http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 6
இதழ் 6 [ ஜனவரி 15 - ஃபிப்ரவரி 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
20 நாட்களுக்கு முன்பு வரை இப்படி ஒரு வார்த்தை இருப்பதே நமக்குத் தெரியாது. இன்று 'சுனாமி பற்றிய தகவல் இல்லாத பத்திரிகையோ, தொலைக்காட்சி சானலோ இல்லை' என்று சொல்லும் அளவிற்கு இந்த வார்த்தை ஒரு பெரிய பாதிப்பையே உண்டு பண்ணி விட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? சுனாமி என்ற வார்த்தை வேண்டுமென்றால் நமக்குப் புதியதாக இருக்கலாம். ஆனால் முன்பு தமிழ்நாடு சுனாமியைக் கண்டதேயில்லை என்று சொல்வதற்கில்லை. பல கடலோர நகரங்களைக் கடல் கொண்டுவிட்டது என்று நாம் படித்திருக்கிறோம். நாகப்பட்டினம் - இந்த சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட இடம். முன்பே நாகப்பட்டினத்தின் ஒரு பகுதி, அங்கே இருந்த சூடாமணி விஹாரம், இவற்றை கடல் கொண்டுவிட்டது. இப்படி ஒரு கட்டடமே முழுகும் அளவிற்குக் கடல் பொங்கியிருக்கிறது என்றால், அது இப்பொழுது வந்தது போல் பல வருடங்களுக்கு முன்பு வந்த சுனாமி ஏற்படுத்திய பாதிப்பாகத்தான் இருக்க முடியும். அப்பப்பா! இந்த சுனாமி வந்த ஒரு நாளிலேயே, ஒரு நாள் என்ன சில மணி நேரங்களிலேயே எத்தனை பெரிய பாதிப்பை, இழப்பை உண்டாக்கியிருக்கிறது. பல உயிர்களைக் கொள்ளை கொண்டு, பல குழந்தைகளை அனாதையாக்கி, பல வீடுகளையும் தரைமட்டமாக்கிய இந்த சுனாமி பற்றி எழுத இந்த தலையங்கம் போதாது. இந்த மிகப்பெரிய துன்பத்திலும் சிறிது ஆசுவாசம் தரும் செய்தி என்னவென்றால், அது பல இளைஞர்களும், பல்வேறு தரப்பினரும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற இழுத்துப்போட்டுக் கொண்டு செய்த உதவிகள் பற்றியதேயாகும். மனிதாபிமானம் என்ற ஒன்று இன்றும் உயிருடன் தான் இருக்கிறது என்று விளங்க வைத்துவிட்டது. எவ்வªவு அலுவர்கள் தமது அலுவலை விட்டு விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஓடோடியும் சென்றனர்! நிறுவனங்களும் ஸ்தாபனங்களும் அறிவித்திருந்த சுனாமி நிவாரண நிதிக்குத் திரண்ட நிதி தான் எவ்வளவு! ஆனால் இவ்வளவு இருந்தும் என்ன? எவ்வளவு நிதி திரண்டால் என்ன? அவையெல்லாம் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாய்ச் சென்றடையுமா என்றால், இல்லை என்பதுதான் நிதர்சனமாய் தெரிந்த உண்மையாகிவிட்டதே. மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களாலேயே இந்த நிதி சுரண்டப்படுவது கொடுமையிலும் கொடுமை. நாம் இவ்வுலகை விட்டு செல்லும் பொழுது எதையம் தூக்கிக் கொண்டு செல்லப்போவது இல்லை. சுனாமி அலைகள் வந்து தாக்கியபொழுது, பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் காட்டியதா? அலைகளில் சிக்குண்டவர்களுக்கு, தம்மிடம் இருந்த பொருட்களை, செல்வத்தைப் பற்றிய சிந்தனை துளியேனும் எழுந்திருக்குமா? உயிர் ஒன்று தானே பிரதானமாக இருந்திருக்கும். பணத்தைச் சுரண்டி, சொகுசு வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் இதையெல்லாம் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்தால், தாம் செய்யும் காரியத்தின் அறிவீனம் புலப்படும். சமுதாயத்தில் ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், சமுதாயத்தில் உள்ள அனைவருமே நன்றாக, நிம்மதியாக இருந்தால் தான் முடியும். "தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாரதி பாடியதற்கு அர்த்தம் இருக்கிறது. கடலில் ஏதோ ஒரு மூலையில் ஏற்பட்ட பூகம்பம் எப்படிப் பல நாடுகளையும் தாக்கி அழிவை ஏற்படுத்திவிட்டதோ, அப்படித்தான் சமுதாயத்தில், ஒரு மூலையில் நடக்கும் சிறு கொந்தளிப்பு கூட அங்கு உள்ள அனைவரையுமே பாதிக்கச் செய்கிறது. ஆகையினால், நம் சமுதாயம், நம் நாடு, இந்த உலகு என்று எங்கும் என்றும் மகிழ்ச்சியே நிலைத்திருக்க, நாம் இறைவனை பிரார்த்திப்போம். இந்த சுனாமி போல் நாசம் விளைவிக்கும் இயற்கை சீற்றங்களைத் தடுப்பது நம் கையில் இல்லை. ஆனால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நம்மை ஓரளவு பாதுகாத்துக்கொள்ள முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் துன்பத்தையும் தணிக்க முடியும். ஆகையால் முன்னெச்சரிக்கையுடன் இருப்போம், உதவிகள் புரிவோம். அனைவரும் மகிழ்வோடு வாழ்வோம். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |