http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 49

இதழ் 49
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாம் ஆண்டை நோக்கி...
வாள் நிறுத்தி வணங்கும் இணையர்
திரும்பிப் பார்க்கிறோம் - 21
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 3
காதல் எதிரிகள் - சில நிகழ்வுகள்
Virtual Tour On Kundrandar Koil - 1
Airavati - Preview of Mahadevan Section
Airavati - Preview of Tamil Section
Airavati - Preview of English Section
அவர் - மூன்றாம் பாகம்
Silpis Corner (Series)
Silpi's Corner-05
திருமணம் = இராமன்?!
இதழ் எண். 49 > பயணப்பட்டோம்
காதல் எதிரிகள் - சில நிகழ்வுகள்
ரிஷியா
திருமகளைக் கண்ட நாள் முதலாய்,

"ஏதத் விஸ்வ நிருப ஸ்ரேணி..."

வேத மந்திரம் எனக்கு. இதை முதலில் வாசிக்காமல் வேறு கல்வெட்டைப் படிப்பதில்லை தஞ்சைப் பெரிய கோவில் வளாகத்தில். முதல் முறையாக எழுத்துக்கூட்டி வாசித்து, மெய்மறந்து ரதித்துக் கொண்டிருந்தேன். எத்தனை அழகான சொற்றொடர். வடமொழிகூடத் தேனாய் நாவில் ருசித்தது, அமிர்தாமாய்த் தோன்றியது.

"இது உலகில் உள்ள மன்னர்களுடைய மகுடங்கள் யாருடைய திருவடிகளை மாலைபோல அலங்கரிக்கின்றனவோ அந்த இராஜராஜகேசரிவர்மனுடைய சாசனம்". - அமரத்துவம் வாய்ந்த சொற்றொடர். கணங்கள் எல்லாம் அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏதோ ஒரு ஜன்மத்தின் நிகழ்வை நினைத்தது மனது. கற்பனை வெளியில் நிகழ்காலம் பொருளற்றுப் போனது. யுகயுகமாய் ஏதோ ஒன்று தொடர்ந்து வந்து பிணைத்தது போன்றிருந்தது. இந்த வாழக்கையே ஒரு வரம். கண்கள் பனித்தன. இதயம் நெகிழ்ந்தது.

திடீரென்று, "இந்தக் கோயிலை இராஜராஜசோழன்தான் கட்டினார் என்பதற்கு என்ன ஆதாரம்? கல்வெட்டில் எங்கு உள்ளது" என்று அதட்டலாய் ஒரு குரல். கனவுலகத்திலிருந்து விடுபடமுடியாமல், நான் தலைதிருப்பவில்லை. நிஜத்திலும் சரி, சினிமாவிலும் சரி காதலுக்கு எங்கிருந்து தான் எதிரிகள் முளைப்பார்களோ தெரியவில்லை. ஆனால், சரியான சமயத்தில் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள். மறுபடியும் அதே அதட்டல். "கரடி, கரடி" என மனதிற்குள் திட்டிக்கொண்டே திரும்பினால், புகைப்படக் கருவியுடன் ஒருவர். மறுபடியும் அதே கேள்வி. வாய்பேச முடியவில்லை. என்னையறியாமல் சைகையால் "ராஜராஜ" என்ற தொடரைக் காட்டிவிட்டேன். புகைப்படம் எடுத்துக் கொண்டு, தான் ஒரு வரலாற்றுத்துறை மாணவன் என்று அறிமுகம் செய்துக் கொண்டார். அய்யடாஸஸ அவருடன் வந்த மாணவர்கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டு வேறு என்ன ஆதாரம் என்று மிரட்ட, தெரியாது என்று தலையை ஆட்டினேன். "ஜயோ பாவம்டா, ஊமைப் பெண்ணடா", என்று பரிதாபப்பட்டு விலகிச் சென்றார்கள். தப்பிப் பிழைக்க இது தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது.

"ஸ்ரீவாசுதேவா..." கல்வெட்டைப் பெரிதும் முயன்று வாசித்துக் கொண்டிருக்கையில், "அதான் அழிஞ்சி தேய்ஞ்சு போயிருக்கே. அப்புறம் என்னதுக்கு? மேலே உள்ளது நல்லாயிருக்கே அதை வாசிச்சு காண்பீங்க", என்று அதட்டல் விடுத்தார் ஒரு பெரியவர். "ஜயா நேரமில்லை. இந்தத் தொடரைத்தான் வாத்தியார் படிச்சு வரச் சொன்னார்" என்று முகம் மறந்து போன வரலாற்று ஆசிரியை (பெட்ஷீட் மிஸ்! அட, பட்டப்பெயருங்க!!) மேல் பழியைப் போட்டு விட்டு வாசிப்பைத் தொடர்ந்தேன்.

