http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 1

இதழ் 1
[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்வியலில் வரலாறு
சரித்திரம் பழகு
உடையாளூரில் பள்ளிப்படையா?
பஞ்சமூலம்
கட்டடக்கலை ஆய்வு - 1
கல்வெட்டாய்வு - 1
இது கதையல்ல கலை - 1
கருங்கல்லில் ஒரு காவியம் - 1
About Us
சிரட்டைக் கின்னரி
இராஜராஜீசுவரத்துப் பாடகர்கள்
இராகமாலிகை - 1
சங்கச்சாரல் - 1
இதழ் எண். 1 > ஆலாபனை
இராகமாலிகை - 1
லலிதாராம்
கர்நாடகமா கர்நாடகயிசை?


கண்ணகி மதுரை நகரெரித்த காலம் முதல் கண்ணகி சிலை அருங்காட்சியகம் சென்ற காலம் வரை உள்ள தமிழர் சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால், தமிழர் வாழ்வில் இசை இரண்டறக் கலந்துதான் உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு வகையான பாடலைக் கொண்டுதான் தன் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ அல்லது வேறேதாவது ஒரு உணர்வையோ தமிழன் வெளிப்படுத்துகிறான்.

அப்படிப்பட்ட தமிழனிடம் இன்று போய் "நீ கர்நாடக சங்கீதம் கேட்பதுண்டா?" என்று கேட்டால், பெரும்பாலானவர் கூறும் பதில் "அட! அதுக்கெல்லாம் ரொம்ப அறிவு வேணுமையா! நான் நிறைய பாட்டு கேட்பேன். ஆனால், எல்லாம் சினிமா பாட்டுதான்" என்பது. இப்படி ஒரு பதிலைக் கேட்க நேரிடும் போதெல்லாம் எனக்குச் சிரிப்புதான் வரும். அதற்கான காரணத்தைப் பிறகு சொல்கிறேன்.

முதலில் கர்நாடக இசை நம்மிலிருந்து அந்நியப்பட்டுப் போனதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம். காலை வேளையில் கலர் கலராய்க் கனவு கண்டு கணக்கு டீச்சரைக் கட்டி வைத்து உதைக்கும் கணத்தில், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தன் தேன்மதுரக் குரலால் கனவைக் கலைத்து விடுவார். அன்று விழும் இந்த இசையின் மீதுள்ள வெறுப்பிற்கான முதல் விதை. அப்படி அதிகாலையை விட்டு விட்டால் யாராவது பெரிய மனிதர் மண்டையைப் போட்ட அன்று நாம் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி மெகா-சீரியல்களை ரத்து செய்துவிட்டு லால்குடி ஜெயராமனின் சுபபந்துவராளியை ஒளிபரப்பிவிடுவார்கள். ஆக.. நேரங்கெட்ட நேரத்தில் வந்து நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் விஷயமாகவே கர்நாடக சங்கீதம் உள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம். ஒரு சராசரி தமிழ் வீட்டின் இல்லத்தரசியிடம் போய் "உங்களுக்கு ரசம் சமைக்கத் தெரியுமா?" என்று கேட்டு, அதற்கு அவர் "ஐயோ!அதற்கெல்லாம் ரொம்ப அறிவு வேண்டும். எனக்கு சாம்பார்தான் சமைக்கத் தெரியும்" என்று கூறினால், உங்களுக்குச் சிரிப்பு வருமா? வராதா? சாம்பார் வைக்க உபயோகப்படும் அதே பருப்பு, பொடி, கடுகு ஆகியவைதானே ரசம் வைக்கவும் உபயோகிக்கிறோம்!அப்படியிருக்க, இந்தப் பெண்மணி ஏன் ரசம் வைக்க computer science படிக்க வேண்டும் என்கிறாள்?, என்று நினைக்கத் தோன்றும் அல்லவா? அதே போலத்தான், கர்நாடக இசையும் திரையிசையும் ஒரே அடிப்படையில்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் உலகின் எல்லா வகை இசைக்கும் அடிப்படை ஒன்றுதான். ஒரு குழந்தையிடம் அச்சிலிட்ட வடிவான கற்கண்டையும், கரடுமுரடான கற்கண்டையும் கொடுத்தால், அது கரமுரடானதைச் சுவைக்காமலே எனக்கு வேண்டாம் என்பதுபோல், வெளிப்பார்வைக்குக் கரடுமுரடாய்த் தெரியும் கர்நாடகயிசையை நாம் அந்நியப்படுத்திவிட்டோம்.

தமிழருக்குக் கர்நாடக சங்கீதம் பிடிக்காதெனில் 'சிந்து பைரவி' என்ற படம் மூலை முடுக்கெல்லாம் கொடிகட்டிப் பறந்ததெப்படி? வேற்று பாஷைப் பாடல்களெனினும், "சங்கராபரணம்" படத்தின் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவியது எப்படி? அட! அவ்வளவு ஏன்? உங்கள் வீட்டில் எவரேனும் பெரியவர் இருந்தால் அவருக்குப் பிடித்த திரைப்பாடலைச் சொல்லச் சொல்லுங்கள். அவர் கூறும் M.K.T அல்லது K.B.S பாடிய பாடல் எங்கிருந்து வந்தது? எல்லாம் கர்நாடக இசைதானே!!

கர்நாடக சங்கீதம் அடிப்படையில் பக்தியை வெளிப்படுத்தும் இசை. ஆனால் திரைப்படங்களில் அனுதினம் நடக்கும் யதார்த்தங்களைக் காட்ட வேண்டியிருப்பதால், அதற்கேற்றார்போல இசையையும் சற்று மாற்றியமைக்கின்றனர், அவ்வளவே!.

"I only listen to backstreet boys" என்று வீண் பகட்டில் பிதற்றும் ஜந்துக்களைக் கர்நாடக இசை கேட்க வைப்பதல்ல இந்தத் தொடரின் நோக்கம். "கண்ணே கலைமானே" போன்ற அற்புதமான பாடல்களுக்கு மனதை பறி கொடுத்தவரிடையில் கர்நாடக சங்கீதம் ஒன்றும் கம்ப-சூத்திரம் அல்ல என்பதைப் பறை சாற்றுவதே இந்த தொடரின் நோக்கம். உங்களை வருகின்ற இசைவிழாவில், "music academy"-யில் முண்டியடித்து டிக்கெட் வாங்க வைப்பேன் என்று கூறவில்லை. நீங்கள் இதுவரை ரசித்து ருசித்த பாடல்களை மேலும் எப்படி ரசிக்கலாம் என்று கூறுவதே என் நோக்கம்.

சென்னைக்கு அருகிலிருக்கும் "Ashok Leyland" நிறுவனத்தில் ஒரே நாளில் தயாராகும் 3 வண்டிகளைத் தொடருங்கள். ஒன்று தட்டு முட்டுச் சாமான்கள் ஏற்றிச் செல்லும் லாரியாக மாறும். ஒன்று குளிர்பதன வசதி கொண்ட டூரிஸ்ட்டு பஸ் ஆகும். இன்னொன்று எப்பொழுதும் தாமதமாக வரும் பல்லவன் பேருந்தாகும். அதைப் போலத்தான் திரையிசையும் கர்நாடக இசையும்.

திரைப்படங்களில் தாலாட்டுப் பாட்டு, காதல் பாட்டு, காதலியைக் காதலன் கிண்டல் அடிப்பது, கதாநாயகன் நயாகராவுக்குச் சென்று தமிழ்க் குடியின் தொன்மையைப் பற்றிப் பாடுவது, பக்திப்பாடல், ரயிலில் தவறிப்போன இரு சகோதரர்களை இணைக்கும் குடும்பப்பாடல். தத்து(பித்து)வப்பாடல் என்று பலவிதமான சூழ்ந்¢லைக்கேற்பப் பாடல் அமைக்கிறார்கள். ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போதே அந்தச் சூழ்நிலையை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

உதாரணமாக "பருவமே புதிய பாடல் பாடு" என்ற பாடலைக் கேட்கும் பொழுதே இருவர் காலை வேளையில் "jogging" செல்வது போன்ற உணர்வு மனதில் எழுகிறது. இதைத்தான் கர்நாடக இசையில் ராகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு ராகமும் ஒரு குறிப்பிட்ட ஸ்வர வரிசையில் அமைக்கப் பெற்றது. நம் வாழ்வில் உள்ளதுபோல் ராகஙளுக்கும் ஏறுமுகம், இறங்குமுகம் உண்டு. ஏறுமுகத்தை 'ஆரோஹனம்' என்றும் இறங்கு முகத்தை 'அவரோஹனம்' என்றும் குறிக்கிறோம். ஆக, சூழ்ந்¢லைக்கு ஏற்றவாறு அந்தந்த ராகங்களைப் பயன்படுத்தித்தான் இசையோவியம் வரைகின்றனர் நம் இசையமைப்பாளர்கள். உதாரணமாக மோகனம் ராகத்தை எடுத்துக் கொண்டால், பெயர் சொல்வதைப் போலவே அது சந்தோஷத்தை குறிக்கும் ராகம். (இதற்காக இருமல் சூரண விளம்பரமெல்லாம் கரகரப்ரியா ராகமா என்று கேட்டு விடாதீர்கள்).

திரையிசையில் பிரபலமான இந்த ராகத்தில் உதாரணத்திற்காக "ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜகமே ஆடிடுதே" என்ற பாடலை எடுத்துக்கொள்வோம். தலைவனும் தலைவியும் உல்லாசமாகப் படகுச் சவாரி செய்து கொண்டு சல்லபமாய்ப் பாடுவது போன்று படமாக்கப்பட்ட பாடல். பாடலைக் கேட்கும்போதே நம் முன் காட்சி தோன்றுகிறது இல்லையா? மற்றொரு சந்தோஷத்தை குறிக்கும் ராகமான பிலஹரியில்தான் பாரதியார் "விடுதலை விடுதலை" என்று அரைக்கூவலிட்ட பாடலை மெட்டமைத்திருந்தார்.

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்கள் வெவ்வேறு சூழ்ந்¢லைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவே? அப்படியெனில், நாம் முன்பு கூறியது தவறென்றல்லவா ஆகிறது? ஒன்று செய்யுங்கள், உங்கள் வீட்டு அம்மையாரையும் அடுத்த வீட்டு அம்மையாரையும், ஒரே விதமான சாமான்களைக் கொடுத்து எதேனும் ஒரு பதார்தத்தைச் செய்யச் சொல்லுங்கள். வெகு நிச்சயமாகக் கூறுகிறேன், இரண்டிற்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களையாவது கூறிவிடலாம். அதே போலத்தான், ஒரு ராகம் என்பது ஸ்வரங்களின் கூட்டமைப்பு. ஒரு ராகத்தைப் பாடும்போது அவரவர் விருப்பம் போல ஸ்வரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதாவது அவரவர் கற்பனைக்கேற்ப வெவ்வேறு முறைகளில் ஸ்வரங்களைக் கோர்க்கலாம். அப்படி பல வகையான ஸ்வரக் கோர்ப்புகளின் பெயரே "பிரயோகங்கள்". ஒரே ராகத்தின் வெவ்வேறு பிரயோகங்கள் வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடும். இதுவே ஒரே ராகத்தில் அமைந்த இரு பாடல்கள் நமக்கு வித்தியசமாய் ஒலிக்கக் காரணம். இதுவரை உபயோகப்படுத்தப்படாத எத்தனையோ பிரயோகங்கள் இன்னும் இருப்பதால்தான் புதிது புதிதாகப் பல பாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

(தொடரும்)

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.