http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 19
இதழ் 19 [ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
பழுவூர்ப் புதையல்கள்
சென்ற இதழில், திரு. தியாகராசன் கண்டன் அமுதன் போரில் இறந்ததற்கு ஆதாரமாகச் சுட்டிய கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிட்டோம்.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ 2. மதிரை கொ 3. ண்ட கோப்பர 4. கேசரி பன்மர் 5. க்கு யாண்டு ய 6. உ ஆவது இவ்வாண்டு பெருமான 7. டிகளொடு பாண்டியனார் ஈழப்படை 8. குணந்து வெள்ளூர் அஸ்திக்கடை செய் 9. நான்று பழுவேட்டரையர் கண்டன் அ 10. முதனார் வீர ஸ்ரீ உண்டாவதென்று பொய் 11. கைக் குருவிடத்து பரதூருடையான் படைபடுவா 12. யன் நக்கன் சாத்தன் குன்றக் கூற்றத்து சிறுபழுவூர் 13. திருவாலந்துறை மகாதேவர்க்கு சந்திராதித்தவள் 14. இரவும் பகலும் ஒரு திருநொந்தா விளக்கு எனத் தொடரும் இக்கல்வெட்டில் எந்த ஓரிடத்திலும் பாண்டியன் இறந்த செய்தியில்லை. 'அஸ்திக் கடை செய் நான்று' என்ற சொற்றொடரை, 'இறந்த போது' என்ற தவறான பொருளில் புரிந்துகொண்டு கல்வெடறிக்கை இப்பிழையைச் செய்துள்ளதோ என்று கருத வேண்டியுள்ளது. இதே போரைக் குறிக்கும் இன்னொரு கல்வெட்டு திருப்பாற்கடல் கரபுரீசுவரர் கோயிலில் காணப்படுகிறது. இதுவும் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டதாகும். "... பாண்டியனும் ஈழதரையனும் வந்து பெருமானடிகளோடு வெளூர் அஸ்திக்கடை செய்த நான்று இச்சென்னிப் பேரரையர் தாம் நெற்றிச் சென்ற இடத்துப்பட்ட சேவகர் காரிமங்கலமுடையானுக்கும், வலிக்குட்டிக்கும், பெருநாயகனுக்கும், அழியாநிலை மாடம்பிக்கும் ஆக இந்நால்வரையும் சார்த்தி எம்மூர்..." இவ்வரிகளால் வெள்ளூர்ப் போரில் இறந்த காரிமங்கலமுடையான், வலிக்குட்டி, பெருநாயகன், அழியாநிலை மாடம்பி என்ற நான்கு வீரர்களின் நினைவாக அவர்களைப் போருக்கு அழைத்துச் சென்ற அரைசூருடைய தீரன் சென்னிப் பேரரையன் இக்கோயிலுக்கு 220 கழஞ்சு பொன் கொடுத்து அறக்கட்டளையொன்றை நிறுவியமை தெளிவாகின்றது.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |