http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 64

இதழ் 64
[ அக்டோபர் 15 - நவம்பர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

விழிப்புடன் கொண்டாடுவோமா?
மதுரகவி நந்தவனம் - காவிரிக்கரையில் களர் நிலமா?
மதுரகவி நந்தவனம் - திருக்கோயில் நிர்வாகத்தார் விளக்கம்
வரிக்கல்வெட்டு
திருமலை
வரங்கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே!!!
மாடக்கோயில்களும் மேடைக்கோயில்களும் (அ) களப்பிரர் காலம் இருண்டகாலமா?
நாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை
மனமே! தேய்புரி பழங்கயிறே!
இராஜகேசரி - ஒரு விமர்சனம்
இதழ் எண். 64 > சுடச்சுட
மதுரகவி நந்தவனம் - திருக்கோயில் நிர்வாகத்தார் விளக்கம்
கோகுல் சேஷாத்ரி
(திருவரங்கம் மதுரகவவி நந்தவனம் தொடர்பாக நாம் சென்ற இதழில் உலகத் தமிழர் விடுத்திருந்த பகிரங்க வேண்டுகோளை மதித்து திருக்கோயில் நிர்வாகத்தார் நமக்கு நீண்டதொரு விளக்கத்தை அனுப்பியுள்ளனர். இதற்காக திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையருக்கும் செயல் அலுவலருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விளக்கத்தை இந்தக் கட்டுரையிலும் இது தொடர்பான நமது எண்ணங்களைத் தனிக் கட்டுரையாகவும் இதே இதழில் வெளியிட்டுள்ளோம். ஒரு வசதிக்காகப் பத்தி எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன.)


அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்


அனுப்புநர்

இணை ஆணையர் - செயல் அலுவலர்
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்
ஸ்ரீரங்கம் - திருச்சிராப்பள்ளி - 6.

பெறுநர்
சே. கோகுல்


ந.க. 190 - 1416 - சி 3 நாள் 19.10.2009


அய்யா,

பொருள் : நிர்வாகம் - ஸ்ரீ மதுரகவி சுவாமி நந்தவனம் குறிப்பிட்ட கட்டளை திருவரங்கம் -அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுடன் இணைந்தது - தொடர்பாக

பார்வை : இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அவர்களுக்கு மின்அஞ்சல் மூலமாக தங்களால் அனுப்பப்பட்ட கடிதம்; நாள் 1.10.2009


/---------------/


(1.1) சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கு மின்அஞ்சல் மூலமாக 1.10.2009ம் தேதியில் தங்களால் அனுப்பப்பட்ட கடிதத்தில் திருவரங்கத்தில் உள்ள மதுரகவி நந்தவனம் நிர்வாகத்தினை திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுடன் சேர்த்துக்கொள்வதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தங்களது கடித்தில் உலக தமிழர்களுக்கு திருக்கோயிலால் தெரிவிக்க விரும்பும் மறுமொழியை கடித வாயிலாக அனுப்பி வைக்க கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பின்வருமாறு விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

(1.2) திருவரங்கத்தில் மதுரகவி என்பவர் 25.08.1903ஆம் தேதியில் ஒரு உயில் எழுதி வைத்துள்ளார். இந்த உயிலின்படி திம்மராயசமுத்திரம் வீரேஸ்வரம் கிராமத்தில் ஏக். 8.24 பரப்பளவுள்ள நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் கொண்ட நந்தவனங்களை பராமரித்து பின்வருமாறு கைங்கர்யங்கள் செய்து வரவேண்டும்.

(1.3) கைங்கர்யங்கள் விபரம்
1. தோட்டங்களும், நஞ்சை நிலங்களும், ரொக்க தொகைகளும் ரெங்கநாதருடைய கைங்கர்யத்திற்கு உபயோகப்படுத்த வேண்டியது.
2. புஷ்பங்களும், மரிக்கொழுந்து வகையறாக்களும் நித்தியப்படி ஸ்ரீ ரங்கநாதருக்கு திருமாலைகளும் திருமேனி சரங்களும் தொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
3. தவிர மிகுதி இருக்குமானால் ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் மற்ற திவ்ய தேசங்களுக்கும் மாலை சரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
4. விருட்சங்களின் மகசூலில் அந்தந்த ஜாதி பலன் நாட்களில் ஸ்ரீ ரங்கநாதர் நித்தியபடி அமுது செய்ய சமர்ப்பிக்க வேண்டும்.
5. வருடா வருடம் மேற்படி சன்னதி ஊறுகாய்க்காகவும் வைகாசி மாதங்களில் பால் மாங்காய்க்காகவும், ஆனி மாதத்தில்பல உற்சவங்களுக்கும் ஜேஷ்டாபிஷேகத்திற்கும் வேண்டிய பழங்களுக்காகவும், ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீ ரங்கநாச்சியார் ஆகிய இரண்டு திருநட்சத்திரங்களுக்கும், ஆழ்வார் திருவிசாகத்திற்கும், பால்மாங்காய்க்காகவும் தேவஸ்தானத்தில் எவ்வளவு ஏற்பட்டிருக்கிறதோ அவ்வளவு கொடுத்து வர வேண்டும்.
6. மேற்படி கைங்கர்யங்கள் செய்தது போக மீதி அய்வேஜியிருந்தால் ஸ்ரீரங்கம் திருப்பதிக்கு யாத்திரை செல்லும் பாகவதர்கள் கைங்கர்யத்திற்கு உபயோகப்படுத்த வேண்டியது.
7. புஞ்சை நிலங்களின் வருமானம் மற்றும் லேவாதேவி வருமானத்திலிருந்து நந்தவனங்களை பரிபாலனம் செய்து பல விருட்சங்களை வைத்து விருத்தி செய்ய வேண்டும்.
8. ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் திருமாலைகள் சமர்ப்பிக்க வேண்டும்.

(1.4) மேற்கண்டவாறு ஏற்படுத்தப்பட்ட நந்தவனத்தை நிர்வகிக்க 9 நபர்கள் கொண்ட ஒரு கமிட்டியை ஏற்படுத்தி மேற்படி 9 நபர்களில் கடைசி நபர் உயிரோடு இருக்கும்பொழுது மேற்காணும் சொத்துக்களை ஸ்ரீரங்கம் தேவஸ்தானம் சேர்த்துக்கொண்டு மேற்கண்ட தர்மங்களை நடத்த வேண்டும். மேற்படி 9 நபர்களிலும் 4 நபர்கள் தோட்டங்களில் சுயமாக பிரயாசைப்பட்டு கைங்கர்யமும் செய்து வர வேண்டும் என உயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயில் வாசகம் பின்வருமாறு.

“ தோட்டங்களில் அய்வேஜியிலிருந்து அடையவேண்டி மேற்படி ஒன்பது யெக்ஸிக்யூட்டர்களின் காலியாகிவருவதில் இருவர் வரையில் மேற்படி கைங்கரியத்தை பரிபாலனம் செய்ய வேண்டியது ஒருவர் இருந்தால் இதில் கண்ட சொத்துக்களை தேவஸ்தானத்தார்கள் ஸ்ரீரெங்கம் தேவஸ்தானத்தில் சேர்த்துக்கொண்டு மேல் கண்ட தர்மங்களை தவறாமல் நடத்தி கொண்டு வரவேண்டியதுடன் - - - - - -”

(1.5) இந்நிலையில் மேற்படி கமிட்டி உறுப்பினர்கள் இறந்ததை தொடாந்து ஏற்பட்ட காலி இடங்களை நிரப்ப யாதவர்,நாயுடு,பிள்ளை மற்றும் ரெட்டி இனத்தவர்களில் பாகவத கைங்கர்யம் செய்பவர்களை நியமனம் வேண்டி அப்பொழுது உயிரோடு இருந்து 7 நபர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 27.10.1921ம் தேதியில் பின்வருமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

(1.6) "I therefore direct the petitioners trustees to proceed to fill up the vacancy caused by the death of one of their trustees and all future vacancies that might occuring their board of Management keeping up always the number of nine trustees as their board management available to do the duties enjoyed upon the trustees in the board of trust from out of Ehankis like themselves or persons leading an ascetic life without families to look after or without any other pecuniary concern of their own in this world."

