http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 137
இதழ் 137 [ செப்டம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
அமைவிடம்: புள்ளமங்கை வளாகத்தின் திருச்சுற்றில் வடகிழக்கில் தெற்குமுகமாக எழுப்பப்பெற்ற அம்மன் கோயிலின் நேர் பின்புறம் ஒரு சிறுமேடையும் கோட்டமும் அமைக்கப்பெற்றுத் தெற்கு நோக்கிக் காட்சியளிக்கும் இந்த அற்புதமான நெடியோனின் சிற்பம் வடக்கு மதில்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.
நெடிதுயர்ந்த நிலையில் தாமரைப் பீடத்தில் சமபாதம் பெற்றுக் கிரீடமகுடத்துடன் தெற்குமுகமாகக் காட்சிதரும் திருமாலின் இடையில் புலிமுக அரைக்கச்சு இருத்தும் கச்சம் வைத்த பட்டாடையும் இடைக்கட்டும் உள்ளன. கணுக்கால்களைத் தழுவியுள்ள பட்டாடையின் மடிப்புகள் நன்கு காண்பிக்கப்பட்டுள்ளன. மகர குண்டலங்கள், முத்துமாலை, சரப்பளி, சவடி பெற்று, முப்புரிநூல், முத்துமணிகளால் தைக்கப்பட்ட உதரபந்தம், கைவளைகள், தாள்செறிகள் அணிந்துள்ள திருமாலின் பின்கைகளில் தீக்கங்குகளுடன் சங்கும், எறிநிலைச்சக்கரமும் உள்ளன. முன்கைகளில் வலக்கை அபயஹஸ்தம் காட்ட இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது.
சிற்ப அமைதியை நோக்குங்கால் முற்சோழர் காலமாகவே இதனைக்கருத வாய்ப்புண்டு! இவ்வாலயக் கோட்டங்கள் அதனதன் தெய்வங்களைக் கொண்டிருப்பதனைக் காண்கிறோம். இவ்வாலயத்திலேயே உள்ள மேற்குக்கோட்டம் இவருக்கானதோ என்ற ஐயத்தில் அதனைக்காண, அதில் அமைக்கப்பட்ட லிங்கோத்பவரே அங்கு இயல்பாக அமைக்கப்பட்ட மூர்த்தம் என்பது அதன் இருமருங்கிலும் அமைக்கப்பட்ட பிரம்மா மற்றும் விஷ்ணு மூர்த்தங்களைக் கொண்டு அறியலாம். இருப்பினும் இவர் எங்கிருந்து வந்தார்? இவ்வளாகத்தில் ஏன் இருத்தப்பட்டார்? வேறு ஆலயங்களின் கோட்டங்களை அலங்கரித்தவரா? இவ்வாலயத்தில் தனியாகக் கோட்டம் அமைத்து ஏன் ஈசான்ய பாகத்தில் இருத்தப்பட்டுள்ளார் என்பதையெல்லாம் தொடர் ஆய்வுகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என்று நம்புவோமாக!!! |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |