http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 135

இதழ் 135
[ ஜூலை 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

Khmer Political and Economic Expansions in Northeast Thailand under Suryavarman I (1010-1050 ACE)
ஸ்ரீ சிகாரி பல்லவேசுவரம்
OLOGAMADEVI ISWARAM – THIRUVAIYARU - 1
உலகப் பார்வைக்கு உதயம் - 3
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 1
காலத்தின் கவனிப்பும் தொல்காப்பியர் விருதும்
இதழ் எண். 135 > இதரவை
காலத்தின் கவனிப்பும் தொல்காப்பியர் விருதும்
மு.நளினி, அர.அகிலா

2017 மேத்திங்கள் 9ஆம் நாள் செவ்வாய் மதியம் ஒரு மணியளவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2015-16ஆம் ஆண்டிற்குரிய செம்மொழித் தமிழுக்கான குடியரசுத்தலைவரின் தொல்காப்பியர் விருது டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரும் எங்கள் ஆசிரியருமான ஆய்வறிஞர் முனைவர் இரா. கலைக் கோவனுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் மேதகு குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டமை குறித்த எங்கள் மகிழ்வையும் பெருமிதத்தையும் உலகளாவிய வரலாற்று ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்வதில் உளம் நிறைகிறோம். 



 





 



30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பெருந்தகையுடன் பயணிக்கும் ஆய்வாளர்கள் என்பதால் அவரது உழைப்பையும் ஆற்றலையும் அறிவுத்திறத்தையும் வரலாற்றுப் பங்களிப்பையும் உடனிருந்து பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். முதுகலை வரலாற்று மாணவிகளாக எங்கள் ஆய்வேட்டிற்காக அவரிடம் வந்தவர்கள், அவரது உழைப்பிலும் வரலாற்றை அவர் அணுகும் முறையிலும் உளமிழந்தே இந்தத் தொடர் பயணத்தில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம். இந்த 30 ஆண்டுகளில் அவரிடம் நாங்கள் கற்றவையும் கலந்துரைகள் வழிப் பெற்றவையுமே ஆய்வுத் தளத்தில் எங்களை நிலைநிறுத்தியுள்ளன. எந்தக் கல்லூரியிலும் பல்கலையிலும் பணியாற்றாத போதிலும் அவரிடம் பயில்வதற்காகவே அவரைச் சந்திக்கும் மாணவர்கள் எண்ணிலடங்கார். ஆர்வம் நிறைந்தவர்களை ஒரே நேர்முகத்தில் கண்டு தேர்ந்துகொண்டு வழிநடத்தும் அவரது வல்லமை பலமுறை எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரிடம் பயின்றவர்கள் தமிழ்நாட்டின் பலபகுதிகளில் வரலாற்றுப் பங்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். 



தொல்காப்பியர் விருது அவரது உழைப்பிற்குக் கிடைத்த 44ஆவது விருதாகும். கலைஞர் மு. கருணாநிதியின் பொற்கிழி விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் பிற துறை அறிஞர் விருது, எஸ். ஆர். எம். பல்கலைத் தமிழ்ப் பேராயத்தின் ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது எனப் பல உயரிய விருதுகள் சென்ற சில ஆண்டுகளில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்விருதுகள் வழிக் கிடைத்த பரிசுத் தொகை முழுவதையும் வரலாற்றாய்விற்காகவே அவர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பாகும். 



35 ஆய்வு நூல்களையும் வரலாறு என்ற தலைப்பில் அமைந்த 27 ஆய்வுத் தொகுதிகளையும் கடந்த 30 ஆண்டுகளில் அவர் உருவாக்கியுள்ளார். தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆய்வு வாழ்க்கையை, அதில் பெற்ற பட்டறிவை மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகத் திரும்பிப் பார்க்கிறோம் என்ற தலைப்பில் இதுவரை 11 தொகுதிகளை அவர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அவர் குரல் ஒலித்துள்ளது. சங்க காலம் தொட்டு நாயக்கர் காலம் வரையிலான அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல தளங்களில் பதிவாகியுள்ளன. அண்மையில் வெளியான சங்கச் சாரல், இருண்டகாலமா? எனும் அவரது இரு நூல்களும் பரவலான வரவேற்பைப் பெற்றதுடன், வரலாற்றின் இன்றியமையாத அவ்விரு காலக்கட்டங்களைப் பற்றிய தெளிவான சிந்தனைகளை முன்வைத்துள்ளன. 



