http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 77
இதழ் 77 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
அதியமானால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கரும்பு தமிழர்களின் உணவு வகைகளில் சீரிய இடம் வகிக்கின்றது. சங்ககாலத் தமிழர்கள் கரும்பினைப் பிழியவும், அச்சாற்றைக் காய்ச்சிக் கட்டியாக்கவும் பல எந்திரங்களை அன்று பயன்படுத்தியுள்ளனர். எந்திரப் பொறியியல் நுட்பத்திறன் அதிகம் படைத்தவர்களாக அவர்கள் வாழ்ந்து உள்ளனர், அன்று. கரும்பின் சாற்றைக் காய்ச்சிக் கட்டியாக்கும் ஆலையில் எழும் ஓசையானது மதம்பிடித்த களிறுகளின் பிளிறலோடு உவமையாக்கப் பெற்றுள்ளது. பெரும்பாணாற்றுப்படை காட்டும் காட்சி இதோ, கடியலூர் உருத்திரங்கண்ணனார் வரிகளில். "கதஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்கு எந்திரஞ் சிலைக்கும் துஞ்சான் கம்பலை விசய மடூஉம் புகைசூழ் ஆலைதொறும் கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்" - பெரும்பாணாற்றுப்படை 259-262. உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் எந்திரத் தொழில்நுட்பத்திறன் தமிழர் அறிந்திருந்தனர். பல கரும்பாலைகள் புகைசூழ நாடெங்கும் அமைந்திருக்கின்றன. உணவுத் தயாரிப்பில் பல கருவிகளைப் பற்பல வடிவங்களில் அமைத்துச் சீரிய முன்னேற்றமான வாழ்க்கைத் தரத்தோடு வாழ்ந்திருக்கின்றனர். என்ன, மின்சாரம் இல்லை. மற்றபடி எல்லாப் பொறியியல் நுட்பமும் அறிந்தேயுள்ளனர். சங்க காலத்தின் சமகால மற்ற நாகரிகங்களில் இதுபோன்று தகவல் உள்ளதா என்றால் இல்லையென்றே தமிழன் மார்தட்டிக் கொள்ளலாம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |