http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 6

இதழ் 6
[ ஜனவரி 15 - ஃபிப்ரவரி 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

சுனாமி
சுனாமி
கதை 4 - கபிலன்
தஞ்சையில் முப்பெரும் வரலாற்றுப் பெருவிழா - ஒரு அறிவிப்பு
மத்தவிலாசப் பிரகசனம் - 4
மன்றத்துப் புன்னையும் மாமனிதர் அப்பரும்
தமிழ்மொழி வளர்ச்சியில் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பங்களிப்பு
கல்வெட்டாய்வு - 5
கட்டடக்கலை ஆய்வு - 6
இராஜசிம்மன் இரதம்
Architectural traditions and innovations of Tamils
திருவையாறு தியாகராஜ உத்சவம்
சங்கச்சாரல் - 6
இதழ் எண். 6 > கதைநேரம்
தஞ்சையில் முப்பெரும் வரலாற்றுப் பெருவிழா - ஒரு அறிவிப்பு
ஆசிரியர் குழு

நேயர்களுக்கு வணக்கம்.

சென்ற இதழில் குறிப்பிட்டது போல் வரலாறு.காம் அரையாண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டும் திருச்சி மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் வழங்கும் அமரர் கூ.ரா.சீனிவாசன் நினைவு அறக்கட்டளைப் பொழிவை வழங்கும் முகமாகவும் டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் புதிய புத்தகத்தை வெளியிடும் நிகழ்வாகவும் ஒரு முப்பெரும் வரலாற்றுப் பெருவிழா தஞ்சை இராஜராஜீஸ்வரத்தில் ஏற்பாடாகி இருக்கிறது. இவ்விழாவைக் கொண்டாடச் சோழர் கலைப் பெட்டகமாம் இராஜராஜீஸ்வரத்தினும் சிறந்த வளாகத்தைக் காண்பது எங்ஙனம்? விழாவை அங்கு நடத்திக்கொள்ள அனுமதியளித்த மத்திய அரசின் தொல்பொருள் துறைக்கு(Archaeological Survey of India) மிகுந்த நன்றிக் கடப்பாடுடையவர்கள் ஆகிறோம்.

விழா நிகழ்ச்சி நிரல்

நாள் : ஜனவரி 30, 2005 (தை மாதம் 16ம் தேதி) காலை.

இடம் : தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் புதிய அலுவலக வளாகம், தஞ்சை பெரிய கோயில்.

10:00தமிழ்த்தாய் வாழ்த்துசெல்வி. இரா. இலலிதாம்பாள்
செல்வி. மா. இலாவண்யா
10:05வரவேற்புரை திரு. சு. கிருபாஷங்கர்
10:30பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும் - புத்தக வெளியீடு
வெளியிடுபவர்திரு. த. பரமநாதன்
முதல் பிரதி பெறுபவர்கள்திரு. சுந்தர் பரத்வாஜ்
திரு. மரு. சு. நரேந்திரன்
திரு. மரு. சு. பழனியாண்டி
செல்வி. இரா. இலலிதாம்பாள்
10:35வரலாறு.காம் - இராஜராஜீசுவரம் சிறப்பிதழ் வெளியீடு
இணையத்தளம் அறிமுகம்திரு. தி. ம. இராமச்சந்திரன்
வெளியிடுபவர்முனைவர். சு. இராஜவேலு
முதல் பிரதி பெறுபவர்கள்முனைவர். மா. ரா. அரசு
முனைவர். அர. அகிலா
10:40பழங்கால ஓவியங்களின் பதிவும் மீட்டுருவாக்கமும் - சிக்கல்கள், தீர்வுகள் - அமரர். கூ. இரா. சீனிவாசன் அறக்கட்டளைப் பொழிவு
அறிமுகம்முனைவர். இரா. கலைக்கோவன்
சொற்பொழிவுதிரு. சே. கோகுல்
11:45வாழ்த்துரைமுனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன்
11:55நன்றியுரைமுனைவர். மு.நளினி

இந்த முப்பெரும் விழாவிற்குத் தாங்களும் தங்கள் சுற்றமும் வரலாற்றியலில் ஆர்வம் கொண்ட நண்பர்களுடன் வந்து கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுமென்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம். நிகழ்ச்சிகள் அனைத்தும் எத்தனை சுவையுடையதாய் இருக்கப்போகிறது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. தமிழகத்தின் முதுபெரும் ஆய்வாளர்கள் மூவரையும் ஒரே அரங்கில் - அதிலும் தஞ்சை இராஜராஜீஸ்வரத்தில் - சந்திப்பது எத்தனை அரிதான விஷயம்! நிகழ்ச்சியின் முடிவில் நேரமிருந்தால் ஆய்வாளர்களுடன் இராஜராஜீஸ்வரத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் உள்ளது.

அமரர் கூ.ரா.சீனிவாசன் அறக்கட்டளைப் பொழிவு "பண்டைய ஓவியங்களின் பதிவும் மீட்டுருவாக்கமும் - சிக்கல்கள் தீர்வுகள்" என்னும் தலைப்பில் அமையவிருக்கிறது. இதில் பண்டோவியங்களின் டிஜிட்டல் முறை பதிவாக்கத்தையும்(Digital Archiving) கணினி மென்பொருளின் உதவியுடன் புரியக்கூடிய மீட்டுருவாக்கத்தையும் (Digital Art Restoration) நமது குழு உறுப்பினர் விளக்க இருக்கிறார். இதில் அரிய சோழர்கால ஓவியங்களை மீட்டுருவாக்கம் செய்து காண்பிக்க இருக்கிறோம். ஆக நிகழ்ச்சிகள் அனைத்துமே விறுவிறுப்பாக அமையப்போகின்றன என்பதில் ஐயமில்லை.

விழாவில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நேயர்கள் அனைவரும் ஜனவரி காலை 9.30 மணி வாக்கில் தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்திற்குள் வந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். அங்குள்ள அறிவிப்புப் பலகைகள் நமது நிகழ்ச்சி நடக்கும் இடத்தை உங்ளுக்குத் தெரியப்படுத்தும். இதற்கான தொடர்புத் தொலைபேசி எண்கள் வேண்டுமெனில் editor@varalaaru.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிடுங்கள்.

நேயர்கள் அனைவரும் இந்த அரிய விழாவில் தவறாமல் கலந்துகொண்டு நமது முயற்சியினைச் சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

வணக்கம்.

ஆசிரியர் குழு

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.