(1.7) இதன்படி 9 நபர்களால் மேற்படி நந்தவனம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. குடும்பஸ்தர்களும் நிர்வாகிகளாக உள்ளனர்.
ஸ்ரீ£ மதுரகவி ஸ்வாமி திருநந்தவனத்தின் வடக்கு பகுதியில் உள்ள தோட்டத்தின் மூலையில் உள்ள ஏக். 1.85 சென்ட் காலியிடம் களர் பூமியாக இருப்பதாலும், எந்த வித செடிகொடிகள் சாகுபடிகள் செய்ய முடியாமல் இருப்பதாலும், வெளியாட்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாலும், காலியிடத்தை பாதுகாப்பது சிரமமாக இருப்பதாலும், அந்த நிலத்தில் இருந்து வருமானம் ஏதும் இல்லாமல் இருப்பதாலும் மேற்படி 1.85 ஏக் நிலத்தினை விற்பனை செய்ய அனுமதி கேட்டு மேற்படி நந்தவனத்தின் நிர்வாகிகள் 1.11.2004 தேதிய கடிதத்தில் ஆணையர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பான நடவடிக்கை நிலுவையில் இருக்கையில் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சார்பாக விருந்தினர் தங்கும் விடுதி அமைத்திட அரசால் அறிவுறுத்தியதன் பேரில் ஏற்கனவே மதுரகவி நந்தவனத்திற்கு சொந்தமான ஏக் 1.85 நிலம் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை இருந்ததால் மேற்படி இடத்திலேயே விடுதி அமைக்க திருக்கோயிலால் மேற்படி இடத்தினை சதுர அடி 1க்கு ரூ.204 வீதம் வாங்குவதற்கு நந்தவன நிர்வாகிகளின் சம்மதத்தின் பேரில் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இவ்வாறான நடவடிக்கை நிலுவையில் இருக்கையில் மதுரகவி சுவாமி அவர்கள் எழுதிவைத்த உயிலின்படி அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இறந்த பின்னர் மேற்படி நந்நவனத்தின் சொத்துக்களை அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள விபரம் திருக்கோயில் கவனத்திற்கு தெரியவந்ததால் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சேரவேண்டிய சொத்துக்கு கோவிலே பணம் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டாம் என முடிவு செய்து அதன்படி சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தெரிவித்ததன் பேரில் மேற்படி நந்தவனத்திற்கு சொந்தமான சொத்துக்களின் முழு உரிமையும் ஸ்ரீ£ரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு உள்ளதால் தங்கும் விடுதி கட்டுவதற்காக திருக்கோயிலிலிருந்து கிரயத்தொகை எதுவும் கொடுக்க வேண்டியதில்லை என அறநிலையத்துறை ஆணையர் அவர்களால் 31.7.2009ம் தேதியில் உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீ மதுரகவி ஸ்வாமி நந்தவனத்தின் நிர்வாகத்தினை அரங்கநாதசுவாமி திருக்கோயிலுடன் இணைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களின் 31.7.2009ந் தேதிய உத்திரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(1.8) திரு.மதுரகவி ஸ்வாமி அவர்களின் விருப்பம் அவரால் ஏற்பட்ட சொத்துக்கள் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சேரவேண்டும் என்பதே ஆகும். ஒருவரது உயிலின் விருப்பத்தினை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. திரு. மதுரகவி ஸ்வாமி நந்தவனத்தில் அனைத்து இடங்களிலுமே மலர் செடிகள் வைத்து பராமரிக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் பெரும்பாலான இடத்தில் தென்னை மரங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு சில இடத்தில் மட்டுமே பூச்செடிகள் நடப்பட்டுள்ளன. அரங்கனுக்கு உகந்த மரிக்கொழுந்து மலர் பயிர் செய்யப்படவில்லை.. நந்தவன நிர்வாகத்தினை அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் மேற்கொண்டால் அனைத்து இடங்களிலுமே பூச்செடிகள் நட்டு பராமரிக்க இயலும். நிதிப்பற்றாகுறை காரணமாக நிலத்தினை விற்பனை செய்ய முற்பட்டதாக நந்தவன தற்போதைய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் மேற்படி நந்நவன நிர்வாகத்தினை மேற்கொண்டால் நிதி பிரச்சினை எழாது. கோயில் நிதியைக்கொண்டு மேலும் நல்லமுறையில் பராமரிக்கப்படும்.

(1.9) குடும்ப வாழ்வில் ஈடுபடாதவர்கள் மட்டுமே ஸ்ரீ மதுரகவி சுவாமிகளின் விருப்பப்படியும் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தால் 1921ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்படியும் நிர்வாகிகளாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள நிர்வாகிகள் குடும்பஸ்தர்களாக உள்ளனர். மேற்படி நந்தவன நிர்வகத்தினை திருக்கோயில் ஏற்றுக்கொள்ளும் போது மலர் தொடுக்கும் குடும்ப பற்றற்ற ஏகாங்கிகளை கொண்டுதான் மலர் தொடுக்கப்படும். அவர்களை மாற்ற கூடிய நிலை ஏற்படாது. மலர் தொடுக்கும் பணியை ஏகாங்கிகள் செய்து வருகின்றனர். இதனை கண்காணிக்க 9 நிர்வாகிகள் தேவை இல்லை.

(1.10) திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் அரங்கநாதர் மற்றும் தாயாருக்கு மட்டுமே தினசரி மாலைகள் நந்தவனத்திலிருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. சக்கரத்தாழ்வார் சன்னதி உள்பட மற்ற சன்னதிகளுக்கு மாலைகள் ஏதும் கொடுப்பதில்லை.

(1.11) மேலே தெரிவித்த காரணங்களினால்தான் மேற்படி நந்நவனத்தின் நிர்வாகத்தினை திருக்கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நந்தவனத்திற்கோ திருக்கோயிலுக்கோ மற்ற பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. மேற்படி நந்தவனம் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் வருமேயானால் நந்தவனத்தினை அபிவிருத்தி செய்து மேலும் பெருமாளுக்கு உகந்த பலவகையான மலர்செடிகளை நட்டு பராமரிக்கப்படும்.

(1.12) மதுரகவி நந்தவனத்தின் தற்போதைய நிர்வாகிகள் ஏக். 1.85 சென்ட் நிலத்தினை வெளி நபர்களுக்கு விற்பனை செய்ய முன்வந்த பின்னரே திருக்கோயில் நிர்வாகம் மேற்படி நிலத்தினை தனது பொறுப்பில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பலனாக மேற்படி சொத்து வெளி நபர்களின் கைக்கு போகாமல் திருக்கோயில் நிர்வாகமே பராமரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரகவி சுவாமியின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நந்தவன நிர்வாகிகளின் விருப்பப்படி மேற்படி சொத்தினை வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பின் ஸ்ரீ மதுரகவி ஸ்வாமி அவர்களின் நோக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருக்கும்.

(1.13) மேற்படி ஏக்.1.85 சென்ட் நிலத்தில் தங்கும் விடுதி அமைக்க கட்டுமானப்பணி நடைபெற்று முடிந்துள்ளது. மனுதாரர் தெரிவித்துள்ளது போல பணியாளர் விடுதி எதுவும் கட்டப்படவில்லை.

(1.14) மதுரகவி நந்தவனம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனை திருக்கோயில் நிர்வாகம் மேற்கொள்வதால் தற்போது நந்தவனத்தின் நிர்வாகிகளாக இருந்து வருபவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த வித பாதிப்போ இழப்போ இல்லை. மாறாக திருக்கோயில் நிர்வாகம் மேற்படி நந்தவனத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் நிதி தட்டுப்பாடு ஏதும் இல்லாமல் நந்தவனத்தை அபிவிருத்தி செய்ய முடியும். 1921ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பில் நந்தவனம் அறங்காவலர்கள் பொறுப்பில் மேற்கொண்டால் சரியாக பராமரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது 1921ம் ஆண்டு வெளியாகியுள்ளது. அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு 1938ம் ஆண்டிலிருந்துதான் நிர்வாக அதிகாரி நியமனம் செய்யப்பட்டு படிப்படியாக தற்போது இணை ஆணையர் நிலையில் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பாக கல்லூரிகள் பள்ளிகள் உட்பட்ட பலநிறுவனங்கள் நிர்வகித்து வரும் நிலையில்; அருகில் உள்ள நந்தவனத்தினை பராமரிப்பது சிரமமானது அல்ல. தற்போது உள்ள நிலையை விட நல்ல நிலையிலேயே பராமரிக்க இயலும். எனவே மதுரகவி நந்தவனத்தின் நிர்வாகத்தினை அருள்மிகு அரங்கநாதசுசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது நந்தவனத்தை ஏற்படுத்திய ஸ்ரீ மதுரகவி ஸ்வாமியின் நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கே எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

(ஒம்) மு.க.பாலசுப்ரமணியன்
இணை ஆணையர் - செயல் அலுவலர்

உத்தரவுப்படி அனுப்பப்படுகிறது

மேலாளர்

நகல்: இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி - 6.

நகல் பணிந்தனுப்பப்படுகிறது ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை - 34.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.