http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 93

இதழ் 93
[ மார்ச் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

மதுரகவி - தினமணி நாளிதழ் விமர்சனம்
திரும்பிப்பார்க்கிறோம் - 40
Thevarmalai
சோழ இராமாயணம் - பகுதி 01
Chola Ramayana 04
தேடலில் தெறித்தவை - 2
தலைஞாயிறு
கவி பாடிய வேந்தர்
Book Street Bonanza - 1
இதழ் எண். 93 > கதைநேரம்
மதுரகவி - தினமணி நாளிதழ் விமர்சனம்
கோகுல் சேஷாத்ரி
மதுரகவி (கல்வெட்டுக் கதைகள்) - கோகுல் சேஷாத்ரி. பக்.284. ரூ.200.பழனியப்பா பிரதர்ஸ், 25 பீட்டர்ஸ் ரோடு சென்னை 14.

இணையவிற்பனை- உடுமலை டாட் காம்

தமிழகத்தில் கிடைத்திருக்கும் கல்வெட்டுக்கள் சிலவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். கல்வெட்டுக்களின் பின்னுள்ள கதைகளை சுவாரஸ்யமாக சிறுகதைக்கே உரிய அழகு குறையாமல் ஆக்கியிருப்பது நூலின் வெற்றி.





பொதுவாக வரலாற்றுக் கதைகள் என்றால் அலுப்புத் தட்டும் என்ற எண்ணம் பரவலாக உண்டு. அதைத் தவிடுபொடியாக்கி வரலாற்றுக் கதைகளையும் படிக்கும் சுவையுடன் தரலாம் என்று நூலாசிரியர் முயன்று தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
பெரும்பாலும் கோயில்களை மையமாகக் கொண்ட கல்வெட்டுகளிலிருந்து பெறப்பட்ட கதைகள்தான். சேந்தன், காரிநங்கை, கபிலன். கண்டன், சர்ப்பதேவன், தேவதானம், தேவன் தொட்ட சுனை, சோழியன், கொம்மை, ஆலங்காரி, உடையான், போலோ, மாதேவடிகள் ஹாரம் என கதைகள் வரலாற்றுக் காலத்திற்கு நம்மைக் கொண்டு செல்கின்றன.

கதைகளின் நடை பாராட்டப்படவேண்டிய ஒன்று. மொத்தம் 14 கதைகள். கடைசிக்கதை மதுரகவி, திருவரங்கத்தில் பெருமானுக்குப் பூமாலை கட்டி நந்தவனம் அமைத்து அவர் செய்த தொண்டினை உள்ளம் உருக்கும் நடையில் தெரிவிக்கிறது. ஒவ்வொரு கதையிலும் தொடர்புடைய கோயில், சிலைகள், கோபுரங்களின் தெளிவான படங்கள் நூலுக்கு பலம் சேர்க்கின்றன. சில நாவலாக விரியும் தன்மை கொண்டவை. அவற்றை சிறுகதை என ஆக்கியிருக்கிறார். வரலாற்றுக் கதை படிக்கும் ஆர்வலர்களுக்கு இந்நூல் மிகச்சிறந்த பரிசு.

(18 பிப்-2013 தேதி தினமணி நாளிதழில் வெளியான மதுரகவி புத்தக விமர்சனம். நன்றி - தினமணி நாளிதழ்.)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.