http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 47

இதழ் 47
[ மே 16 - ஜூன் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

பள்ளிப்படைக் குழப்பங்கள்
விழிஞம் குடைவரைக்கோயில்
மகப்பேற்றின் கொண்டாட்டம்
திரும்பிப் பார்க்கிறோம் - 19
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 2
காற்றே! காற்றே! கதை சொல்லாயோ!!
Olipathi Vishnugraham in Malaiyadippatti
அவர் - முதல்பாகம்
கத்திரி வெயிலில் கோடைமழை
ஒரு தழுவலும் இரண்டு மன்னர்களும்
இதழ் எண். 47 > பயணப்பட்டோம்
காற்றே! காற்றே! கதை சொல்லாயோ!!
ரிஷியா

அன்புள்ள கரிகாலக்கண்ணனுக்கு,

காற்று இனிமையாக வீசட்டும். தினம் ஒரு கவிதை நல்கி மகிழட்டும். இராஜராஜேசுவரத்து விமானத்தோடு கிசுகிசுப்பாய்க் கதைக்கட்டும். காற்று சிற்பங்களோடு பெருமிதமாய் உறவாடி, உரையாடிக் கடக்கட்டும் - மாமன்னனது ஆளுமையை, ரசனையை, பண்பு நலன்களை, இலட்சியங்களை, உயர்வுகளை, மாண்புகளை. நாம் யார் அவர் கதை சொல்ல? ஆனால், தேர்ந்த கதைசொல்லிகளாய் நாம் நம் கற்பனைகளை வளர்க்கிறோம் அந்த வளாகத்தில். நம் சொந்தக் கற்பனைகளை மாமன்னனது வாழ்க்கையாய், பார்வைகளாய்ச் சித்தரிக்கின்றோம். ஏன்? ஒன்றல்ல, இரண்டல்ல பல கதைகள் நம்மை அறியாமல் பேசி அவருக்குப் பல இழுக்குகளைச் செய்கின்றோம். கட்டுமானத்தைப் பற்றிய கதைகள், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கதைகள் இப்படி எத்தனையோ!!

நெஞ்சைப் பிளக்கும் ஒரு பொய்க்கதை - இராஜராஜசோழன் தற்கொலை செய்து கொண்டார். யார் தற்கொலை செய்துகொள்வார்கள்? மனோதிடமற்றவர்கள், துன்பம், தோல்வி கண்டு துவண்டு விடுகிறவர்கள், கோழைகள். இராஜராஜனுக்கு இது பொருந்துமா? தன் ஒரே தனயன் ஆதித்தகரிகாலன் கொலையுண்டு மரணம் அடைந்த போது, தன் சிறிய தந்தையின் விருப்பத்தை அறிந்து அரியணையை விட்டுக்கொடுத்த அந்தத் திடமனது எத்தகையது! 16 வருடங்கள் காத்திருந்த அந்த மனம் சாதாரணமானதா?

எத்தனையோ மனோரதங்கள், கற்பனைப் பட்டறைகள், கருத்துக் கருவூலங்கள் தன்னுள்ளே இருந்தும் தக்க காலம் வரை, வெளிப்படுத்த முடியாமல், சாதிக்க இயலாமல், காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் தனக்குள்ளே போட்டு வைத்திருப்பது எத்தனை கொடுமை என்பதை ஒரு கலைப்படைப்பாளி அறிவான்.

அந்த 16 வருடங்களும் இராஜராஜனுக்குக் கிடைத்திருந்தால்.................................... இன்னும் எண்ணற்றவைகளைச் சாதித்திருப்பார் - தமிழ்நிலமும், தமிழ் மனமும் பூரித்துப் பெருமை கொள்ளும்படியாக!

தன் தனயனைக் கொன்றவர்கள் யார்? எப்படித் துணிந்தார்கள்? கண்டுபிடித்துத் தண்டித்தே தீரவேண்டும் என்ற அக்னியை மனதில் வைத்துக்கொண்டு வெறும் யுவராஜா பட்டத்துடன் 16 வருடங்கள் வாழ்ந்த, நடமாடிய நெஞ்சம். தற்கொலைக்குத் துணிகின்ற நெஞ்சமா அது? கொலைக் குற்றவாளிகள் யார் என்று தெரிந்தபின் மரணதண்டனை விதிக்காமல் நாடுகடத்தித் தண்டித்த ஒரு பண்பட்ட இதயம் எத்தகைய துன்பியல் நிகழ்வுகளையும், கருத்து வேறுபாடுகளையும் தாங்கிக்கொள்ளும். தற்கொலை என்பதற்குக் கல்வெட்டுச் சான்றோ, இலக்கியச்சான்றோ கிடையாது. அவரின் ஆளுமையை ஆராய்ந்தால் இத்தகைய கொடூரப் பழிபோடுவதற்கு மனம் துணியாது.

