http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 14

இதழ் 14 [ ஆகஸ்ட் 16 - செப் 15, 2005 ]
1ம் ஆண்டு நிறைவு - கைலாயநாதர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜரின் பல்லவப் பெருந்தளி
இராஜராஜரின் பல்லவப் பெருந்தளி
கதை 6 - மாதேவடிகள் ஹாரம்
அம்ம அழகிதே
இராஜசிம்மேசுவரம் கல்வெட்டுகள்
தேவதேவிக் கல்வெட்டுகள்
கோயில்களை நோக்கி - 3
நெஞ்சை நிமிர்த்தும் நேற்றைய வரலாறுகள்

கட்டடக்கலைத் தொடர் - 11
அரை நாள் பயணம்....அரை மனதுடன்....
Brushstrokes from Pallava Era - Part I
சங்கச் சிந்தனைகள் - 2
இதழ் எண். 14 > கலையும் ஆய்வும்
தேவதேவிக் கல்வெட்டுகள்
மு. நளினி
காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவர வளாகக் கல்வெட்டுகள் கல்வெட்டறிஞர் ஹுல்ஷால் படியெடுக்கப்பட்டு, ஆங்கில மொழியாக்கத்துடன் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி ஒன்றில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மை விமானக் கல்வெட்டும் வெளித்தளிகள் இரண்டில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளும் இக்கட்டுரையாளரும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனும் இணைந்து பதிப்பித்துள்ள அத்யந்தகாமம் எனும் நூலில் தமிழில் இடம்பெற்றுள்ளன. வரலாறு டாட் காம் சுவைஞர்களுக்காக அக்கல்வெட்டுப் பதிவுகள் இந்தச் சிறப்பிதழில் மறுபதிவு காண்கின்றன. இராஜசிம்மரும் அவர் உள்ளத்திற்குகந்த தேவி ரங்கபதாகையும் இக்கல்வெட்டுகளில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். கல்வெட்டுப் பாடங்களே அந்தக் கலையுள்ளங்களைப் படம்பிடிக்கும்போது நளினச் சொற்கள் நகர்ந்துகொள்வதுதானே முறை. இனி நீங்களும் அந்தப் பாடல்களும் தேவதேவியும்.

இராஜசிம்மேசுவர விமானக் கல்வெட்டு

1. கங்கை உங்களைப் புனிதப்படுத்தட்டும். சிவபெருமானின் தலையிலிருந்து ஊற்றெடுக்கும் அவள், அவர் கழுத்தின் தன்மையால் கருப்பாகவும், அவர் அணிந்துள்ள பாம்புகளின் படங்களிலுள்ள மாணிக்கங்களின் கதிர்களால் சிவப்பாகவும் ஒளிர்ந்து மூன்று உலகங்களின் ஏரியை நிரப்புகிறாள்.

2. . . . . . . அவருக்குப் பிறகு அங்கிரஸ் அவருடைய மனதிலிருந்து பிறந்தார். அவருடைய மகன், (பிரகஸ்பதி) இந்திரனின் அமைச்சராகவும், தெய்வங்களின் ஆசிரியராகவும் அமைந்தார். அவர் மகன் சம்யு. அளவுக்கதிகமான ஆற்றல் பெற்றிருந்த, மூவுலகங்களாலும் பெருமைபடுத்தப்பட்ட அவரிடமிருந்து, முனிவர்களின் தலைவரான, பல்லவ மரபிற்கு மூலமாய் அமைந்த பரத்வாஜர் பிறந்தார்.

3. இவரிடமிருந்து, பாண்டவ கௌரவர்களின் மிகுந்த மதிப்பிற்குரிய ஆசிரியரான துரோணர் வந்தார். இளவரசர்களை நிலையாமைக்குள்ளாக்கி பெருமையிழக்கச் செய்த மிகப்பெரிய அசுவத்தாமன் அவரிடமிருந்து வந்தார். முதற்பிறப்பான மனுவைப் போல அசுவத்தாமனின் மகன், பல்லவன் என்ற பெயருடையவன், முழு நிலப்பகுதியையும் அனுபவித்த, வீரமும் வெற்றியும் நிரம்பிய, அரசர்களின் மரபைத் தோற்றுவித்தவன் பிறந்தான்.

4. கடமை உணர்வுமிக்க, கலியின் அளவற்ற பெருமையை அழித்த, உண்மை விளம்பிய, பேரறிவு மிக்க, மூவர்க்கத்தை கடைபிடிக்கும் வழியறிந்த உள்ளமுடைய வயதானவர்களைப் பெருமைபடுத்திய, காமத்தையும் உட்பகையையும் வலிந்து வலியிழக்கச் செய்த, ஆயுதங்களைப் பற்றிய அறிவில் இணையற்று விளங்கிய, உறுதியான, பேராற்றல் மிக்க, எளிமையும் ஆளும் திறனும் மிக்க அந்தப் பல்லவ இளவரசர்களுள்,

5. புரங்களை அழித்த பரமேசுவரனிடமிருந்து குகன் பிறந்தாற் போல, பல்லவ மரபில் பிறந்து, ரணரசிகனின் நகரத்தை அழித்துப் பேரரசனான உக்ரதண்டனிடமிருந்து கடமை உணர்வு மிக்க ஸ்ரீஅத்யந்தகாமன் பிறந்தார். அவர் பல்லவர்களின் தலைவர். தம் வலிமையால் பல எதிரிகளை அழித்தவர். சைவ நெறியில் ஒழுகி அனைத்து மாசுகளையும் களைந்தவர். அவருடைய ஆளுந்திறம் நன்கறியப்பட்டது.

6. அழகிய, பண்பட்ட பெண்களுடன் மன்மதனைப் போலக் களவு புரிந்தவர். மூன்று வேதங்களின் வழியைத் தேர்ந்து கொண்டவர்களை இந்திரனைப் போலத் தொடர்ந்து காப்பாற்றினார். தெய்வங்கள், முனிவர்கள், பிராமணர்கள்தம் எதிரிகளின் இதயங்களை மாதவன் போல் கிழித்தவர். நல்லவர்களைக் குபேரன் போல் பெருஞ்செல்வம் தந்து நிறைவித்தவர்.

7. கடவுளைப் பார்த்த கண்வ மகரிஷி போன்றவர்களால் பயன்படுத்தப்பட்ட துஷ்யந்தனைப் போன்ற அரசர்கள் கிரேத யுகத்தில் தேவ ஒலியைக் கேட்டிருந்தால் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நல்லவைகள் ஒதுங்கிப் போகும் கலிகாலத்தில் ஸ்ரீபரன் அந்த ஒலியைக் கேட்டமை மிகுந்த வியப்பிற்குரியது.

8. துணிவாலும் ஆளுந்திறத்தாலும் அளவற்ற வளங்களையும் பெருமையையும் பெற்றிருந்த இளவரசர்களை இரங்கத் தக்கவர்களாக்கி, புருவங்களை நெறித்த அளவிலேயே அவர்கள் அறிவுக்கூர்மை இழக்கும்படிச் செய்த ரணஜயன் நெடுங்காலத்திற்கு வெற்றி பெறுபவராக இருப்பாராக. பாவக்கடலில் மூழ்கி கலி எனும் பயங்கர அரக்கனால் விழுங்கப்படவிருந்த மக்களைப் புருஷோத்தமனைப்பொலக் காப்பதற்கென்றே பிறந்தவர் அவர்.

9. ஆளுந்திறத்தாலும் துணிவாலும் தம்மால் வெற்றிகொள்ளப்பட்ட உலகத்தை அனுபவித்த இவ்விளவரசர், எதிரிகளைக் கொன்று அரசர்களை இரங்கத்தக்கவர்களாக்கியவர். அப்படிப்பட்ட அவர், தம் புகழைப் போலவும், சிவபெருமானின் சிரிப்பைப் போலவும் விளங்கும் இந்த மிகப்பெரிய, அழகிய இறை இல்லத்தை எடுப்பித்தார்.

10. அசுர, தேவத் தலைவர்களான அரசர்கள் பலரால் புகழப்படுபவரும் பாம்பரசனின் உடல் வளையங்களை ஆபரணங்களாய் அணிந்தவருமான சங்கரர், புனிதமான ராஜசிம்மப் பல்லவேசுவரமெனும் இக்கோயிலில் நெடுங்காலம் வசிக்கட்டும்.

11. கடமை உணர்வு மிக்க அரசர்களின் அரசரானவரும் தம் ஆணைகளுக்கு அனைத்துப் பகுதிகளையும் கீழ்ப்படியச் செய்தவரும் துணிவான எதிரிகளின் படைகளான யானைக் கூட்டங்களுக்குத் தாம் ராஜசிம்மம் போன்றவர் என்பதை மெய்ப்பித்தவருமான அரசரால் எடுப்பிக்கப்பட்ட, கைலாசத்தைத் தன் அழகால் கவரக்கூடிய, மேகத்தைத் தொடும் உச்சியையுடைய இக்கற்றளிக்கு எருதுக் கொடியை உடையவரான சிவபெருமான் தம்முடைய இருப்பை அளிப்பாராக.

12. போர்களில் வெற்றி சூடுபவரும் (ரணஜயன்), வளங்களைப் பெறுபவரும் (ஸ்ரீபரன்), வியத்தகு வில்லாளியும் (சித்ரகார்முகன்), இணையற்ற வீரரும் (ஏகவீரர்), சிவசூடாமணியுமான ராஜசிம்மர் இப்பூவுலகை நெடுங்காலம் காப்பாராக.

மூன்றாம் தளிப் பாடல்கள்

1. நமசிவாய. புரங்கள் அழிக்கப்பட்டபோது வில்வலிமை வெளிப்பட்ட, எருதை இலச்சினையாகக்கொண்ட, பரமேசுவரனுக்குப் பிரியமான மனைவியான மலையரசன் மகளைப் போல, நகரங்கள் அழிக்கப்பட்டபோது வில்வலிமை வெளிப்பட்ட, எருதை இலச்சினையாகக்கொண்ட, காலகாலன் என்று புகழ்பெற்ற கணவனின் பிரியமான அன்பிற்குரிய மனைவி அவள்.

2. எதிரிகளின் இதயத்தைப் பிளந்தவரும், உலகத்தைப் புரக்கும் பணிக்குத் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவருமான அரசர் நரசிம்மவிஷ்ணுவின் விருப்பத்திற்குரியவள் எனும் மிகப்பெரிய நிலையைப் பெற்ற ஒளி நிறைந்தவளான அவள், புஷ்கரதேவதையான லட்சுமியின் பெருமையைக் குறைத்தவள்.

ஐந்தாம் தளிப் பாடல்கள்

1. எழில், மென்மை, தெய்வீகக் கவர்ச்சி, தூய்மை நிறைந்த அவள், ஆயிரக்கணக்கான அழகுப் பெண்களைப் படைத்து, அழகாய்ப் படைப்பதில் தேர்ச்சியுற்ற படைப்புக் கடவுளின் இணையற்ற உருவாக்கமாவாள்.

2. உண்மையான இனிமைத் தன்மையால் கவர்ச்சியான அவள், தெய்வீகத் தன்மை, மகிழ்ச்சியூட்டும் தன்மை, ஈர்க்குந் திறன் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவள். அவள், கவர்ச்சிக் கலைப் போல. . . . . . . . . . .

3. அந்த ரங்கபதாகை, பெண்களில் கொடி போன்றவள், தலையில் நிலவை அணியாகக் கொண்ட சிவபெருமானுக்கு இந்த அழகு நிறைந்த இருப்பிடத்தை உண்டாக்கினாள்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.