நிறுவனங்களும் பல்கலைகளும் கல்லூரிகளும் நிகழ்த்திய செம்மொழித் தமிழாய்வுக் கருத்தரங்குகளிலும் பணிப்பட்டறைகளிலும் பங்கேற்று அவர் நிகழ்த்திய பழந்தமிழ் இலக்கியங்களின் வரலாற்றுப் பிழிவுகள் தொடர்பான பொழிவுகள் குறிப்பிடத்தக்கவை. சங்க காலம் தொடங்கிச் சோழர் காலம் வரையிலான அவரது ஆடற்கலை வரலாற்றாய்வுக் கட்டுரைகள் தமிழ், வரலாற்றறிஞர்களால் இணையப் போற்றப்படுபவை. தமிழ்நாட்டுக் குடைவரைகள் அனைத்தையும் முழுமையுற ஆய்வுசெய்து ஏழு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டுக் கலை வரலாற்றிற்கு அவை மிகப் பெரிய கொடை.



அடிப்படையற்ற ஊகங்களைத் தவிர்த்து உண்மைகளின் கட்டமைப்பில் வரலாறு என்ற சிந்தனையை முன்வைத்துக் கணினி இளைஞர்களுடன் இணையத் திங்களிதழாக இந்த வரலாறு டாட் காம் உருவாக வித்திட்டவர் திரு. கலைக்கோவன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றின் பெயரால் ஓர் இணையத் திங்கள் இதழ் தொடர்கிறதென்றால், அதன் பின்னிருக்கும் உந்து சக்தியைத் தமிழர் உணரவேண்டும். தனி ஒருவராக அவர் தொடங்கிய பயணம் நிறுவனமாக மாறித் தொடர்ந்து தழைத்துக் கொண்டிருப்பதற்கு முதன்மைக் காரணமாக அவரது தோழமைப் பண்பைச் சுட்டலாம். நாங்கள் அவரை ஆசிரியராகக் கருதினாலும் எங்களை அவர் தொடக்கந் தொட்டே தோழர்களாகவே கருதியும் நடத்தியும் வருகிறார். அவர் அளித்திருக்கும் பொறுப்புகளாலும் பயிற்சிகளாலுமே வரலாற்றுக்கு எங்களால் இயன்றதைத் தொடர்ந்து செய்து வருகிறோம். 



தமிழ்நாட்டில் தமிழ் ஆய்வுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தொல்காப்பியர் விருது உழைப்பின் இமயமான எங்கள் பேராசிரியர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்குக் கிடைத்தமை எங்களை உளம் குளிரச் செய்துள்ளது. உரியவர்களுக்கு உரியன கிடைப்பதைக் காலம் கவனித்துக்கொள்ளும் என்று அவர் அடிக்கடி சொல்வார். தம் வாழ்க்கையின் பெரும் பகுதியைத் தமிழ், வரலாற்றாய்விற்காக வழங்கியிருக்கும் அவரைக் காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் குடியரசுத் தலைவரின் தொல்காப்பியர் விருது மெய்ப்பித்துள்ளது. அவர் உழைப்பை உற்று நோக்கி, பங்களிப்பைச் சீராய்ந்து இந்த உயரிய விருதை அவர் பெறுவதற்குக் காரணமாய் அமைந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள்  நன்றியைப் பதிவு செய்கிறோம். வரலாற்றார்வமுடைய அனைத்துத் தமிழர்கள் சார்பிலும் பயனுள்ள அவரது வாழ்க்கை நலமும் வளமும் பெற்றுத் தொடர வாழ்த்தி வணங்குவதில் வரலாறு டாட் காமுடன் இணைந்து அவரது தலை மாணாக்கர்களான நாங்களும் பெருமிதத்தோடு உளம் நிறைகிறோம்.



 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.