கரிகாலக்கண்ணா, மேற்கண்டவை என் மனதில் தோன்றியவை என்றாலும், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், உடையார்குடி கல்வெட்டுக்கள் சார்ந்தே இதைத் துணிந்து எழுதியுள்ளேன். மேலும் இராஜராஜசோழன் ஓர் ஆடற்கணிகையின் விருப்பத்திற்காகத்தான் பெருவுடையார் திருக்கோவிலை எடுப்பித்தார் என்று ஒரு கதை. தம் மனைவியர் அனைவரின் பெயரையும் அவர்தம் சேவையையும் பெருமிதமாகக் கல்வெட்டில் சொல்லும் ஓர் உயர்ந்த உள்ளம் படைத்த மனிதனுக்குத் தன் காதலை மறைக்க வேண்டிய அவசியமில்லை. வெளிப்படையாக அந்த ஆடற்கணிகையைக் குறித்துத் தம் கல்வெட்டுக்களில் சொல்லியிருப்பார். அப்படிப்பட்ட ஆர்வங்கள் உள்ளவராக இருந்திருந்தால் (திருமணத்தைக் கடந்த காதல் போற்றப்பட்டிருக்கிறது, சோழகுலத்தில். எ.கா - இராஜேந்திரன் பரவை நங்கை காதல்)

ஆகவே கல்வெட்டுச் சான்றுகள் இல்லாத கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வருவோம். இனிவரும் நாட்களில் உணர்வுகளுக்கும், நம் சொந்த அளவுகோல்களுக்கும் இடம் கொடாமல் உண்மைகளுக்கு இடம் தருவோம். இராஜராஜேசுவரத்தில் சிற்பத்தொகுதிகள் ஏராளம், ஏராளம். ஆகவே, கற்பனை வளமிக்க கதைகள் ஏராளம், தாராளம்.மேலே உள்ள புகைப்படம் விமானத்தின் தென்மாடத்தில் காணப்படும் தட்சிணாமூர்த்தி திருவடிவம், சிவனின் யோக வடிவங்களில் முதன்மையானது. கல்லால மரத்தின் கீழ் முயலகனை மிதித்துக்கொண்டு அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் திருக்கோலம்.

இந்தப் புகைப்படமும் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்திதான். முனிவர்களின் தோற்றத்தில் சில வேறுபாடுகள், அவ்வளவே. இந்த வேறுபாடுகள் இராஜராஜசோழ சிற்பியின் கற்பனைக்கோலங்கள், அவ்வளவே. ஞான வடிவான தட்சிணாமூர்த்தியின் தத்துவத்தை விளக்கும் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிற்பத் தொகுதிகளில்.

இராஜராஜேசுவரத்தில் யார் தாடி வைத்திருந்தாலும், உச்சி முடி கொண்டையோடு, வணங்கும் நிலையில் கூப்பிய கரங்களோடு இருந்தால் போதும், உடனே வயது முதிர்ந்தவர் கருவூரார், நடுத்தரவயதுக்காரர் இராஜராஜன், இளவயதுக்காரர் இராஜேந்திரன் என்று கதை பகர்வார்கள். காலம் காலமாய் இதே கதைதான். இந்தக் கதைகளுக்கு ரிஷிமூலம், நிதிமூலம் தான் என்னவோ?

சிற்பங்களையும் சிற்பத் தொகுதிகளையும் தக்க புராண வரலாற்றுப் பின்புலத்தோடு அனணுகவேண்டும். அவை இடம் பெறும் கட்டுமானப்பகுதி, திசை, கோட்டம் இவற்றை ஆராய வேண்டும். சிற்பங்கள் வெளிப்படுத்தும் தரவுகள், நிகழ்வுகள், முத்திரைகள், ஏந்தியிருக்கும் படைக்கலன்கள், இசைக்கருவிகள் எல்லாவற்றையும் நுணிகிக் கவனிக்க வேண்டும். தவறான அணுகுமுறையால் தவறான கதைகள் வளர நாம் காரணர்கள் ஆகிவிடுவோம்.மேலே கண்ட புகைப்படங்களில், கருங்கல்லில் பசுமைப்புரட்சி செய்யும் அரசமரங்களைக் களைவதுபோல் பொய்க்கதைகளைக் களைய வேண்டும். (அரசக்கன்றுகளை அகற்றவேண்டும் திருக்கோவில் நிர்வாகம் என்பது டாக்டர் நண்பர் நாகராஜனின் வேண்டுகோள்).

வடக்குத் திருச்சுற்றில் உள்ள தூணில், இராஜராஜன் நிறுவிய தட்சிணாமூர்த்தி பிரதிமம் பற்றிய கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. வழக்கமான தட்சிணாமூர்த்தி திருவடிவத்துடன் மேலும் சில சிற்பச் செறிவூட்டல்கள் கொண்ட செப்புப் பிரதிமத் தொகுதி பற்றி உரைக்கின்றது. மலைமுகடுகள், பாம்பு, புலி, கின்னரர்கள், கர்ணபிரவிருத்தர்கள், தொங்கும் பொக்கணம்(பை) என ஒரு புதுமையான சிற்பத் தொகுதியை நிறுவியுள்ளார். (இதுபற்றி, பின்னாளில் விரிவாக எழுதுகிறேன்).

விமானத்தின் தென்முகத்தில் ஒவ்வொரு நிலையிலும் காணப்படும் சிற்பத் தொகுதியில் உள்ள பல வேற்றுமைகளை போலவே, பிரதிமைத் தொகுதியிலும் பல புதுமையான வேற்றுமைகள் உள்ளன. எத்தகைய செறிவூட்டல்கள் இடம் பெற்றிருந்தாலும் தட்சிணாமூர்த்தியின் தத்துவமும், தாற்பரியமும் ஒன்றே. சிவஞான குருவாய் இளமைத் தோற்றத்துடன் சிவபெருமான் வேத ஞானங்களைச் சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார், அவ்வளவே. எனவே, சிற்பத்தொகுதியில் கருவூரார், இராஜராஜசோழன், இராஜசேந்திரன் இவர்களுக்கு இடமில்லை என்பது தேற்றம்.

மேலும், கருவூராருக்கும், இராஜராஜனுக்கும் உள்ள தொடர்பு பற்றிக் கல்வெட்டு குறிப்புகள் இல்லை.

அழகான வளாகத்தில் அழகான சிந்தனைத்தூறல்கள்.

இங்கே நுழைந்தவுடன், "நான்" என்னும் நம்பிக்கை எனக்குள் துளிர்விடுகின்றது. வாழ்க்கை என்னும் வசந்தத்தை வாழவேண்டும் என்று உரைக்கின்றது. எனக்குள் இருக்கும் ஆன்மா விழித்துக் கொள்கின்றது.

ஓர் உன்னத மனிதரின் வானாளவிய சிந்தனைகள் என் கரம் பிடித்து வழி நடத்துகின்றது. உயர்வான, அழகான உண்மைகளைத் தேடத் துவங்கும் ஒரு தேடல் யாத்திரை தொடங்குகின்றது.

வாழ்க்கை அர்த்தமுள்ளதாய், ஆனந்தமானதாய் மாறிவிடுகின்றது, கரிகாலக்கண்ணா.

When a man enters a temple precinct, his human spirit should reach higher planes of exaltation.

He should feel his life to be a continuation of eternity in all its glory.

His mind should attain peace and serenity as never before.

SRI RAJARAJESWARAM gives it all in abundance.

In a layman's language, Big temple is a statement of Mr.RAJARAJACHOLAN's life and personality.

Who can define it ? How to define it ?

Don't ask such "off the wall" questions that one wouldn't dare to ask----------- in a million years.

விடைபெறுகிறேன்.

பிரிய நிமிஷங்களுடன்,
ரிஷி

(யார் இந்த கரிகாலக்கண்ணா? வீரசோழியம் போற்றும் சோழ இளஞ்சிங்கம். வரலாற்றின் ஒளிக்கீற்றுகள் இன்னும் அவர்மேல் படவில்லை).
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.