http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 75
இதழ் 75 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
ஒப்பாரும் மிக்காருமற்ற அந்தச் சோழ மாமன்னனின் பெரிய பிரம்மாண்ட மனோரதங்களையும், கலை உணர்வு மிக்க எண்ணங்களையும், காலத்தை வெல்லும் கனவுகளையும் செயல்படுத்த விழைந்தவர்கள் அவர்கள். அப்பெண்கள் நானூறு பேரும் "தளிச்சேரிப் பெண்டுகள்" என மிக உயர்வாகவும், மிகக் கௌரவமாகவும், மரியாதையாகவும் அழைக்கப்பட்டனர். அத்தளிச்சேரிப் பெண்கள் நாட்டிய சாஸ்திரத்தின் பாடங்களை நன்று பயின்றவர்கள். ஆடல், பாடல், கூத்து என அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்த கலையரசிகள். மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் பல்வேறு கோயில்கள் மற்றும் ஊர்ப்பகுதிகளிலிருந்தும் தஞ்சைத் தரணிக்கு வரவழைக்கப்பட்டவர்கள். அன்று சோழ சமுதாயத்திலும், திருக்கோயில்களிலும் அவர்களுக்கு அதிக மதிப்பும், மரியாதையும் இருந்தது. தளிச்சேரிப் பெண்கள் நானூற்றுவரும் தம்மை இறைப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள். சீரார்ந்த தளிச்சேரி :- இராஜராஜேசுவரத்தில் பணிபுரிந்த இந்த 400 பெண்களுக்கும் திருக்கோயில் அருகே குடியிருப்பு அமைக்கப்பட்டது. மிக நேர்த்தியாக வடக்குப்புறம், தெற்குப்புறம், மேற்குப்புறம் என 3 திசைகளிலும் இவர்களின் வாழ்விடங்கள் இடம்பெற்றன. அவற்றின் பிரிவுகளைக் காண்போம். (1) தெற்குத் தளிச்சேரி வடசிறகு : 92 வீடுகள் தென்சிறகு : 92 வீடுகள் மொத்தம் : 184 வீடுகள் (2) வடக்குத் தளிச்சேரி வடசிறகு : 96 வீடுகள் தென்சிறகு : 95 வீடுகள் மொத்தம் : 191 வீடுகள் (3) மேற்குத் தளிச்சேரி மொத்தம் : 25 வீடுகள் ஆக, திருக்கோயிலின் மூன்று திசைகளிலும் சேர்த்து 400 தளிச்சேரி வீடுகள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. இந்நானூறு வீடுகளிலும் இந்தக் கலையரசிகள் குடியமர்த்தப்பட்டனர். தஞ்சை இராஜராஜேசுவரத்தின் தளிச்சேரி அன்றைய நாளில் மிகப் பெரியதாக அமைந்திருந்தது என்பது வாழ்விடங்களின் மேற்கண்ட பிரிவுகளைக் கொண்டு அறியலாம். (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |