http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 180

இதழ் 180
[ ஆகஸ்ட் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

இரண்டு கோயில்கள் இரண்டு கல்வெட்டுகள்
Sharda Temple- Kashmir
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் சமுதாயம் - 2
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 86 (அழச்சொன்னாயோ நிலவே?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 85 (உள்ளத்தில் உள்ளேனா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 84 (இன்றுபோல் நாளை இல்லை!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 83 (துயரறுத்தலே துயரமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 82 (கண்ணீரே வாழ்வாக!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 81 (குயிலிசை போதுமே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 80 (மைக்குழற் செறிவன்ன காதல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 79 (முகிலிடை ஒளிக்கசிவு)
சங்கப்பாடல்களில் பெண் தொழில்முனைவோர்- 5
இதழ் எண். 180 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 86 (அழச்சொன்னாயோ நிலவே?)
ச. கமலக்கண்ணன்

பாடல் 86: அழச்சொன்னாயோ நிலவே?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
嘆けとて
月やは物を
思はする
かこち顔なる
わが涙かな

கனா எழுத்துருக்களில்
なげけとて
つきやはものを
おもはする
かこちがほなる
わがなみだかな

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: மதகுரு சாய்க்யோ

காலம்: கி.பி 1118 - 1190.

பேரரசர் சுதொகுவின் இடங்கைப் பிரிவு மெய்க்காவல் படையில் அதிகாரியாக இருந்த இவர் துறவறம் பூண்டதற்குப் பின்னால் ஒரு சுவையான நிகழ்வு உண்டு. ஒருநாள் பேரரசருடன் நந்தவனத்தில் உலா வந்தபோது ஒரு பறவை அங்குமிங்கும் பறந்தபடி அங்கிருந்த செர்ரிப்பூக்களின் இதழ்களைச் சிதறடித்துக்கொண்டிருந்தது. அதைக்கண்டு கோபமுற்ற பேரரசர் இவரிடம் பறவையை விரட்டச் சொன்னார். இவர் தனது கைவிசிறியால் குறிபார்த்து அடித்துப் பறவையை வீழ்த்தினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பியதும் இவரது மனைவி தான் ஒரு கெட்டகனவைக் கண்டதாகவும் கனவில் தான் ஒரு பறவையாக மாறியதாகவும் அதை அவர் கொன்றுவிட்டதாகவும் கூறினார். இதைக்கேட்டுத் துயருற்று அப்போதே (22ம் வயதில்) குடும்பத்தையும் மனைவியையும் விட்டுவிட்டுத் துறவறம் மேற்கொண்டுவிட்டார்.

துறவியாக இருந்தாலும் பல காதல் கவிதைகளை இயற்றினார். நிலவும் பூக்களும் இவரது விருப்பமான கருக்கள். பல இடங்களுக்குப் பயணம் செய்து ஆங்காங்கே காணும் காட்சிகளை வைத்துக் கவிதைகளை இயற்றித் தொகுத்தார். அதில் குறிப்பிடத்தக்கது மலையகக் கவிதைகள் எனப்படும் சான்கஷூ தொகுப்பாகும். பின்னாளில் வந்த மட்சுவோ பாஷோ போன்ற கவிஞர்கள் இவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து கவிதைகளை இயற்றினர்.

இத்தொடரின் 83வது பாடலின் (துயரறுத்தலே துயரமோ?) ஆசிரியர் தொஷினாரியின் நண்பர். ஆனால் தொஷினாரி நடுவராக இருந்து தீர்ப்பளித்த பல பாடல்கள் சிறந்தவை என்பதில் இவருக்கு உடன்பாடில்லை. எனவே, இவரே கற்பனையில் கவிதைப்போட்டிகளை நடத்தி, தொஷினாரி சிறந்ததாகத் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு பாடலுக்கும் எதிர்ப்பாடல் ஒன்றை இயற்றி "மிமோசுசோ நதிக்கரைக் கவிதைகள்" என்ற பெயரில் அவற்றைத் தொகுத்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 266 பாடல்களும் மலையகக் கவிதைகள் என்ற தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: உள்ளத்தின் வலியை நிலவு அதிகரித்தல்

பாடலின் பொருள்: வானத்தில் வட்டநிலா என்னை அழச்சொல்கிறது. இல்லையில்லை. அழவைப்பது என் உள்ளத்தின் நினைவுகளே. கண்ணீர் பெருக்கெடுப்பதற்கு நிலவைக் குறை கூறுவானேன்?

வடகிழக்கு ஜப்பானின் செந்தாய் நகரின் மியாகினோ எனும் இடத்துக்குச் சென்றபோது இயற்றிய பாடல் இது. இப்பாடலைத் தனது தொகுப்பில் காதல் பாடல்கள் வரிசையில் வகைப்படுத்தியிருக்கிறார். ஆனால் காதல் என்ற பார்வையில் இல்லாவிட்டாலும் வாழ்வின் எல்லாத் துக்கங்களுக்கும் பொருந்துவதாக இருக்கிறது இப்பாடல். முழுநிலவு உணர்வுகளைத் தூண்டக்கூடியது என்ற கருதுகோள் ஜப்பானிய இலக்கியங்களிலும் இருப்பதாக உரையாசிரியர்கள் கூறுகிறார்கள்.

வெண்பா:

உள்ளமும் தேம்பிடத் தேம்பிடத் தோய்ந்திடும்
தெள்ளிய நீருடைக் கண்களின் - வெள்ளமும்
நில்லாது பொங்கிடப் பொங்கிட வைக்கும்
நிலவல்ல எந்தன் நினைவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.