்திருக்கலாம் என்பது என் ஆய்வின் முடிவு. 'முருகு' என்றால் 'அழகு' என்பதெல்லாம் பிற்காலக் கற்பனைகள். சங்க காலத்தில் கூட முருகுவிற்கு உருவ வழிபாடு கிடையாது. முருகு அதன் பூசாரியான வேலன் மீதோ ஒரு பெண்ணின் மீதோ வந்து வெறியாட்டம் நடைபெறும் போதுதான் முருகன் வெளிப்படுகிறான்.

முருகனின் அழகையும் தோற்றத்தையும் அழகையும் ஆடை ஆபரணங்களையும் வர்ணிக்கும் பாடல்களெல்லாம் காலத்தால் பிற்பட்டனவாகும். (i.e relating to the harappan and megalithic). நீங்கள் P.L.Samy எழுதிய முருகன் நூலைப் படித்துப் பார்க்கவும்.

நன்றி.

ஐராவதம் மகாதேவன்.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.