http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 53
இதழ் 53 [ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
புஜப்ரதாபானலதூமலேகா ஸங்க்ராமலஷ்மீகபரீகலாபஹ| த்ரைலோக்யரக்ஷாவிதிவிச்வமூர்த்தேர் ஜ்ஜாகர்த்தி யஸ்யானுகுணஹ க்ருபாணஹ|| அவனுடைய தோளின் வலிமையாகிய நெருப்பிலிருந்து எழும் புகைக்கோடே வெற்றித் திருமகளின் குழல் கற்றை. மூவுலகையும் காக்கும் விதியின் ஓருருவான அவனையொத்த குணங்களுடைய அவன் வாள் விழிப்போடிருந்தது. த்யாவாபுவெள வ்யாப்ய விஜரும்பஹஸாதா நிரங்குசம் ராஜாரியாஸ்ய கீர்த்தி: பினாகபாணோ ஸுவ்ரபதி மூர்த்தேரபயய்யாப்த ஜகதீரயாயாஹ || பூமி முதல் ஆகாசம் வரையில் எங்கும் வியாபித்து பரந்து ஒளிவீசும் அரசனான அவனுடைய புகழானது, திரிசூலம் ஏந்திய ருத்ரசிவனைப் போன்றும் இந்திரனைப்போன்றும் மூவுலகிலும் வியாபித்து எங்கும் நிறைகின்றது. ஸெளந்தர்யே மதனஸ்தருர்விதரணே திவ்யா க்ஷமாயா க்ஷிதிஹ க்ரோதே தண்டதரஹ பராக்ரமவிதெள ஜாமதக்ன்யார்ஜ்ஜுநெள| நீநெள சுக்ரப்ருஹஸ்பதீ சுரபதி த்ரைலோக்யர க்ஷாக்ரமே ஸங்கீதேபரதோ முனிர்ந் நரபதி ஸ்தீ.............கதவர்ண்யதே| அழகில் மன்மதன் போன்றவன், வள்ளற்தன்மையில் உன்னதமான கற்பகதரு போன்றவன், கோபத்தில் யமதர்மன், வீரபராக்ரமத்தில் ஜமதக்னியின் புத்திரனான பரசுராமன், அர்ஜுனன் போன்றவன் நீதியில் அசுரகுருவான சுக்கிராச்சாரியார் பிரகஸ்பதியை ஒத்தவன், மூவுலகையும் இரட்சித்துக் காப்பதில் தேவேந்திரனுக்கு இணையானவன். சங்கீதத்தில் பரதமுனிவன். இவ்விதம் விளங்கும் மன்னனான இந்த வீரனுடைய புகழை எவ்விதம் வர்ணித்துக் கூற? ஸபாபதேதர்மண்டபம்க்ரவர்த்தி கிரீநீரஜாவேச்மனி கோபுரஞ்ச| ப்ராகாரஹர்ம்யம்ச விதாய ஹைமந்த தேகபக்தோமுமுதே நரேந்தரஹ|| சிதம்பரத்தில் சபாபதியாகிய ஆடவல்லானின் முன்னுள்ள மண்டபத்தையும் கிரீந்திரஜா என அழைக்கப்படும் மலைமகளாகிய சிவகாமியின் கோயில் கோபுரத்தையும் சுற்றுப்பிரகார மாளிகைகளையும் சிதம்பர நடராஜரின் மேல் இடையறாத பக்தி கொண்ட இம்மன்னன் மிகுந்த விருப்பத்துடன் பொன்மயமாக விளங்கும்படி நிர்மாணித்தான். ஏகாம்ரேஸ்வரதிவ்ய தாம மதுரா ஹாலாஹலாஸ்யாலயம் ஸ்ரீமத்யார்ஜ்ஜுனதாம தாமசததா ஸ்ரீராஜராஜேஸ்வரம்| வல்மீகேமச்வர வேச்வசேதி நிகிலம்ந் நிர்மாய ஹைமந்த்ந்ருபோ வல்மீகாதிப தேச்ககார ச ஸபாம் திவ்யாம் மஹத்கோபுரம்|| கச்சியில் ஏகாம்பரநாதருடைய அழகு பொருந்திய கோயிலையும் மதுரை ஆலவாயனுடைய கோயிலையும் ஸ்ரீ மத்யார்ஜ்ஜுனம் எனப்படும் திருவிடைமருதூர்க் கோயிலையும் ஸ்ரீ இராஜராஜேச்சரம் கோயிலையும் (இன்றைய தாராசுரம்) வன்மீதநாதருடைய கோயிலையும் (திருவாரூர்) எல்லாம் பொன்மயமாக விளங்கும்படி நிர்மாணித்தான். வன்மீகநாதருடைய கோயில் சபையையும் பெரிய கோபுரத்தையும் அழகுற நிர்மாணித்தான். (தொடரும்...)this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |