http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 69
இதழ் 69 [ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2010 இந்த இதழில்.. In this Issue.. |
பிரிவும் பிரிவு சார்ந்த நிமித்தமும் இங்கே அரங்கேறுகின்றது. இருள்கூர் மாலை, தலைவன் பிரிந்து போகின்ற அந்தத் துன்பப் பொழுதும் வந்தது. செஞ்செவியுடைய பருந்து, போரில் அஞ்சாநெஞ்சம் படைத்த வீரரின் குடலைக் கண்டோர் அஞ்சுமாறு கவர்ந்து போகும் கடுமையான கற்களையுடைய பாலை வழி. ஓ நெஞ்சே! ஒளி பொருந்திய நெற்றியையுடைய பூம்பாவையைப் பிரியும் கணங்கள் மிக்க துயரம் கொண்டவை. அவள் கண்களின் அருவிகளைக் கண்டு தவிக்கின்றேன். (தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்குவித்தது) 77. பாலை "... ... ... வாழிய நெஞ்சே வெய்துற இடியுமிழ் வானம் நீங்கி யாங்கனும் குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழக் கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார் பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின் உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த ... ... ..." - மருதனிள நாகனார் அகநானூறு : 4-9 வரிகள் விளக்கம் : நெஞ்சே வாழ்க! இடிகளை உமிழும் மேகம் வெம்மை மிக மழை பெய்யாது நீங்கியதால், எவ்விடத்தும் குடிகள் தத்தம் பதிகளினின்றும் பெயர்ந்து போவதற்கு ஏதுவாய்ப் பலரும் சுட்டிக்கூறும் மிக்க பாழிடமாகிய பாலையில், கயிற்றால் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்து அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கி, அவ்வோலையைத் தேரும் ஆவணஞ்செய்வோர் அவற்றை வெளியே ஈர்த்தெடுத்தல் போலத் தம் உயிர் வேறொரு நற்பதவியிற் புக ... ... குடவோலை முறை : ஊராண்மை, நாட்டாண்மைக் கழகங்கட்டு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற் பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின்கண் போடப்பட்ட ஓலைகளை, ஆவண மாக்கள், பலர் முன் குடத்தின் மேலிட்ட இலச்சினையைக் கண்டு, நீக்கி உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணி, தேர்ந்து எடுக்கப்பட்டவர் இவரென முடிவு செய்வதொரு வழக்கத்தினை இப்பாடல் குறிக்கின்றது. இது "குடவோலை முறை" என்று அறியப்படும். அகநானூற்றுப் பாடலில் மருதனிள நாகனாரின் உவமைநயம் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது. பின்னாளில் கி.பி 907-953 இல் முதலாம் பராந்தகன் காலத்து உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் இம்முறை பற்றி மிக விரிவாகப் பேசுகின்றன. குடவோலை முறை சங்ககாலம் முதலே தமிழனின் அரசியல் மேலாண்மையில் முக்கியமான வழக்காறாய் நடைமுறையில் உள்ளது என்பது அகநானூறு பாடல் மூலம் தேற்றம். ஓ தமிழ் நெஞ்சே! தமிழனாய் வாழ்வதில் பெருமைகொள்! this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |