http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 5

இதழ் 5
[ டிஸம்பர் 15, 2005- ஜனவரி 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

தவறுகளைத் தவிர்ப்போம்
மத்தவிலாசப் பிரகசனம் - 3
இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ் - ஒரு அறிவிப்பு
ஸ்ரீபுறக்குடிப்பள்ளி
கல்வெட்டாய்வு - 4
கட்டடக்கலை ஆய்வு - 5
வைஷ்ணவ மாகேசுவரம்
இராஜசிம்மன் இரதம்
Political history of Thirutthavatthurai and it"s neighbourhood
எம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு
சங்கச்சாரல் - 5
கோச்செங்கணான் யார் - 3
இதழ் எண். 5 > இலக்கியச் சுவை
சங்கச்சாரல் - 5
நடுகல் வழிபாடு


அள்ளூர் நன்முலையார் ஒரு மறக்குடி மகளின் இல்லத்திற்குச் சென்றபொழுது, அங்கே அம்மறக்குடி மகள் தன் மூதாதையர் நடுகல்லை தொழுது, தன் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டுமெனவும், தன் கணவன் போரில் வெற்றி பெற வேண்டுமெனவும் வேண்டிக்கொள்வதைக் கண்டார். அதனை ஒரு பாட்டாக நமக்கு வழங்கியுள்ளார்.


களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
விருந்துஎதிர் பெறுகதில் யானே என்ஐயும்
ஓ. . . . . . வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே (புறம் 306)


நீர்நிலையில் யானை இறங்கி ஆடுவதால், நீர் கலங்கி உண்ணுவதற்கு அரிதாகியது. குடிகளெல்லாம் கழல் என்ற முள்ளையுடைய கொடியினாலே வேலி அமைக்கப்பட்டு விளங்குகின்றது. அத்தகைய நீர்நிலையையும், குடிகளையும் கொண்ட ஊரில் வாழ்கின்ற தழைந்திருக்கும் மென் கூந்தலையும் நல்ல ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண்ணொருத்தி, நடுகல்லை வழிபட்டு விருந்தினர் வரவேண்டுமெனவும், தன் கணவன் போரிலே வெற்றிபெறவேண்டுமெனவும் வேண்டிக்கொள்கிறாள்.

மூதாதையர் இறந்த பின்னர் அவர்களை புதைத்து நடுகல் நட்டுவைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்தது என்பது இப்பாடல் மூலம் புலனாகிறதல்லவா.
பரிசு பெறுவதிலும் உள்ள மாண்பு


பெருஞ்சித்திரனாரால் பாடாண் திணையில் பரிசில் துறையில் அமைக்கப்பட்ட இப்பாடல் அக்காலத்தில் புலவர்களிடம் பரிசு பெறுவதிலும் இருந்த மாண்பினை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. புலவர் அதியமான் நெடுமானஞ்சியைக் காணச்செல்கிறார். ஆனால் அதியமானோ, அவரை நேரிலே காணாமலே, அவருடைய பாடல்களைக் கேட்காமலே, அவருடைய திறனை ஆராயாமலே பரிசுகளைப் பெற்றுச் செல்க என கூறுகிறார். இவருக்கோ இப்படி தன் தகுதியை அறியாமல் கொடுக்கப்படும் பரிசினைப் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. பரிசு சிறிதாயினும் தரமறிந்து கொடுக்கப்படும் பரிசே சிறந்தது என்று கூறி, இப்பரிசுகளைப் பெற்றுச் செல்வதற்கு நான் வாணிகப் பரிசிலன் அல்லேன், அதாவது வியாபாரம் போல் பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவனல்லேன் என்று கூறுகிறார். அக்காலத்தில் பரிசு பெறுவதிலும் இருந்த மாண்பு இன்று எங்கே தொலைந்தது?


குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்குஎன்
நின்ற என்நயந்து அருளி ஈதுகொண்டு
ஈங்கனம் செல்க தான்என என்னை
யாங்குஅறிந் தனனோ தாங்கருங் காவலன்
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினைஅனைத்து ஆயினும் இனிதுஅவர்
துணைஅளவு அறிந்து நல்கினர் விடினே. (புறம் 208)

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.