சதயத்திருவிழா கல்வெட்டுக்களை முதல்முறையாகப் படிக்கும் போது ஒருவர், நீங்கள் யார் என்று நச்சரிக்க பாஸ பாஸ காற்றில் கைகளால் அபிநயம் புரிந்தேன். ஏதோ அருகிலிருந்து பார்த்தவர் போல் அடுத்து மிரட்டினார். "இராஜராஜசோழனைத் தெரியுமா". பேஸ பேஸ (யாருக்குத் தெரியும்?). இரு கரங்களையும் இணைத்து நெஞ்சில் வைத்து ரொம்ப ரொம்பப் பிடிக்கும் என்று நான் அபிநயம் புரிய, ஏதோ மிரண்டவர் போல் என்னை முறைத்து, முகத்தைச் சுளித்துவிட்டு அப்பால் நகர்ந்தார். அய்யடா. எனக்குச் சிரிப்பு தாங்கமுடிவில்லை. மனதிற்குள் இந்த பாடல்தான் ஒலித்தது - ஏனோ ராதா இந்த பொறாமை! யார் தான் அழகால் வீரத்தால் மயங்காதவரோ?

விசேஷ நாட்களில் சென்று கல்வெட்டுப் படித்தால், கூட்டத்தின் தொல்லை அதிகம். பல கேள்விக் கணைகளால் நொந்துபோக வேண்டியிருக்கும். தனியாகப் போனால் உடைமைகள் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டு கல்வெட்டுக்களோடு பேசவேண்டிருக்கும். ஏகப்பட்ட விமர்சனங்கள் முதுகுப்புறம் எழும்பும். உணர்ச்சி வசப்படாமல் நம் காரியத்திலும் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

ஒரு நாள் வீய்..., வீய் என்று விசில் சத்தம் எங்குச் சென்றாலும் தொடர்ந்தது. வடக்குப்புறம் தொடங்கி, மேற்குப்புறம் வரை இடைவிடாமல் விசில் கச்சேரி. விசிலடிப்பது எனக்கும் பிடிக்கும் என்றாலும், அன்று உச்சக் கட்டமாக நடந்தது. சூரியன் மேற்கில் விடைபெற்றுக் கொண்டிருந்தவேளை, வெயிலில் நின்ற களைப்பும் சேர்ந்துக் கொள்ள, இதற்கு மேல் முடியாது என்று தோன்றியது. சரி, விசில் கச்சேரியை யார் நடத்துகிறார்கள் என்று பார்த்தால், வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, துண்டு, நெற்றியில் விபூதிப்பட்டை என அக்மார்க் தமிழ்க் கிராமத்து இளந்தாரிகள். ஒஹோ... நேருக்கு நேர் நின்று நான் பலங்கொண்ட மட்டும் இழுத்து விசிலடித்தேன்.

"ஏலே! போலாம் வா, பட்டிணத்துப் பொம்பளைங்க எல்லாம் ரௌடிங்கலே" என்று விமர்சனம் வேறு. முறைத்துவிட்டு என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றுவிட்டார்கள்.

திருமகளைத் தேடி

சென்ற மாசி மாதத்தில் திருப்பதி சுற்றுப் பயணம், விஜபி தரிசனம் என்றாலும், தள்ளுமுள்ளுவில் கல்வெட்டுக்களைச் சரியாகப் பார்க்கக் கூட முடியவில்லை. உள்சுற்று பிரகாரத்தில் உணவுக்கு டோக்கன் வாங்கிக்கொண்டு மீன் சின்னம் புடைப்புச் சிற்பமாகப் பொறிக்கப்பட்ட சுவற்றை நோக்கிக்கொண்டு நின்றேன். "பாப்பாஸ அம்முக்குட்டி எங்கேம்மா இருக்கே?" அம்மாவின் தேடல் குரல் கேட்டுத் திரும்பினால், என் பின்னால் ஒரு நீண்ட வரிசை. அச்சச்சோ இதென்னடா கூத்து என்று புளியோதரை பிரசாத வரிசைக்கு மெல்ல நழுவினேன். அங்கிருந்து பார்த்தால், ஒவ்வொருவராக மீன் சின்னத்தைப் பக்திச் சிரத்தையுடன் தொட்டு வணங்கி, "கோவிந்தா! கோவிந்தா!" என்று கோஷமிட்டார்கள். அம்மா என்னை முறைக்க, நான் முகத்தை வேறுபக்கம் திருப்பிச் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினேன்.

ஆஹா, பாண்டிய வேந்தர்களுக்கு என்னால் முடிந்த அணில் சேவை. என் நண்பர் கிருஷ்ணாவிற்கு ஒரு குறை உண்டு. ஆனாலும், நீ பாண்டியர்களைக் கண்டுக்கொள்வதில்லை என்று அடிக்கடி நொந்து கொள்வார். மேற்படி சேவையினால் என் மேல் விழுந்த பழி விலகிற்று. அப்பாடா! நல்லவேளை தொண்டு விபரீதத்தில் முடியவில்லை. ஆனால், "திருமகளைப் போலஸ" எனத் தொடங்கும் அந்தக் கல்வெட்டு ஒன்றைக்கூடத் தேட முடியவில்லையே என்ற ஏமாற்றம் எனக்குண்டு. (திருமகள், திருமன்னி எனப் பத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் அங்குண்டு என்பதை அறிவேன்).

