சங்கீத கலாநிதி பட்டம்மாளின் மறைவு சங்கீத உலகுத்துக்குப் பெரும் இழப்பு. தெளிவு, கச்சிதம், சுத்தம் போன்ற குணங்களுக்கு இலக்கணமாக விளங்கிய பட்டம்மாளின் பணி அளப்பெரியது. அவருக்கு அஞ்சலி செய்யும் வகையில் ஒரு சிறப்பு நேர்காணலை இங்கு வழங்குகிறோம்.
90 வயது இளைஞரான 'எஸ்.ராஜம்' இசையிலும் ஓவியத்திலும் என்றும் அழியா இடத்தைப் பெற்றுள்ளவர். காஞ்சிபுரன் நயினாப் பிள்ளை காலத்து இசையில் தொடங்கி, இசையுலக ஜாம்பவான்கள் அனைவரையும் கேட்டவர். இன்று இருப்பவரிடையே பட்டம்மாளின் பெருமையைக் கூற இவரைத் தவிர தோதானவர் என்று வேறொருவரையும் கூற முடியாது. வரலாறு.காம்-க்காக அவரில் சிறப்பு நேர்காணல். கேட்டு மகிழுங்கள்.