http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 19

இதழ் 19
[ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே!
இராஜகேசரி-வாசகர் எண்ணங்கள்
இராஜகேசரி - புத்தக வெளியீடு
பழுவூர் - 8
பிரதிமாலட்ஷணம்
யசுகுனி ஜிஞ்ஜா
Gopalakrishna Bharathi - 5
மஹாவைத்தியநாத சிவன்
சங்கச் சிந்தனைகள் - 7
இதழ் எண். 19 > கலைக்கோவன் பக்கம்
சென்ற இதழில், திரு. தியாகராசன் கண்டன் அமுதன் போரில் இறந்ததற்கு ஆதாரமாகச் சுட்டிய கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிட்டோம்.

1. ஸ்வஸ்தி ஸ்ரீ
2. மதிரை கொ
3. ண்ட கோப்பர
4. கேசரி பன்மர்
5. க்கு யாண்டு ய
6. உ ஆவது இவ்வாண்டு பெருமான
7. டிகளொடு பாண்டியனார் ஈழப்படை
8. குணந்து வெள்ளூர் அஸ்திக்கடை செய்
9. நான்று பழுவேட்டரையர் கண்டன் அ
10. முதனார் வீர ஸ்ரீ உண்டாவதென்று பொய்
11. கைக் குருவிடத்து பரதூருடையான் படைபடுவா
12. யன் நக்கன் சாத்தன் குன்றக் கூற்றத்து சிறுபழுவூர்
13. திருவாலந்துறை மகாதேவர்க்கு சந்திராதித்தவள்
14. இரவும் பகலும் ஒரு திருநொந்தா விளக்கு

எனத் தொடரும் இக்கல்வெட்டில் எந்த ஓரிடத்திலும் பாண்டியன் இறந்த செய்தியில்லை. 'அஸ்திக் கடை செய் நான்று' என்ற சொற்றொடரை, 'இறந்த போது' என்ற தவறான பொருளில் புரிந்துகொண்டு கல்வெடறிக்கை இப்பிழையைச் செய்துள்ளதோ என்று கருத வேண்டியுள்ளது. இதே போரைக் குறிக்கும் இன்னொரு கல்வெட்டு திருப்பாற்கடல் கரபுரீசுவரர் கோயிலில் காணப்படுகிறது. இதுவும் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டதாகும்.

"... பாண்டியனும் ஈழதரையனும் வந்து பெருமானடிகளோடு வெளூர் அஸ்திக்கடை செய்த நான்று இச்சென்னிப் பேரரையர் தாம் நெற்றிச் சென்ற இடத்துப்பட்ட சேவகர் காரிமங்கலமுடையானுக்கும், வலிக்குட்டிக்கும், பெருநாயகனுக்கும், அழியாநிலை மாடம்பிக்கும் ஆக இந்நால்வரையும் சார்த்தி எம்மூர்..."

இவ்வரிகளால் வெள்ளூர்ப் போரில் இறந்த காரிமங்கலமுடையான், வலிக்குட்டி, பெருநாயகன், அழியாநிலை மாடம்பி என்ற நான்கு வீரர்களின் நினைவாக அவர்களைப் போருக்கு அழைத்துச் சென்ற அரைசூருடைய தீரன் சென்னிப் பேரரையன் இக்கோயிலுக்கு 220 கழஞ்சு பொன் கொடுத்து அறக்கட்டளையொன்றை நிறுவியமை தெளிவாகின்றது.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.