http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 40

இதழ் 40
[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

புலவரும் புரவலரும்
பஞ்சவன்மாதேவீசுவரம்
சில நேரங்களில் சில கேள்விகள்
திரும்பிப் பார்க்கிறோம் - 12
வீரபுரத்து விநாயகர்
Silpis Corner (Series)
Silpi's Corner-02
சங்ககாலத்து உணவும் உடையும் - 4
நெஞ்சம் அழைத்தது! நேயம் தடுத்தது!
இதழ் எண். 40 > சுடச்சுட
பஞ்சவன்மாதேவீசுவரம்
மு. நளினி

தமது சிற்றன்னையும் முதலாம் இராஜராஜரின் தேவியுமான பஞ்சவன் மாதேவிக்காக முதலாம் இராஜேந்திரரால் எழுப்பப்பட்ட பள்ளிப்படைக் கோயில் பஞ்சவன் மாதேவீசுவரம். இத்திருக்கோயிலின் தாங்குதளத்தில் வடக்கு, மேற்கு, தெற்கு என முத்திசைகளிலும் பரவிய நிலையில் இராஜேந்திரரின் கல்வெட்டொன்று வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் தென்பகுதி, விமானத்தின் தென் கோட்டத்திற்கு முன்னால் பின்னாளில் அமைக்கப்பட்ட கட்டமைப்பில் சிக்கியிருந்தது. 1986ல் இக்கல்வெட்டை மையத்தின் சார்பில் படியெடுத்த போதும் இப்பகுதியை விடுத்தே பாடத்தை எழுதிவரமுடிந்தது.

செப்டம்பர் 8, 9 ல் கும்பகோணம் சென்றிருந்தபோது பஞ்சவன்மாதேவீசுவரத்தைப் பார்க்கும் வாய்ப்பமைந்தது. பட்டீசுவரம் திருக்கோயில் செயல் அலுவலர் திரு. மாரியப்பன் வந்திருந்தார். மையத்தின் தொடர் முயற்சியின் பயனாய் இந்து அறநிலைய ஆட்சித்துறை நிதி ஒதுக்கீடு செய்து அக்கோயிலைப் புதுப்பித்துள்ளமையை அவர் தெரிவித்தார். கல்வெட்டை மறைத்துக் கொண்டிருக்கும் கட்டமைப்பை நீக்கியுதவ அவரை வேண்டினோம். யாரேனும் நன்கொடையாளர் கிடைத்தால் அக்கட்டமைப்பை நீக்கிவிடலாம் என்றும் அதற்கு ரூ. 25,000/- செலவாகும் என்றும் அவர் கூறவே, வரலாறு டாட் காம் வழி வேண்டுகோள் வைத்திருந்தோம்.

கரூர் ஏர்வில் எக்ஸ்போர்ட்ஸின் உரிமையாளர் திரு. கே. என். பாலுசாமி வரலாறு டாட் காம் வேண்டுகோளைக் கண்டு, தாம் அப்பொறுப்பை ஏற்பதாக மகிழ்வுடன் தெரிவித்தார். அவருடைய அன்பான அறிவிப்பைத் தொடர்ந்து சுவாமிமலை துணை ஆணையர் திரு. ச. இலட்சுமணனுடன் திரு. பால பத்மநாபன் பேசினார். திரு. மாரியப்பனுக்குத் தகவல் தரப்பட்டதுஅவரும் துணை ஆணையரும் இப்பணியை நிறைவேற்ற அநுமதியளித்தனர்.

அறநிலையத்துறை அநுமதி கிடைத்தமையைத் திரு. கே. என் பாலுசாமிக்குத் தெரிவித்துவிட்டுப் பணி தொடங்கப்பட்டது. திரு. பால பத்மநாபனும் திரு. சு. சீதாராமனும் பணிப்பெறுப்பு ஏற்றனர். கட்டமைப்பை நீக்கும்போது கல்வெட்டு வரிகளுக்கு ஏதும் சேதம் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் பணி தொடங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நீடித்த இப்பணியில் பதினைந்து பேர் ஈடுபட்டுள்ளனர். காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை உழைத்து ,அரும்பாடுபட்டு அக்கட்டமைப்பை நீக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பராட்டுக்குரியவர்கள்.

கல்வெட்டுக்குக் கிஞ்சித்தும் இழப்பில்லாமல் இப்பணியை நிறைவேற்றித் தந்த அன்புக்குரிய இணையர் திரு. பால பத்மநாபனும் திரு.சு. சீதாராமனும் தமிழ்நாட்டு மக்களின் உளமார்ந்த நன்றிக்குரியவர்கள். இப்பணியைத் தம் பொறுப்பில் ஏற்று இதற்கான முழுச் செலவையும் கொடையாக வழங்க முன் வந்த கரூர் பேரன்பர் திரு. கே. என் . பாலுசாமியை வரலாற்றுலகம் வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளது. அவருடைய அருட்சிந்தனையால் ஆயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த அருமையான கல்வெட்டொன்று தமிழ்நாட்டிற்கு இன்று முழுமையாகக் கிடைத்துள்ளது.

இத்தனையாண்டுக் காலமாய் மறைக்கப்பட்டிருந்து இப்போது வெளிப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டைப் படிக்கும் பணியில் மைய ஆய்வர்கள் ஈடுபட்டுள்னர். அடுத்த டாட் காம் இதழில் கல்வெட்டின் முழுப்பாடமும் வெளியிடப்படும்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.