http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 137
இதழ் 137 [ செப்டம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
அத்தகைய கற்பின் நெறியொற்றித் தலைவனும் தலைவியும் காதலில் ஈடுபடும் சூழலை "வீர அபிமன்யு" என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் இயற்றி திரு "கே.வி. மஹாதேவன்" இசையில் "பீ. சுசீலா" மற்றும் "பி.பி.ஸ்ரீனிவாஸ்" ஆகியோர் பாடியுள்ள இப்பாடல் காலத்தால் அழியாதது. 52 ஆண்டுகளுக்கு முன் வந்த இத்திரைப்படம் காலம்கடந்து இன்றளவும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது என்றால் அதன் தரம் அன்றி வேறென்ன! அணி என்றாலே அழகு! ஒரு கவிதையில் ஓர் அணி இடம் பெற்றாலே அக்கவிதை சிறந்து விளங்கும்! ஆனால் இப்பாடலில் எத்தனை அணிகள்?! ஆம் இப்பாடலில் ஒன்றிற்கு மேற்பட்ட அணிகள் இடம்பெற்று இப்பாடலின் இளமைக்கு மெருகூட்டுகின்றன. குறைந்தபட்சம் மூன்று அணிகளை இப்பாடலில் சுட்டிக்காட்டலாம். அவை: 2) சொல்பொருள் பின்வரு நிலையணி (செய்யுளில் ஓரிடத்தில் வந்த சொல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வந்து கருத்தை விளக்குவது சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்) 3) சிலேடை (அ) இரட்டுற மொழிதல் அணி (ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள் பட வருவது சிலேடை (அ) இரட்டுற மொழிதல் எனப்படும்) பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
1) சொல் பின்வருநிலையணி தேன் என்ற சொல் 65 முறை இடம்பெற்று "சொல் பின்வருநிலையணி" பெறுகிறது. 2) சிலேடை (அ) இரட்டுற மொழிதல் அணி "அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்" என்ற வரியில் இடம் பெறும் "மலைத்தேன்" என்ற முதல் சொல் (மலையில் கிடைக்கும் தேன்) பெயர்சொல்லாகவும், "மலைத்தேன்" என்ற இரண்டாவது சொல் (பிரமிப்பு என்னும் பொருள்படும் "மலைப்பு" என்ற சொல்லின் தன்மை வினைமுற்றாகிய மலைத்தேன்") வினைச்சொல்லாகவும் பயின்று இரண்டு பொருள் தந்து கவிதைக்கு அழகு சேர்ப்பதால் இப்பாடல் இரட்டுற மொழிதல் அணியும் பெறுகிறது. இதே போல் "குடித்தேன்" என்ற சொல்லும் இரட்டுற மொழிதல் பயின்று வருகிறது. "கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன்" - கொடித்தேன் போன்ற இனிமையான தலைவியைத் தன்னுடைய குலத்திற்கே இனிமை பயக்க வந்தவள் என்னும் பொருள் படக் "குடித் தேன்" (பெயர்ச்சொல்) என கவிஞன் கற்பிக்கிறான். "ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்" - இவ்விடத்தில் இடம்பெறும் "குடித்தேன்" என்ற சொல் "குடித்தல்" என்ற வினைச்சொல்லின் சொல்லின் தன்மை வினைமுற்று ஆகும். 3) சொல்பொருள் பின்வரு நிலையணி உனைத் தேன், மலைத் தேன், கொடித் தேன், குடித் தேன், படித் தேன், துளித் தேன், மலர்த் தேன், சுவைத் தேன் போன்ற சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அதே பொருளைப்பெற்றுப் பயின்று வருவதால் "சொல்பொருள்பின்வருநிலையணி"யும் இப்பாடலில் இடம்பெற்று அழகுக்கு அழகு சேர்த்துக் காலத்தால் அழியாப்புகழை அளித்துச் சென்றிருக்கிறது! வாழ்க கவியரசர் கண்ணதாசன் புகழ்! |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |