http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 12

இதழ் 12
[ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

இன்னல்களைக் களைவோம்
மூதூரும் முதுமக்கள் தாழியும்
பகவதஜ்ஜுகம் - 3
ஆந்தையும் உண்டுதான் படித்த ஞான்றே!
திருமணல்மேடு பஞ்சநதீசுவரர் திருக்கோயில்
மங்களாவூர் மத்யார்ச்சுனேசுவரர் கோயிலும் கல்வெட்டுகளும்
கோயில்களை நோக்கி - 1
தட்டுவார் திறனுக்கேற்பத் திறக்கும் கதவுகள்!
கல்வெட்டாய்வு -10
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம்
சங்கச்சாரல் - 11
குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)
இதழ் எண். 12 > கதைநேரம்
<பரிவிராசகர்> : சாண்டில்யா, பயப்படாதே! அது மயில்தான்.

<சாண்டில்யன்> : உண்மையிலேயே மயிலா?

<பரிவிராசகர்> : பின்னே என்ன? நிச்சயமாக மயில்தான்.

<சாண்டில்யன்> : அது மயில் என்றால் கண்ணைத் திறக்கிறேன்.

<பரிவிராசகர்> : நிச்சயமாக.

<சாண்டில்யன்> : ஓஹோ, அந்த அற்பப்பயல் புலி மயிலாக உருமாறிக்கொண்டு என்னைவிட்டுப் பயந்து ஓடுகிறது. (சோலையைச் சுற்றிப் பார்த்து) ஹி...ஹி...வசந்தம் மாலை போல சூழ்ந்துள்ளதே.

சம்பகம், அர்ச்சுணம், கதம்பம், நீப்பா, நிச்சுலம், திலகம், குரபகம், கணிகாரம், கற்பூரம், சூத. பிரியங்கு, சாலம், தாலம், தமாலம், புன்னை, நாகம், பகுலா, சரளம், சர்ஜம், சிந்துவாரம் திரணசூல்யா, சப்தபரணம், கரவீரம், குடஜவகினி, சந்தனம், அசோகம், மல்லிகை, நந்தியாவட்டம், தகரம், காதிரம், கதளி, மாலதி ...

கொத்தான இளந்தளிர்கள், மலரும் மலர் இதழ்கள் ... வளைந்து விழும் மொக்கு நிறைந்த பறலதிக்கொடி மயிலொடு குயிலின் தாளங்கொண்டு, மதுவுண்ட வண்டினமும் இன்பம் கொடுப்பதோடு காதலரைப் பிரிந்து துன்பம் நிறைந்ததான இளமங்கையரின் இதயங்களைத் தூண்டுகின்றனவே! என்னே அழகு.

<பரிவிராசகர்> : முட்டாள், உயிர் நிலையினை நாளுக்குநாள் இழந்து கொண்டிருக்கிற உனக்கு அழகைப்பற்றி என்ன கவலை?

முன்போதுத் தாரோடு வசந்தம் வரும்
பின்னரொரு பல்லாயிரம் கமலமுடன்
சொன்ன இளவேனில் வரும்
சின்ன ஒரு குழவி இது பருவங்கண்டு தான் களிக்கும்
இன்னுயிரைப் பிரித்திடினும்
என்னே இது அழகெனும் அர்த்தமின்றி

<சாண்டில்யன்> : ஒன்று அழகாய் இருந்தால் அதை அழகு என்றுதான் சொல்லுவோம்.

<பரிவிராசகர்> : அசட்டைப்பேச்சு.

எட்டாத பொருளுக்குக் கொட்டாவி விட்டவர்கள்
கிட்டாத தெண்ணியே காலங் கழிப்பவர்கள்
ஒட்டாத ஆசையினை அழியாதிருப்பவர்கள்
பட்டாங்கில் எஞ்ஞான்றும் உய்யாதிருப்பவர்கள்.

<சாண்டில்யன்> : களைப்பூட்டும் பாதை, எங்கே இளைப்பாறுவது?

<பரிவிராசகர்> : நல்லது. இங்கேயே இரு.

<சாண்டில்யன்> : அழுக்கு, அழுக்கு.

<பரிவிராசகர்> : காட்டுநிலம் அழுக்கற்றது.

<சாண்டில்யன்> : களைப்பாகி உட்கார வேண்டுமென்றால் அழுக்கையும் சுத்தமென்கிறீர்கள்.

<பரிவிராசகர்> : வேதவிதிகளையே குறிப்பிட்டேன். நானாகச் சொல்லவில்லை.

புகழ் போதை ஏறுகையில்
பிழையதனையும் பொறையென்பர்
அவ்வழியே எதுவொன்றும் ஆன்மமல்ல
அப்படியே உலகியம் அவையெல்லாம்.

<சாண்டில்யன்> : எத்தனை பெரிய சிந்தனையாளர் தாங்கள், தங்களுக்குமேல் வேதவிதி எங்குள்ளது?

<பரிவிராசகர்> : அல்ல. அப்படியல்ல. ஆன்றோர் அரிதியிட்டுச் சொன்னதுவே அலையாத தன்மையதே சாத்திரமாம். சாத்திரத்தின் வேறான பொய்யான சாத்திரங்களை சாற்றினது இல்லையவர் அவ்வொன்றே மெய்யாகும்.

<சாண்டில்யன்> : நன்று! உங்களுக்குமேல் ஒரு சாத்திரத்தை எனக்குத் தெரியாது, நீங்கள்தான் உயர்ந்த சிந்தனையாளர்.

<பரிவிராசகர்> : வா மகனே பாடங்கேள்!

<சாண்டில்யன்> : நான் பாடங்கேட்க மாட்டேன்.

<பரிவிராசகர்> : ஏன்?

<சாண்டில்யன்> : வைதீகக் கல்வியின் பொருளை அறிய விரும்புகிறேன்.

<பரிவிராசகர்> : வேதங்களைக் கற்பவரும் அதன் பொருளைப் போகப்போகத்தான் புரிந்து கொள்ளுகிறார்கள். அதனால் பாடங்கேள்.

<சாண்டில்யன்> : நான் பாடங்கேட்டு என்ன பயன்?

<பரிவிராசகர்> : கவனி! அறிவு அபூர்வ ஞானத்துக்கு வழி நடத்துகிறது. தன்னடக்கம் தவத்திற்கு, தவம் யோகாசனத்துக்கு, யோகாசனம் முக்காலத்தையும் உணரும் மெய்யுணர்வுக்கு, மெய்யுணர்வு இவையெல்லாம் ஒன்றாகி எண்வகைச் சம்பத்துக்களையும் பெற்றுத் தருகிறது.

<சாண்டில்யன்> : ஆண்டவனே, தங்களது தத்துவப்படி தங்களது பேச்சு என் இதயத்தைத் தாண்டி அரூப அண்டவெளியை எட்டுகிறது. அப்படியானால் அரூபமாக அயலார் வீட்டில் நுழைய உம்மால் ஆகுமோ?

<பரிவிராசகர்> : உன் மனதில் என்ன நினைக்கிறாயோ?

<சாண்டில்யன்> : அவ்வரூப வழியாக நன்றாக சமைக்கப்பட்ட உணவை பௌத்த சங்கத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமா என்றுதான்.

<பரிவிராசகர்> : இது உனக்குப் பொருந்தாத ஆசை.

<சாண்டில்யன்> : அது ஒன்றிற்காகவே உமது தலையை மழித்துக் கொண்டீர். வேறு காரணம் ஏதும் என்னால் காணமுடியவில்லையே.

<பரிவிராசகர்> : இல்லை, அப்படியில்லை. யோகமானது:

அகண்டது அழியாதது விலையுயர்ந்தது
அறிவானது அசைக்கவியலாதது
அந்தணரும் போற்றுவது
கடவுளொடு பூதங்களும் கொண்டாட நின்றதது.

<சாண்டில்யன்> : யோகாசனத்திலே நீங்கள் கருத்தைச் செலுத்துகின்றீர்கள். நான் உணவிலேயே கருத்தைச் செலுத்துகிறேன். ஆண்டவனே! யோகாசனம், யோகாசனம்! சந்நியாசிகள் அதிகமாகச் சிந்தனை செய்கிறீர்கள். அதென்ன யோகாசனம்!

<பரிவிராசகர்> : அறிவின்வேர் தவத்தின் சாரம்
மெய்யின் அடித்தளம் மிரட்சிக்கு முடிவு விருப்பி
வெறுப்பினிடை விடுதலையாம் சொல்லின் அதன்
பெயரே யோகாசனம்

<சாண்டில்யன்> : உணவுப்பித்தே உலகப் பைத்தியங்களுக்கெல்லாம் மூலமென்று கற்பித்தாரே புத்தர் அவர் வாழ்க.

<பரிவிராசகர்> : சாண்டில்யா, என்ன இது?

<சாண்டில்யன்> : காலையிலே உணவு கிடைக்கும் என்றுதான் நான் முதலில் புத்த மதத்தில் சேர்ந்தேன் என்று ஆண்டவருக்குத் தெரியாதா?

<பரிவிராசகர்> : ஞானமான வார்த்தைகள் ஏதேனும் வேறு உன்னிடம் உண்டா?

<சாண்டில்யன்> : ஓ, உண்டு, உண்டு, ஏராளம் உண்டு.

<பரிவிராசகர்> : மெத்த சரி. நாம் கேட்போம்.

<சாண்டில்யன்> : ஆண்டவரே கேளும். எட்டுப் படிகள் அடங்கிய இயற்கை, பதினாறு பேறுகள், ஆன்மா, ஐந்திரக் காற்று, உள்ளத்தின் மூன்றடுக்கு இலட்சணங்கள், ஆக்கமும் அழிவும், புனித புத்தர் தமது பதிகா புத்தகத்தில் சொல்லியுள்ளவை அவை.

<பரிவிராசகர்> : சாண்டில்யா, அது சாங்கிய கொள்கைகள். புத்தரின் கொள்கைகள் அல்ல.

<சாண்டில்யன்> : பசியாலும் சாப்பாட்டு ஏக்கத்தாலும் ஒன்றை நினைத்து வேறொன்றைச் சொல்லிவிட்டேன். கேளுங்கள் ஆண்டவனே.

தராத பொருளை எடுத்துக் கொள்வது எங்கள் கொள்கையல்ல.
வாழ்வை அழிப்பது எங்கள் கொள்கையல்ல.
வீண்பேச்சு பேசுவது எங்கள் கொள்கையல்ல.
நினைத்த நேரம் உண்ணுவது எங்கள் கொள்கையல்ல.
புத்தம் தருமம் சங்கம் சரணம் கச்சாமி.

<பரிவிராசகர்> : சாண்டில்யா உனது சொந்த நெறிமுறைகளிலிருந்து நழுவி அடுத்தவர் நெறிகளைப்பற்றிப் பேசுவது அழகல்ல.

இருளை விட்டகன்று பாவக்கரையகற்றி
இயன்றவரை புனிதத்திற்கு ஒப்படைத்து
இப்பொழுதே தவத்தைச் செய்
அப்பொழுதே தெளிவடைவாய்
அப்படியே எட்டிவிடும் உன் தத்துவம் மெய்யுணர்வை.

<சாண்டில்யன்> : ஆண்டவர் தமது கவனத்தை யோகாசனத்தில் செலுத்தட்டும். நான் எனது எண்ணத்தை உணவிலேயே ஓடவிடுகிறேன்.

<பரிவிராசகர்> : அந்தப் பேச்சை நிறுத்து.

உணர்ச்சி வெளிக்கும் உள்ளான்மா தன்னதற்கும்
ஊடான ஒற்றுமையை உணர்ந்திடுக
உள்ளிடுக உலகத்தை அக்கூட்டுச் சட்டத்தினுள்
உயரறிவு தன் வழியே உயருண்மை விளங்கட்டும்
உலகத்து உயிரோட்டம் உந்தனுக்குள் தெரியட்டும்

(இரண்டு பணிப்பெண்களுடன் ராஜகணிகை பிரவேசிக்கிறாள்)

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.