http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 64

இதழ் 64
[ அக்டோபர் 15 - நவம்பர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

விழிப்புடன் கொண்டாடுவோமா?
மதுரகவி நந்தவனம் - காவிரிக்கரையில் களர் நிலமா?
மதுரகவி நந்தவனம் - திருக்கோயில் நிர்வாகத்தார் விளக்கம்
வரிக்கல்வெட்டு
திருமலை
வரங்கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே!!!
மாடக்கோயில்களும் மேடைக்கோயில்களும் (அ) களப்பிரர் காலம் இருண்டகாலமா?
நாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை
மனமே! தேய்புரி பழங்கயிறே!
இராஜகேசரி - ஒரு விமர்சனம்
இதழ் எண். 64 > நூல்முகம்
இராஜகேசரி - ஒரு விமர்சனம்
சு.சீதாராமன்
நூல் - இராஜகேசரி (வரலாற்றுப் புதினம்)

ஆசிரியர் - கோகுல் சேஷாத்ரி

பதிப்பகம் - Palaniappa Brothers, No 25, Peters Road, Royapettah, Chennai 600014. Tel 91-44-28132863

விலை - ரூ.200/=


Rajakesari can be purchased from Udumalai.com


***********************************************************************************************


"ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்ட" ஸ்ரீ ராஜராஜ தேவர் தஞ்சைப் பெருவுடையாருக்கு பெருங்கோயில் எழுப்பிக்கொண்டிருக்கும் நேரம். அவருடைய பிறந்த தினமான ஐப்பசி சதய நாளை ”சதய விழா”வாக கொண்டாட சோழ நாடே விழாக்கோலம் பூணுகிறது. விழா நாள் அன்று பெரிய கோயில் வளாகத்தில் “ஸ்ரீ ராஜராஜ விஜய” த்தை நாடகமாக அரங்கேற்றி மக்களை மகிழ்விக்க சாந்திக்கூத்தர் திருவாலன் திருமுதுகுன்றனான விஜயராஜ ஆச்சாரியார் தயார் நிலையில் விழா நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறார். சோழ தேச மக்களும் ஸ்ரீ ராஜராஜருடன் “ராஜராஜ விஜய”த்தை கண்டு மகிழ ஆவலுடன் சதய விழாவை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் விழா நாள் நெருங்கும் வேளையில் தஞ்சைக்கு மேற்கு திசையில் உள்ள துழாய்க்குடியில் ஒரு மர்ம மனிதன் சதிகாரக் கும்பலால் படுகொலை செய்யப்படுகிறான். இப்படுகொலையை எறும்பியூரில் கூத்து பார்த்துவிட்டு வீடு திரும்பும் அம்பலவாணன் கம்பன் அரையனார் பார்க்க நேரிடுகிறது. அந்த மர்ம மனிதன் உயிர் விடும் தருணத்தில் “சோழப்.. பேரரசரை பாதுகாப்பற்ற... நேரத்தில் படுகொலை செய்ய சதி...” என்று கூறி உயிர் விடுகிறான்.

உடையார் ஸ்ரீ£ ராஜராஜ தேவர் என்ற பெரும் சமுத்திரத்தில் நாவலாசிரியர் எடுத்துக்கொண்ட களம் இதுதான். இந்தப் பின்புலத்துடன் பின்னப்பட்ட நாவலில் நாவலாசிரியர் அன்றைய தஞ்சாபுரியைக் கண் முன்னே நிறுத்துகிறார் அவ்வண்ணம் நம் கண்முன் விரியும் தஞ்சைக்கு அவர் வெறும் கற்பனைகளை மட்டும் பயன் படுத்தாமல் நிறைய கல்வெட்டு ஆதாரங்களையும்அறிஞர் பெருமக்களின் நூலாதாரங்களையும் ஆங்காங்கே வழங்குகிறார். நாவலில் அவர் எடுத்தாண்ட கதாபாத்திரங்களின் வாயிலாக பல்வேறு நற்செய்திகளையும் உயர்ந்த பண்புகளையும் படிப்பவர்களிடம் விதைக்க முயன்றிருக்கிறார். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்

உதாரணமாக அம்பலவாணன் தான் பார்த்த காட்சியின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து அச்செய்தியை உரிய அதிகாரியிடம் பல்வேறு இன்னல்களைக் கடந்து சேர்ப்பிப்பதோடல்லாமல் தன்னாலியன்ற பங்களிப்பை முயன்ற வரை வழங்கும் செயல் சமுதாயப் பொறுப்புணர்விற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.மேலும் நாவலின் வேகம் நாமும் வேகமாக பின்பற்றிச்செல்லும் வண்ணம் இயல்பாக அமைந்துள்ளது. இந்நாவலில் வரும் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான குருகாடியூர்ப் பரமன் மழபாடியாரின் - நிகழ்வுகளைப் பிரித்து, சாத்தியக்கூறுகளை ஆய்ந்து வடிகட்டி உண்மையை ஆராயும் பாங்கு நாவலாசிரியருக்குள் ஒரு “ஜேம்ஸ்பாண்ட்” ஒளிந்திருப்பதைக் காட்டுகிறது.

தன்னைச்சுற்றி மரண அபாயம் சூழ்ந்த நிலையிலும் உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் கண்ணுக்குத்தெரியாத எதிரியை எண்ணி

”நண்ப! உயிர்களில் ஒருவன் என்கிற முறையில் உன்னையும் நான் நேசிக்கிறேன்.உன்னுடைய குறுவாள் ஒருவேளை என்னுடைய மார்பில் பாய்ந்து விட்டால், அந்த நிலையிலும் உன்னிடம் நான் அன்பு செலுத்துவேன்.பகைவனின் வாள் வஞ்சகமாக மார்பில் பாய்ந்து குருதி வழிந்த நிலையிலும் “தத்தா! நமரே காண்!” என்ற மிலாடுடையாரைப் போற்றும் வம்சத்தில் பிறந்தவன் நான். உன்னிடம் வெறுப்புக்கொள்வது என் சிந்தனைக்குத் தகாது.உன் ஆயுதங்கள் என் மேல் பாயட்டும். நான் ஏற்றுக்கொள்ளச் சித்தமாகிவிட்டேன்! நமச்சிவாயம்.” என்று யோசிப்பது, இராஜராஜனின் அறிவாட்சித்திறனுக்கும், கனிந்த உள்ளத்திற்கும் தெளிவான சான்றாகும்.

“ஸ்ரீ ராஜராஜ விஜயம்” என்ற கூத்து அரங்கேறும் போது நாவலாசிரியருக்குள் ஒளிந்திருக்கும் “நாவலாசிரியரை” நம்மால் தரிசிக்க முடிகிறது. ராஜராஜ விஜயம் திட்டமிட்டபடி அரங்கேறுகிறதா? சோழ சேனாதிபதியான ராஜ ராஜ மாராயர், குருகாடியூர்ப் பரமன் மழபாடியார் அவர்களையெல்லாம் தாண்டி எதிரிகளால் பின்னப்பட்ட சதி வெற்றி பெறுகிறதா? அல்லது சதி யின் ஆணிவேரை இவர்கள் கண்டுபிடித்து சதியை முறியடித்தார்களா?

இராஜகேசரியை வாசித்துப் பாருங்களேன்!..this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.