ஆந்திரா பயணத்தில், அடுத்ததாய்த் திருகாளத்தியப்பர் ஆலயம். பாடல் பெற்ற திருத்தலம். தமிழ் மன்னர்களின் கொடைகள் பல பெற்ற திருக்கோவில். சிவாச்சாரியாரிடம் அனுமதி கேட்டேன். கர்ப்பக்கிரக வெளிப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டுக்களை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று. அவரோ, ஒரே போடாக, முடியாது. உங்களை அனுமதித்தால் மற்றவர்களும் அனுமதி கேட்பார்கள். எனவே முடியவே முடியாது என்றhர். ஹிஸஸ,ஹி என்று வழிந்துவிட்டு மனத்திற்குள் அடுத்த ஜென்மத்தில் வண்டாய்ப் பிறக்கக் கடவாய் என்று சபித்துவிட்டு சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு ஒவ்வொரு சுவராய் நோட்டம் விட்டபடியே வெளிப் பிரகாரத்திற்கு வந்தேன். வாவ்!! முதலாம் குலோத்துங்கனின் இரண்டு கல்வெட்டுத் தொடர்கள் கண்ணில் தென்பட்டன பளிச்சென்று. புகழ்மாது விளங்க எனத்தொடங்கும் ஒரு தொடர். அடுத்ததாய்ப் புகழ்மாது புணர என்ற மற்றொரு தொடர். மகிழ்ச்சி பொங்க க,ஞ,ச என்று எழுத்துக் கூட்டி வாசிக்கத் தொடங்கினால், "ஏம்மா, இது என்ன சுலோகம்?" என்று கேட்டுக்கொண்டே ஒரு ஆந்திரா பெண்மணி கல்வெட்டுத் தொடரைத் தொட்டு வணங்கினார். பேஷ்! பேஷ்! இது ரொம்ப நன்னாயிருக்கே. ஒரு கணம் மகிழ்ந்தேன்.

அடுத்து அவர் செய்யவிருந்த காரியம் என்னை அதிரடியாகத் திகில் அடைய வைத்தது. இலையில் வைத்திருந்த மஞ்சளைக் கல்வெட்டுத் தொடர் மேல் பூசப்போனார். வேண்டாம் என்று அவரைத் தடுத்து, சுவாமி குற்றம் என்று பக்குவமாகக் கொஞ்சம் மிரட்டித் திசைதிருப்பிவிட்டு, அந்த இடத்தைவிட்டு வேகமாய் விலகினேன். ஆனாலும், மனது கேட்கவில்லை. சுற்றுமுற்றும் அந்தப் பெண்மணி எங்காவது தென்படுகிறதா என்று பார்த்துவிட்டு இல்லை என்று உறுதி செய்துகொண்டு மறுபடியும் ஒடிவந்து சந்தோஷமாய் வாசிக்க ஆரம்பித்தால், அதே கேள்வி. அதே பெண்மணி. கையில் மஞ்சளுடன். அரண்டு மிரண்டு போனேன். குலோத்துங்கன் கல்வெட்டை எப்படிக் காப்பாற்றுவது? என்னால் துன்பம் நேரக்கூடாதே! அந்த பெண்ணோ என்னை விடுவதாய் இல்லை. சமயோசிதமாக அப்பெண்மணிக்கு ஏற்கெனவே நன்றாக மஞ்சள் குளித்த நான்கு தூண்களை காட்டி அங்கே மஞ்சள் பூசவைத்தேன். பாவம், தூணில் செதுக்கப்பட்ட சிற்பங்கள். அப்பெண் மகிழச்சியுடன் என்னை விட்டு விலகினார். அப்பாடா, ஒரு வழியாகத் தப்பிப் பிழைத்தன கல்வெட்டுத் தொடர்கள். இல்லையென்றால், கோவிந்தா! கோவிந்தா! தான்.

ஆனாலும், சே!... "திருமகள் போல..." எனத் தொடங்கும் அந்தத் தொடரைப் பார்க்கக்கூடக் கொடுத்து வைக்கவில்லையே. என் ஆதங்கம் தீரவில்லை. காதலுக்கு ஊறு செய்பவர்கள் ஒழிக. அடுத்த ஜென்மத்தில் புழுவாய்ப் பிறக்க... இது என் சாபம். இப்படிக் காதலுக்கு எதிரிகள் பலவகை. திருமகளை வாசிக்கும்போது கரடியாய்ப் புகுபவர்கள் சிலர். திருமகளைத் தேடக்கூட விடாமல் தடுத்துவிடும் எமன்களாய்ச் சிலர். எத்தனை எதிரிகள் வந்தால் என்ன? என் காதல் எனக்கு போதுமே!

(இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன்னோடி நம்ம கோகுல் சேஷாத்ரி சார்தான். நன்றி சார், "தண்ணியடிக்கும் கலை" கட்டுரைக்கு)

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.