http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[142 Issues]
[1509 Articles]
Home About US Temples Facebook
Issue No. 56

இதழ் 56
[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

என்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்?
புவனேசுவர விளக்கு
Elephant - The War Machine
திரும்பிப்பார்க்கிறோம் - 28
திருத்தங்கல் குடைவரை
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3
அழகி
அவர் - பகுதி 8
Thirumeyyam - 3
Silpi's Corner-08
அவர் இல்லாத இந்த இடம் . . .
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1
தசரூபகத்தில் நாட்டியம்
SMS எம்டன் 22-09-1914
இதழ் எண். 56 > சுடச்சுட
புவனேசுவர விளக்கு
மு. நளினி

அருள்தரு மீனாட்சியம்மன் கோயிலில் வரலாறு வழங்கும் விளக்குத் தோரணங்கள் மூன்று கண்டறியப்பட்டன. மூன்றில் இரண்டு, இறைவன் திருமுன் இருக்கும் இடத்திற்கு முன்னுள்ள மண்டபங்களிலும் ஒன்று அங்கயர்க்கண்ணியாக இருந்து மீனாட்சியாக வடமொழிப்படுத்தப்பட்ட இறைவியின் திருமுன் முன்னுள்ள மண்டபத்திலும் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று விளக்குத் தோரணங்களுமே கல்வெட்டுப் பொறிப்புகளுடன் உள்ளமை களஆய்வில் கண்டறியப்பட்டது. கம்பத்தடி மண்டப விளக்குத் தோரணப் பொறிப்பு 2009 பிப்ருவரி 7ம் நாள் ஆய்வின்போது அறியப்பட்டது.

சிற்பக் களஞ்சியமாக விளங்கும் கம்பத்தடி மண்டபத்தின் முகப்பில் விளங்கும் விளக்குத் தோரணம் முதல் தோரணத்தினும் அளவில் சிறியது. மூன்றடுக்குத் தாங்கல்களுடன் மேலெழுந்து பிறை வளைவு பெற்றுக் கீர்த்திமுக உச்சியில் முடியும் இத்தோரணத்தின் இருபுறத்தும் பக்கத்திற்கு ஒன்றாகக் காட்டப்பட்டுள்ள தாவு யாளிகள் அகல்கள் பெற்றுள்ளன. தாங்கலிலும் மேற்பகுதியிலும்கூட யாளிகள் பெற்றுள்ள இவ்விளக்கு மாலையின் வலத் தாங்கலின் கீழ்ப்புறத்தே கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.



ஜெய வருடம் மாசிமாதம் 12ம் நாள் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டின் கீழே முத்தலை ஈட்டி பொறிக்கப்பட்டுள்ளது. விசுவநாத நாயக்கர் மரபைச் சேர்ந்த திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகக் குப்பையாண்டிச் செட்டியார் செய்தளித்த இந்த மகரதோரண விளக்கைக் கல்வெட்டு, 'புவனேசுவர விளக்கு' என்று பெயரிட்டு மகிழ்கிறது. இவ்விளக்குத் தோரணம் செய்விக்கப்பட்ட காலத்தில் இக்கோயிலின் பாரபத்தியமாகப் பணியில் இருந்தவர் நாவாயி ஆனந்த வீரப்பச் செட்டியார் ஆவார்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.