http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 40

இதழ் 40
[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

புலவரும் புரவலரும்
பஞ்சவன்மாதேவீசுவரம்
சில நேரங்களில் சில கேள்விகள்
திரும்பிப் பார்க்கிறோம் - 12
வீரபுரத்து விநாயகர்
Silpis Corner (Series)
Silpi's Corner-02
சங்ககாலத்து உணவும் உடையும் - 4
நெஞ்சம் அழைத்தது! நேயம் தடுத்தது!
இதழ் எண். 40 > ஐராவதி சிறப்புப் பகுதி
வீரபுரத்து விநாயகர்
ஐராவதம் மகாதேவன்

'வீரபுரமா? அது எங்கிருக்கிறது? அந்த ஊர் விநாயகருக்கு என்ன சிறப்பு?' என்று 'விஷயம் தெரிந்த' வரலாற்று ஆய்வாளரும் தொல்லியல் அறிஞர்களும்கூட என்னைக் கேட்கிறார்கள். என்ன காரணத்தாலோ வீரபுரத்து விநாயகரே இந்தியாவின் மூத்த பிள்ளையார் என்ற முக்கியமான செய்தி இன்றும் பரவலாக அறியப்படவில்லை.

சிவபெருமானின் மூத்த மகனாகிய விநாயகரை மூத்த பிள்லையார் என்று குறிப்பிடும் மரபு வழக்கத்தில் சுருக்கமாகப் பிள்ளையார் என்றாகிவிட்டது. ஆனால், 'மூத்த பிள்ளையார்' என்று இங்கு நான் குறிப்பிடுவது, நம் நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விநாயகச் சிற்பங்களில் காலத்தால் முற்பட்ட ஏழே செ.மீ உயரமுள்ள ஒரு சிறிய சுடுமண் படிமம் ஆகும். ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் வீரபுரம் என்ற ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட அகழாய்வில் இந்த விநாயகப் பெருமான் தோன்றினார். இவர் சாதவாகன மன்னரின் ஆட்சிக்காலத்தைச் சார்ந்தவர் (கி.மு 50 - கி.பி 300). இதுவரை வடநாட்டில் குப்தர் காலத்திலிருந்தும் (கி.பி 4ம் நூற்றாண்டு முதல்), தென்னாட்டில் பல்லவ - பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தும் (கி.பி 6ம் நூற்றாண்டு முதல்) கிடைத்துள்ள விநாயகரின் கற்சிலைகளே மிகப் பழமை வாய்ந்தன என்று கருதப்பட்டது. இப்பொழுது தென்னாட்டைச் சேர்ந்த வீரபுரத்து விநாயகரே இந்தியாவின் மூத்த பிள்ளையார் என்ற பெருமைக்கு உரியவர் ஆகிவிட்டார்.

விநாயகப் பெருமானைப் பற்றி பல அறிஞர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்று அமெரிக்காவில் 1992ல் வெளியானது. அதில் எம்.கே.தவலீகர் என்ற இந்தியத் தொல்லியல் அறிஞர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்துதான் எனக்கு வீரபுரத்து விநாயகரைப் பற்றிய செய்தியும் படமும் கிடைத்தன. வீரபுரத்து விநாயகரைப் பற்றி அக்கட்டுரையில் அவர் கொடுத்துள்ள செய்திகளைக் கீழே காணலாம். (தமிழாக்கம் : இரா.கலைக்கோவன்).'காலத்தால் முற்பட்ட கணேசரின் சிறிய சுடுமண் உருவச்சிலை ஒன்று ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் வீரபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் மூன்றாம் பருவ அடுக்கிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடுக்கியல் படிவாய்வு, அகழ்வில் கிடைத்திருக்கும் பிற பொருட்கள் கொண்டு இச்சிலையின் காலம் கி.மு 50 - கி.பி 300க்குள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சில சாதவாகனர் நாணயங்கள் வழங்கியுள்ள சான்றுகளின் அடிப்படையில் இவ்வடுக்கினைப் பாதுகாப்புடன் காலக்கணக்கீடு செய்யலாம். அதனால் இந்த கணேசர் உருவச்சிலையை கி.பி 300க்கு முற்பட்டதென்று உறுதிபடக் கூறலாம்.

சிதைந்த நிலையில் கிடைத்துள்ள இச்சுடுமண் படிமத்தின் கால்கள் உடைந்திருந்தபோதும், இது நிற்கும் நிலையில் அமைந்த படிமம் என்பதும் யானைத்தலை கொண்டுள்ளது என்பதும் அறியுமாறு உள்ளன. இதன் இருகைகளும் உடைந்திருப்பதுடன் தலையலங்காரமும் சிதைந்துள்ளது. இடக்கைக் கிண்ணத்திருந்த மோதகம் சுவைக்கும் நோக்குடன் இதன் துளைக்கை இடம்புரியாத மேல்நோக்கி வளைந்துள்ளதாகக் கொள்ளலாம். பாம்பை முப்புரி நூலாக அணிந்திருக்கும் இதன் இடுப்பாடை, முழங்கால்கள் வரை நீளும் சிற்றாடையாக இருந்திருக்கலாம். பிதுக்கமான விழிகளும் பருத்த உடலும் இப்படிமத்திற்குச் சற்று அருவருப்பான தோற்றம் தருகின்றன. பானை வயிற்றுடன் இயக்கனைப் போல் காட்சி தரும் இச்சுடுமண் உருவச்சிலை ஐயம் திரிபற கணேசருடையதே.'

("Ganesa : Myth and reality by M.K.Dhavalikar in Ganesh : Studies of an Asian God. (Ed.) Robert L. Brown. State University of Newyork Press, 1992, pp. 51-52, Fig. 5).
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.